»   »  மலையாளத்தில் கலக்கும் தமிழ் சினிமா! தேசம் கடந்தும் கலக்கி வரும் தமிழ்ப் படங்கள் சத்தமே போடாமல் பக்கத்து மாநிலமான கேரளாவில் கும்கலக்கு கலக்கி வருகின்றன. நேரடி மலையாளப் படங்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில் தமிழ் படங்கள் கேரளாவில் வசூலைவாரிக் குவித்துக் கொண்டிருக்கின்றனவாம். தமிழ் படங்கள் கேரளாவில் ரிலீஸாவதும், வெற்றிகரமாக ஓடுவதும்புதிய விஷயமல்ல.ஒரு காலத்தில் கமல்ஹாசனின் தமிழ்ப் படங்கள் தான் கேரளாவில் வசூலை வாரிக் குவித்தன. அடுத்து ரஜினிகாந்த்தின் படங்களுக்கும் மலையாள மக்களிடையே வரவேற்பு கிடைத்தது. பாலச்சந்தர், பாரதிராஜா,பாலுமகேந்திரா போன்ற பிரபலங்களின் படங்களும் நன்றாக ஓடின. இப்படி செலக்டிவ்வாக சக்ஸஸ் ஆகி வந்தனதமிழ்ப் படங்கள்.ஆனால் இன்றோ நிலைமை தலை கீழாகியுள்ளது. புத்தம் புது தமிழ்ப் படங்கள் அத்தனையும் கேரளாவில சக்கைபோடு போடுகின்றன. குறிப்பாக இளம் நடிகர்களின் படங்களுக்கு அங்கு செம வரவேற்பாம்.கடந்த ஆண்டு வெளியான அந்நியன் படம் கேரளாவில் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டது. நூறு நாட்கள்ஓடி, ரூ.2 கோடியே 50 லட்சம் வசூலித்தது. இதையடுத்து விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, சூர்யா நடித்தகஜினி ஆகிய படங்கள் ரூ.1 கோடிக்கு மேல் அள்ளின.இப்படங்களைத் தொடர்ந்து இந்த ஆண்டில் வெளியான பாரிஜாதம் படத்துக்கு பலமான வரவேற்பாம்.பாக்யராஜூக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் இருப்பதால் இப்படம் அங்கு அதிக வசூல் ஆனாது. பாக்யராஜின்மகள் சரண்யாவுக்கு ரசிகர்கள் இடையே நல்ல ரெஸ்பான்ஸாம். மேலும் இதில் நடித்த ஹீரோ பிரிதிவிராஜ்மலையாளி என்பதும், அவருக்கு அங்கு ஏகப்பட்ட ரசிகைகள் இருப்பதம் குறிப்பிடத்தக்கது.இதைப் பார்த்த சில மலையாளப் படத் தயாரிப்பாளர்கள் நேரடியாக மலையாளத்தில் நடிக்க சரண்யாவைஅணுகியுள்ளனராம்.இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி, த்ரிஷா நடித்த உனக்கும் எனக்கும், கமலஹாசன், ஜோதிகா நடித்தவேட்டையாடு விளையாடு ஆகிய படங்கள் ரூ. 50 லட்சத்துக்கு மேல் வசூலித்தது என கூறப்படுகிறது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல மலையாளப் படங்கள் திரைக்கு வந்துள்ளன. அப்படங்களுடன்வேட்டையாடு விளையாடு படமும் திரையிடப்பட்டது. மலையாளப் படங்களுக்கு நிகராக பல பெரியதியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.வழக்கமாக கமலுக்கு மலையாள தேசம் நல்ல வரவேற்பு கொடுக்கும். எனவே இப்படமும் வசூலில்வேட்டையாடும் என நம்புகிறார்கள்.மலையாளப் படங்களுக்கு இணையாக தமிழ்ப் படங்கள் நேரடியாக கேரளாவில் கலக்குவது குறித்துதயாரிப்பாளர் கே.ராஜன் கூறும் போது, மலையாளத்தில் ஆக்ஷன் கலந்த மசாாலாப் படங்கள் குறைவு. இதனால்தான் தமிழ்ப் படங்களுக்கு மவுசு உள்ளது. தொழில் நுட்பத்திலும் பிரமாண்டத்திலும் தமிழ்ப் படங்கள் சிறப்பாகஉள்ளதால் (நம் ஊர் பாடல்களுக்கு செலவிடும் தொகையிலேயே மலையாளத்தில் படமே எடுத்துமுடித்துவிடுவார்கள்) கேரள மக்கள் நம் படங்களை பார்க்க விரும்புகின்றனர்.இதனால் தமிழ்ப் படங்களுக்கு அங்கு பிரின்ட்டுகளும் அதிகம் போடுகின்றனர். இதுதான் தமிழ்ப் படங்கள்கேரளாவில் வெற்றி பெற முக்கியக் காரணம் என்கிறார்.அத்தோடு, தமிழ்ப் பட பாடல்களுக்கும் மலையாளிகளிடையே எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும்.மலையாள டிவி சேனல்களில் இசை நிகழ்ச்சிகளில் பாடப்படும் பெரும்பாலான பாடல்கள் தமிழ்ப் பாடல்கள் தான்என்பது குறிப்பிடத்தக்கது. இசையும், பாடலும், கூத்தும், கொண்டாடமும்மாக தமிழ்ப் படங்கள் இருப்பதால்,மனம் விட்டு ரசித்து மகிழ தமிழ்ப் படங்களுக்கும் அதிக அளவில் ரசிகர்கள் வருகிறார்கள்.

மலையாளத்தில் கலக்கும் தமிழ் சினிமா! தேசம் கடந்தும் கலக்கி வரும் தமிழ்ப் படங்கள் சத்தமே போடாமல் பக்கத்து மாநிலமான கேரளாவில் கும்கலக்கு கலக்கி வருகின்றன. நேரடி மலையாளப் படங்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில் தமிழ் படங்கள் கேரளாவில் வசூலைவாரிக் குவித்துக் கொண்டிருக்கின்றனவாம். தமிழ் படங்கள் கேரளாவில் ரிலீஸாவதும், வெற்றிகரமாக ஓடுவதும்புதிய விஷயமல்ல.ஒரு காலத்தில் கமல்ஹாசனின் தமிழ்ப் படங்கள் தான் கேரளாவில் வசூலை வாரிக் குவித்தன. அடுத்து ரஜினிகாந்த்தின் படங்களுக்கும் மலையாள மக்களிடையே வரவேற்பு கிடைத்தது. பாலச்சந்தர், பாரதிராஜா,பாலுமகேந்திரா போன்ற பிரபலங்களின் படங்களும் நன்றாக ஓடின. இப்படி செலக்டிவ்வாக சக்ஸஸ் ஆகி வந்தனதமிழ்ப் படங்கள்.ஆனால் இன்றோ நிலைமை தலை கீழாகியுள்ளது. புத்தம் புது தமிழ்ப் படங்கள் அத்தனையும் கேரளாவில சக்கைபோடு போடுகின்றன. குறிப்பாக இளம் நடிகர்களின் படங்களுக்கு அங்கு செம வரவேற்பாம்.கடந்த ஆண்டு வெளியான அந்நியன் படம் கேரளாவில் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டது. நூறு நாட்கள்ஓடி, ரூ.2 கோடியே 50 லட்சம் வசூலித்தது. இதையடுத்து விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, சூர்யா நடித்தகஜினி ஆகிய படங்கள் ரூ.1 கோடிக்கு மேல் அள்ளின.இப்படங்களைத் தொடர்ந்து இந்த ஆண்டில் வெளியான பாரிஜாதம் படத்துக்கு பலமான வரவேற்பாம்.பாக்யராஜூக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் இருப்பதால் இப்படம் அங்கு அதிக வசூல் ஆனாது. பாக்யராஜின்மகள் சரண்யாவுக்கு ரசிகர்கள் இடையே நல்ல ரெஸ்பான்ஸாம். மேலும் இதில் நடித்த ஹீரோ பிரிதிவிராஜ்மலையாளி என்பதும், அவருக்கு அங்கு ஏகப்பட்ட ரசிகைகள் இருப்பதம் குறிப்பிடத்தக்கது.இதைப் பார்த்த சில மலையாளப் படத் தயாரிப்பாளர்கள் நேரடியாக மலையாளத்தில் நடிக்க சரண்யாவைஅணுகியுள்ளனராம்.இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி, த்ரிஷா நடித்த உனக்கும் எனக்கும், கமலஹாசன், ஜோதிகா நடித்தவேட்டையாடு விளையாடு ஆகிய படங்கள் ரூ. 50 லட்சத்துக்கு மேல் வசூலித்தது என கூறப்படுகிறது.ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல மலையாளப் படங்கள் திரைக்கு வந்துள்ளன. அப்படங்களுடன்வேட்டையாடு விளையாடு படமும் திரையிடப்பட்டது. மலையாளப் படங்களுக்கு நிகராக பல பெரியதியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.வழக்கமாக கமலுக்கு மலையாள தேசம் நல்ல வரவேற்பு கொடுக்கும். எனவே இப்படமும் வசூலில்வேட்டையாடும் என நம்புகிறார்கள்.மலையாளப் படங்களுக்கு இணையாக தமிழ்ப் படங்கள் நேரடியாக கேரளாவில் கலக்குவது குறித்துதயாரிப்பாளர் கே.ராஜன் கூறும் போது, மலையாளத்தில் ஆக்ஷன் கலந்த மசாாலாப் படங்கள் குறைவு. இதனால்தான் தமிழ்ப் படங்களுக்கு மவுசு உள்ளது. தொழில் நுட்பத்திலும் பிரமாண்டத்திலும் தமிழ்ப் படங்கள் சிறப்பாகஉள்ளதால் (நம் ஊர் பாடல்களுக்கு செலவிடும் தொகையிலேயே மலையாளத்தில் படமே எடுத்துமுடித்துவிடுவார்கள்) கேரள மக்கள் நம் படங்களை பார்க்க விரும்புகின்றனர்.இதனால் தமிழ்ப் படங்களுக்கு அங்கு பிரின்ட்டுகளும் அதிகம் போடுகின்றனர். இதுதான் தமிழ்ப் படங்கள்கேரளாவில் வெற்றி பெற முக்கியக் காரணம் என்கிறார்.அத்தோடு, தமிழ்ப் பட பாடல்களுக்கும் மலையாளிகளிடையே எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும்.மலையாள டிவி சேனல்களில் இசை நிகழ்ச்சிகளில் பாடப்படும் பெரும்பாலான பாடல்கள் தமிழ்ப் பாடல்கள் தான்என்பது குறிப்பிடத்தக்கது. இசையும், பாடலும், கூத்தும், கொண்டாடமும்மாக தமிழ்ப் படங்கள் இருப்பதால்,மனம் விட்டு ரசித்து மகிழ தமிழ்ப் படங்களுக்கும் அதிக அளவில் ரசிகர்கள் வருகிறார்கள்.

Subscribe to Oneindia Tamil

தேசம் கடந்தும் கலக்கி வரும் தமிழ்ப் படங்கள் சத்தமே போடாமல் பக்கத்து மாநிலமான கேரளாவில் கும்கலக்கு கலக்கி வருகின்றன.

நேரடி மலையாளப் படங்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில் தமிழ் படங்கள் கேரளாவில் வசூலைவாரிக் குவித்துக் கொண்டிருக்கின்றனவாம். தமிழ் படங்கள் கேரளாவில் ரிலீஸாவதும், வெற்றிகரமாக ஓடுவதும்புதிய விஷயமல்ல.

ஒரு காலத்தில் கமல்ஹாசனின் தமிழ்ப் படங்கள் தான் கேரளாவில் வசூலை வாரிக் குவித்தன. அடுத்து ரஜினிகாந்த்தின் படங்களுக்கும் மலையாள மக்களிடையே வரவேற்பு கிடைத்தது. பாலச்சந்தர், பாரதிராஜா,பாலுமகேந்திரா போன்ற பிரபலங்களின் படங்களும் நன்றாக ஓடின. இப்படி செலக்டிவ்வாக சக்ஸஸ் ஆகி வந்தனதமிழ்ப் படங்கள்.

ஆனால் இன்றோ நிலைமை தலை கீழாகியுள்ளது. புத்தம் புது தமிழ்ப் படங்கள் அத்தனையும் கேரளாவில சக்கைபோடு போடுகின்றன. குறிப்பாக இளம் நடிகர்களின் படங்களுக்கு அங்கு செம வரவேற்பாம்.

கடந்த ஆண்டு வெளியான அந்நியன் படம் கேரளாவில் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டது. நூறு நாட்கள்ஓடி, ரூ.2 கோடியே 50 லட்சம் வசூலித்தது. இதையடுத்து விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, சூர்யா நடித்தகஜினி ஆகிய படங்கள் ரூ.1 கோடிக்கு மேல் அள்ளின.

இப்படங்களைத் தொடர்ந்து இந்த ஆண்டில் வெளியான பாரிஜாதம் படத்துக்கு பலமான வரவேற்பாம்.பாக்யராஜூக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் இருப்பதால் இப்படம் அங்கு அதிக வசூல் ஆனாது. பாக்யராஜின்மகள் சரண்யாவுக்கு ரசிகர்கள் இடையே நல்ல ரெஸ்பான்ஸாம். மேலும் இதில் நடித்த ஹீரோ பிரிதிவிராஜ்மலையாளி என்பதும், அவருக்கு அங்கு ஏகப்பட்ட ரசிகைகள் இருப்பதம் குறிப்பிடத்தக்கது.

இதைப் பார்த்த சில மலையாளப் படத் தயாரிப்பாளர்கள் நேரடியாக மலையாளத்தில் நடிக்க சரண்யாவைஅணுகியுள்ளனராம்.

இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி, த்ரிஷா நடித்த உனக்கும் எனக்கும், கமலஹாசன், ஜோதிகா நடித்தவேட்டையாடு விளையாடு ஆகிய படங்கள் ரூ. 50 லட்சத்துக்கு மேல் வசூலித்தது என கூறப்படுகிறது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல மலையாளப் படங்கள் திரைக்கு வந்துள்ளன. அப்படங்களுடன்வேட்டையாடு விளையாடு படமும் திரையிடப்பட்டது. மலையாளப் படங்களுக்கு நிகராக பல பெரியதியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.வழக்கமாக கமலுக்கு மலையாள தேசம் நல்ல வரவேற்பு கொடுக்கும். எனவே இப்படமும் வசூலில்வேட்டையாடும் என நம்புகிறார்கள்.

மலையாளப் படங்களுக்கு இணையாக தமிழ்ப் படங்கள் நேரடியாக கேரளாவில் கலக்குவது குறித்துதயாரிப்பாளர் கே.ராஜன் கூறும் போது, மலையாளத்தில் ஆக்ஷன் கலந்த மசாாலாப் படங்கள் குறைவு. இதனால்தான் தமிழ்ப் படங்களுக்கு மவுசு உள்ளது. தொழில் நுட்பத்திலும் பிரமாண்டத்திலும் தமிழ்ப் படங்கள் சிறப்பாகஉள்ளதால் (நம் ஊர் பாடல்களுக்கு செலவிடும் தொகையிலேயே மலையாளத்தில் படமே எடுத்துமுடித்துவிடுவார்கள்) கேரள மக்கள் நம் படங்களை பார்க்க விரும்புகின்றனர்.

இதனால் தமிழ்ப் படங்களுக்கு அங்கு பிரின்ட்டுகளும் அதிகம் போடுகின்றனர். இதுதான் தமிழ்ப் படங்கள்கேரளாவில் வெற்றி பெற முக்கியக் காரணம் என்கிறார்.

அத்தோடு, தமிழ்ப் பட பாடல்களுக்கும் மலையாளிகளிடையே எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும்.மலையாள டிவி சேனல்களில் இசை நிகழ்ச்சிகளில் பாடப்படும் பெரும்பாலான பாடல்கள் தமிழ்ப் பாடல்கள் தான்என்பது குறிப்பிடத்தக்கது. இசையும், பாடலும், கூத்தும், கொண்டாடமும்மாக தமிழ்ப் படங்கள் இருப்பதால்,மனம் விட்டு ரசித்து மகிழ தமிழ்ப் படங்களுக்கும் அதிக அளவில் ரசிகர்கள் வருகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil