எனக்கு மன நிம்மதியை கொடுக்கிற ஒரே விஷயம் சினிமா தான்.. நடிகர் கார்த்தி

சென்னை : நடிகர் கார்த்தி எப்போதும் புதுப்புது இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டவர்

அந்த வகையில் இப்போது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் எனக்கு மன நிம்மதியை கொடுக்குற ஒரே விஷயம் சினிமா தான் என ஆணித்தரமாக பேசியுள்ளார்.

பிரம்மிக்க வைத்தார்

பிரம்மிக்க வைத்தார்

அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. முதல் படத்திலேயே அனைவரையும் பிரம்மிக்க வைத்த கார்த்தியின் நடிப்பு அடுத்தடுத்த படங்களிலும் பிரமிக்க வைத்தது. மற்ற ஹீரோக்கள் இடம் இருந்து சற்று வித்தியாசமாக யோசிக்கும் கார்த்தி புதுப்புது இயக்குநர்களுடன் குறிப்பாக அறிமுக இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்ற வேண்டுமென ஆர்வம் கொண்டவர். பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை, பையா,சகுனி என வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்தி ரீமேக் படங்களில் எதுவும் இதுவரை நடிக்காமல் நேரடி கதைகளில் மட்டும் நடித்து வருகிறார்

வில்லேஜ் கெட்டப்பில்

வில்லேஜ் கெட்டப்பில்

முத்தையா இயக்கத்தில் வெளியான கொம்பன் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் முத்தையா கார்த்தி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் விருமன். பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மீண்டும் பக்கா வில்லேஜ் கெட்டப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்

வல்லவரையன் வந்தியத்தேவனாக

வல்லவரையன் வந்தியத்தேவனாக

ஹீரோ, இரும்புத்திரை என தற்போது உள்ள டெக்னாலஜியை பயன்படுத்தி எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் காட்டிவரும் இயக்குநர் பிஎஸ் மித்ரன் இப்பொழுது சர்தார் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது. மேலும் இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி வரும் பொன்னியன் செல்வனில் வல்லவரையன் வந்தியத்தேவனாக நடித்துள்ளார்

Recommended Video

Surya, Vijay Sethupathi லாம் என் மாணவர்கள் இல்ல ! | Kamal Haasan | Lokesh Kangaraj | #Kollywood
சினிமா தான் மன நிம்மதியை கொடுக்குது

சினிமா தான் மன நிம்மதியை கொடுக்குது

இவ்வாறு தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர் கார்த்தி தனியார் சேனல் நேர்காணலில் எனக்கு மன நிம்மதியை கொடுக்குற ஒரே விஷயம் சினிமா தான். அதில்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேடல் இருக்கும். புது புது சவாலான விஷயங்களை தினம் தினம் எதிர்கொள்ளவேண்டி இருக்கும் அது எனக்கு மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X