twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமா 2005: ஒரு பார்வை தமிழ் சினிமாவுக்கு 2005ம் ஆண்டு ஒரு திருப்புமுனை ஆண்டு என்றே சொல்லலாம். புதுப்புது நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் என இளமைப் பட்டாளம் புகுந்து புதிய கதைகள் மூலம் சினிமாவை புதிய பாதைக்குக் கொண்டு போயின.ரஜினியின் சந்திரமுகி பல ரெக்கார்டுகளை பிரேக் செய்து வசூலைக் கொட்டித் தீர்த்துவிட்டது. யாரும் எதிர்பாராத வகையில் காதல்பெரும் வெற்றி பெற்றது. மன்மதன் பெரும் சாதனை படைத்தது. அந்நியன் சினிமாவைப் புரட்டிப் போட்டது.2005ம் ஆண்டில் தமிழ் திரையுலகின் முக்கிய புள்ளி விவரங்கள்:தமிழில் இந்த ஆண்டில் மொத்தம் 126 படங்கள் வெளியாயின. இதில் நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 100, டப்பிங்படங்கள் 26. இதில் பெரும்பாலானவை ஆங்கிலம், தெலுங்கில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டவை.அதிக படங்களில் நடித்தவர்கள்:இந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த ஹீரோ சத்யராஜ் தான். கதாநாயகனாக 6 படங்களில் நடித்துள்ளார். அடுத்த 2வருடத்துக்கு இவரது கால்ஷீட் புல் ஆக இருக்கிறதாம். ஒன்றரை மாதத்துக்கு ஒரு படம் என்ற ரேஞ்சில் வரும் ஆண்டில் நடிக்கப்போகிறாராம்.ஆசின்-நமீதா: அதே போல அதிகமான பட ஹீரோயின்கள் இரண்டு பேர். ஒருவர் ஆசின். இந்த ஆண்டில் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும்நடித்துவிட்டார். அடுத்து அதிகப் படங்களில் நடித்தவர் நமிதா தான். இருவருமே தலா 4 படங்களில் நடித்துள்ளனர். இந்த ஆண்டில் மிக அதிகமான படங்களில் நகைச்சுவை வேடம் செய்தவர் வடிவேலு. அவர் நடித்து வெளியான மொத்தப்படங்கள் 28. ஒரு படத்துக்கு ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கும் வடிவேலுக்கு கால்ஷீட் தர நேரம் இல்லை. இதனால் ஒருநாளைக்கு இவ்வளவு, ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு என்ற ரேஞ்சுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்.இந்த ஆண்டில் அதிகப் படங்களைத் தயாரித்தவர் கலைப்புலி எஸ். தாணு. மொத்தம் 3 படங்களை வெளியிட்டார்.அதிக படங்களை இயக்கியவர் கற்பு குஷ்புவின் கணவரான சுந்தர். இயக்கியது 3 படங்கள்.அதிகமான படங்களுக்கு இசை அமைத்தவர் தேவாவே தான். மொத்தம் 8 படங்கள். அதிக பாடல்களை எழுதியவர் கவிஞர் பா.விஜய். மொத்தம் 42 பாடல்கள்.அதிக பாடல்களைப் பாடியவர்கள் பாடகர் கார்த்திக்கும், பாடகி அனுராதா ஸ்ரீராமும். கார்த்திக் 30 பாடல்களைப் பாடியுள்ளார்.அனுராதா 23 பின்னணிப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.அதிகமா படங்களுக்கு நடனம் அமைத்தவர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர். மொத்தம் 22 படங்கள்.அதே போல அதிகமான படங்களுக்கு (மொத்தம் 14) சண்டைக் காட்சிகளை அமைத்தவர் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன்.ஜூப்ளி படங்கள்:சந்திரமுகி- 300வது நாளை நோக்கி ஓடி கொண்டிருக்கிறதுமன்மதன்- 225 நாள்திருப்பாச்சி, சச்சின் -200 நாள்மதுர-150 நாள்அறிந்தும் அறியாமலும்-141 நாள்அந்நியன்-125 நாள்காதல்- 122 நாள்100 நாள் ஓடிய படங்கள்:எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி7ஜி ரெயின்போ காலனிஇங்கிலீஷ்காரன்கனா கண்டேன்உள்ளம் கேட்குமேஏய்ராம்ஐயாஇந்த ஆண்டில் தான் இயக்குனர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, நடிகர் கமலஹாசன், இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா,குமாரி கலா ஆகியோர் டாக்டர் பட்டம் பெற்றனர்.

    By Staff
    |

    தமிழ் சினிமாவுக்கு 2005ம் ஆண்டு ஒரு திருப்புமுனை ஆண்டு என்றே சொல்லலாம். புதுப்புது நடிகர்கள், நடிகைகள்,இயக்குனர்கள் என இளமைப் பட்டாளம் புகுந்து புதிய கதைகள் மூலம் சினிமாவை புதிய பாதைக்குக் கொண்டு போயின.

    ரஜினியின் சந்திரமுகி பல ரெக்கார்டுகளை பிரேக் செய்து வசூலைக் கொட்டித் தீர்த்துவிட்டது. யாரும் எதிர்பாராத வகையில் காதல்பெரும் வெற்றி பெற்றது. மன்மதன் பெரும் சாதனை படைத்தது. அந்நியன் சினிமாவைப் புரட்டிப் போட்டது.

    2005ம் ஆண்டில் தமிழ் திரையுலகின் முக்கிய புள்ளி விவரங்கள்:


    தமிழில் இந்த ஆண்டில் மொத்தம் 126 படங்கள் வெளியாயின. இதில் நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 100, டப்பிங்படங்கள் 26. இதில் பெரும்பாலானவை ஆங்கிலம், தெலுங்கில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்டவை.

    அதிக படங்களில் நடித்தவர்கள்:

    இந்த ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த ஹீரோ சத்யராஜ் தான். கதாநாயகனாக 6 படங்களில் நடித்துள்ளார். அடுத்த 2வருடத்துக்கு இவரது கால்ஷீட் புல் ஆக இருக்கிறதாம். ஒன்றரை மாதத்துக்கு ஒரு படம் என்ற ரேஞ்சில் வரும் ஆண்டில் நடிக்கப்போகிறாராம்.

    ஆசின்-நமீதா:


    அதே போல அதிகமான பட ஹீரோயின்கள் இரண்டு பேர். ஒருவர் ஆசின். இந்த ஆண்டில் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும்நடித்துவிட்டார். அடுத்து அதிகப் படங்களில் நடித்தவர் நமிதா தான். இருவருமே தலா 4 படங்களில் நடித்துள்ளனர்.

    இந்த ஆண்டில் மிக அதிகமான படங்களில் நகைச்சுவை வேடம் செய்தவர் வடிவேலு. அவர் நடித்து வெளியான மொத்தப்படங்கள் 28. ஒரு படத்துக்கு ரூ. 20 லட்சம் வரை சம்பளம் வாங்கும் வடிவேலுக்கு கால்ஷீட் தர நேரம் இல்லை. இதனால் ஒருநாளைக்கு இவ்வளவு, ஒரு மணி நேரத்துக்கு இவ்வளவு என்ற ரேஞ்சுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறார்.

    இந்த ஆண்டில் அதிகப் படங்களைத் தயாரித்தவர் கலைப்புலி எஸ். தாணு. மொத்தம் 3 படங்களை வெளியிட்டார்.


    அதிக படங்களை இயக்கியவர் கற்பு குஷ்புவின் கணவரான சுந்தர். இயக்கியது 3 படங்கள்.

    அதிகமான படங்களுக்கு இசை அமைத்தவர் தேவாவே தான். மொத்தம் 8 படங்கள். அதிக பாடல்களை எழுதியவர் கவிஞர் பா.விஜய். மொத்தம் 42 பாடல்கள்.

    அதிக பாடல்களைப் பாடியவர்கள் பாடகர் கார்த்திக்கும், பாடகி அனுராதா ஸ்ரீராமும். கார்த்திக் 30 பாடல்களைப் பாடியுள்ளார்.அனுராதா 23 பின்னணிப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

    அதிகமா படங்களுக்கு நடனம் அமைத்தவர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர். மொத்தம் 22 படங்கள்.


    அதே போல அதிகமான படங்களுக்கு (மொத்தம் 14) சண்டைக் காட்சிகளை அமைத்தவர் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன்.

    ஜூப்ளி படங்கள்:

    சந்திரமுகி- 300வது நாளை நோக்கி ஓடி கொண்டிருக்கிறது

    மன்மதன்- 225 நாள்

    திருப்பாச்சி, சச்சின் -200 நாள்

    மதுர-150 நாள்

    அறிந்தும் அறியாமலும்-141 நாள்

    அந்நியன்-125 நாள்

    காதல்- 122 நாள்

    100 நாள் ஓடிய படங்கள்:

    எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி

    7ஜி ரெயின்போ காலனி

    இங்கிலீஷ்காரன்

    கனா கண்டேன்

    உள்ளம் கேட்குமே

    ஏய்

    ராம்

    ஐயா

    இந்த ஆண்டில் தான் இயக்குனர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, நடிகர் கமலஹாசன், இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா,குமாரி கலா ஆகியோர் டாக்டர் பட்டம் பெற்றனர்.

      Read more about: review of tamil cinema 2005
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X