»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாரதிராஜாவின் "கண்களால் கைது செய்" படத்தில் ஹீரோயினாக புக் செய்யப்பட்ட ரதி இப்போது அதில் நடிக்கவில்லையாம். வேறொரு புதுமுகத்தை புக்செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் பா.ராஜா.

பங்க்சுவாலிட்டி இல்லாத ரதியிடம் நடிப்புத் திறமையும் இல்லாத காரணத்தால் அவரை பாரதிராஜா நீக்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

இருந்தாலும் சில பலான படங்களில் ரதி நடித்துள்ளதாலேயே அவரை நீக்கி விட்டு வேறு நாயகிக்குத் தாவி விட்டார் பாரதிராஜா என்று"குசுகுசு"வென்று பேசிக் கொள்கிறார்கள்.

விஜய்யும் பிரியங்காவின் பிரியமும்

விஜய் என்ற பெயரைக் கேட்டாலே பிரியங்கா சோப்ராவின் முகம் அன்றலர்ந்த தாமரை போல மலர்ந்து விடுகிறதாம்.

"தமிழன்" படத்தில் நடித்த பிறகு விஜய்யுடன் ரொம்பவும் குளோஸாகி விட்டாராம் பிரியங்கா.

விஜய் போல நைஸ் மேனை இதற்கு முன் நான் பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு நெருக்கமான நட்பாம்.

அந்த நட்பின் அடையாளமாக இந்தியில் விஜய்க்கு வாய்ப்புகளும் தேடுகிறாராம். அந்த முயற்சியில் ஒரு டைரக்டரும் சிக்கி விட்டாராம். இனிமேல்தான்விஜய்யிடம் இதை சொல்லி சம்மதம் வாங்க வேண்டுமாம்.

டெய்ல் பீஸ்: அந்த ஹிந்திப் படத்தில் பிரியங்காதான் விஜய்க்கு ஜோடியாம்.

அடடா, இதுவல்லவோ நட்பு!

தொப்பையர் கிளப்பில் இன்னொரு நடிகை

தமிழ் திரையுலகின் தொப்பையர் கிளப்பில் இன்னும் ஒரு நடிகை உறுப்பினராக சேர்ந்துள்ளார்.

ஜோதிகா, மும்தாஜ், கிரண் வரிசையில் இப்போது விஜயலட்சுமியும் தொப்பையுடன் வலம் வருகிறார்.

பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவின் ஜோடியாக நடித்த இவருக்கு இப்போது சில வாய்ப்புகள் கிடைத்துள்ளன.சமீபத்தில் குணலுடன் நிலவினிலே படத்தில் நடித்துள்ளார்.

ஆனாலும், முன்னவர்கள் போல தொப்பை குறித்து அலட்சியமாக இல்லாமல், தொப்பையைக் குறைக்கும்வேலையில் இறங்கியுள்ளாராம் விஜயலட்சுமி.

முதல் கட்டமாக காலை உணவைக் கட் செய்து விட்டு விட்டாராம். தொடர்ந்து நொறுக்குத் தீனியையும் குறைத்துவிட்டாராம்.

கட்டுப்பாட்டுடன் இருந்தால் தொப்பையை சீக்கிரம் குறைத்து விட முடியும் என்று புன்னகைக்கிறார் விஜயலட்சுமி.

எதற்கும் தயார் விபா ரய்!

கோடம்பாக்கம் சந்தைக்கு புதுசா வந்திருக்கும் "பெங்களூர் ஐயிட்டம்" விபா ரய், எப்படி வேண்டுமானாலும் "நடிக்க"தயாராக இருக்கிறாராம்.

"மிஸ் பெங்களூர்" பட்டம் வென்ற விபா ரய், "கதாநாயகி" என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். கவர்ச்சிகாட்டுவீங்களா, லிப்ஸ் டு லிப்ஸ் கொடுப்பீங்களா, ஆடைத் தள்ளுபடி உண்டா என்ற கேள்விகளுக்கெல்லாம்அவருடைய ஒரே பதில் - ""ரசிகர்களின் விருப்பமே என் விருப்பம்"".

இப்படித்தான் நடிப்பேன் என்று சொல்ல மாட்டேன். ரசிகர்கள் எப்படி விரும்புகிறார்களோ அப்படி நடிப்பேன்.கவர்ச்சி வேண்டும் என்று அவர்கள் விரும்பினால் அதை தர மாட்டேன் என்று எப்படிச் சொல்ல முடியும்? அதுதப்பில்லையா என்று கேட்டு நம்மைக் கிளுகிளுப்பாக்குகிறார்.

நல்லா பேசும் விபா ரய் கோலிவுட்டில் விலை போவாரா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil