»   »  பிப்ரவரியில் 19 படங்கள்!

பிப்ரவரியில் 19 படங்கள்!

Subscribe to Oneindia Tamil

இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் கோலிவுட்டில் இருந்து 19 புதிய படங்கள் வெளியாக இருக்கின்றன.

பொங்கல் தினத்தன்று நிறையப் படங்கள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போக்கிரி, தாமிரபரணி, ஆழ்வார், டப்பிங் குருஆகியவை மட்டுமே வெளிவந்தன.

இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. அஜீத், விஜய், விஷால் படங்கள் நன்றாக ஓடும் என்பதால் தங்களது படங்களை தள்ளி வைக்க சிலதயாரிப்பாளர்கள் முடிவு செய்தனர். பருத்தி வீரன் போன்றப் படங்களுக்கு பணச் சிக்கல் இருந்தது.

இந் நிலையில் இந்த மாதம் கிட்டத்தட்ட 19 படங்கள் திரைக்கு வருகின்றன. காதலர் தினத்தை மையமாக வைத்து இந்தப் படங்கள்வெளியிடப்படவுள்ளன.

இவற்றில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக பொறி உள்ளது. ஜீவா வித்தியாசமான வேடம் ஏற்று நடித்துள்ள படம். திருடா திருடி இயக்குநர்சுப்ரமணியம் சிவா இயக்கியுள்ளார். ஜீவாவின் ஜோடி பூஜா. இன்று இப்படம் ரிலீஸானது.

அடுத்த எதிர்பார்ப்புப் படம் தீபாவளி. இயக்குனர் லிங்குசாமி துவக்கியுள்ள திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனத்திற்காக எழில் இயக்கியுள்ளார்.ஜெயம் ரவி, பாவனா, நடித்துள்ளனர்.

சத்யராஜ் தனது மகன் சிபிராஜை ஹீரோவாகப் போட்டு தயாரித்துள்ள சொந்த படமான "லீ படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கொக்கி படஇயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ளார். நிலாதான் சிபிக்கு இதில் ஜோடி.

ஒளிப்பதிவாளர் ஜீவா மீண்டும் இயக்குனராக களமிறங்கும் "உன்னாலே உன்னாலே படமும் எதிர்பார்க்கப்படுகிறது. சதா, கஜோல் தங்கச்சிதனிஷா ஜோடி போட்டுள்ளனர்.

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை கூறும் ஞானராஜசேகரனின் பெ>யார் படமும் இம்மாத ரிலீஸ் பட்டியலில் உள்ளது. பெரும்எதிர்பார்ப்புடன் இப்படம் உள்ளது.

கெளதம் இயக்கத்தில், சரத்குமார், ஜோதிகா, ஆண்ட்ரியா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள பச்சைக்கிளி முத்துச்சரமும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

டி.ராஜேந்தரின் வீராசாமியும் முக்கியப் படங்களில் ஒன்று. இதில் மும்தாஜ், மேக்னா நாயுடு நடித்துள்ளனர். காதலை புதிய கோணத்தில்சொல்லியுள்ளேன் என்கிறார் ராஜேந்தர்.

மும்தாஜுடன் அட்டகாசமாக டூயட்டும் பாடியுள்ளார். குண்டாந் தடியுடன், முரட்டு ஜீன்ஸ் அணிந்து அவர் கொடுத்துள்ள விளம்பர போஸ்கள்கலக்கி வருகின்றன. 1ம் தேதி இப்படம் ரிலீஸானது.

சத்யராஜ், சுந்தரா டிராவல்ஸ் ராதா நடித்துள்ள அடாவடி படமும் இந்த மாதமே திரைக்கு வருகிறது. பரத் ஹன்னா இயக்கியுள்ளார்.

இதுதவிர எஸ்.ஜே.சூர்யாவின் திருமகன், பரத், பாவனா, சந்தியாவின் கூடல் நகர், ஓரம்போ, முனி, சொல்லி அடிப்பேன், கண்ணும் கண்ணும்,தூவானம், காசு இருக்கணும், ஜோதிகாவின் சூப்பர் நடிப்பில் உருவாகியுள்ள மொழி, விஜயகாந்த்தின் சபரி, பருத்தி வீரன் ஆகிய படங்களும்ரிலீஸாகும் எனத் தெரிகிறது.

பெரும்பாலான படங்கள் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. சமீப காலத்தில் ஒரே மாதத்தில் இவ்வளவுபடங்கள் ரிலீஸாவது பெரிய ரெக்கார்ட் என்கிறார்கள்.

எண்ணிக்கையா முக்கியம்? இதுல எத்தனை ஓடுமோ, எத்தனை ஊருமோ..

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil