»   »  ஜீவி பிலிம்சின் மோதிர குட்டு !

ஜீவி பிலிம்சின் மோதிர குட்டு !

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ்த் திரையுலகின் 75வது ஆண்டு விழாவையொட்டி ஜீவி பிலிம்ஸ் நிறுவனம் அதை வித்தியாசமாக கொண்டாடியது.

தமிழ்த் திரையுலகுக்கு வயது 75. இதையொட்டி சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் அரங்கில் தமிழ் சினிமா -75 என்ற கண்காட்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியின்போது ஜீவி பிலிம்ஸ் நிறுவனம் ஒரு வித்தியாசமான கொண்டாட்டத்தை நடத்தியது.

தமிழ்த் திரையுலகில் சிறப்பாக பணியாற்றிய75 மூத்த கலைஞர்கள், திரைப்பட பத்திரிக்கையாளர்கள், பி.ஆர்.ஓ.க்கள், ஃபெப்சி ஊழியர்கள்ஆகியோரை தேர்ந்தெடுத்து ஒவ்வொருவருக்கும் ஒரு மோதிரத்தைக் கொடுத்து கெளரவித்தனர்.

ஜீவி பிலிம்ஸ் நிறுவனத்தின் தலைவரான மகாதேவன் கணேசன், நிர்வாக இயக்குநர் வெங்கட்ரமணி ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளைசெய்திருந்தனர்.

இந்த மோதிரம் வழங்கும் நிகழ்ச்சியில் இயக்குநர்கள் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், சேரன், எழுத்தாளர் ஜெயகாந்தன் உள்ளிட்ட பலபிரபலங்களும் கலந்து கொண்டனர்.

மோதிரக் கையால் குட்டு வாங்கினால் நல்லது என்பார்கள். ஆனால் மோதிரங்களைக் கொட்டிக் கொடுத்துள்ளது ஜீவி பிலிம்ஸ்.

ஜீ.வி. பிலிம்சின் நிறுவனர் ஜீ.வெங்கடேஸ்வரன், இயக்குனர் மணிரத்னத்தின் அண்ணன் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கந்து வட்டி கும்பலிடம்சிக்கி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டவர். இவரது சினிமா தொழிலை அவரது நிர்வாகிகளும் நண்பர்களும் தொடர்ந்து நடத்திவருகின்றனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil