»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஜோதிகாவுக்கும், தேவயானிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தெனாலி ஷூட்டிங்கில் கண்டபடி பேசிக்கொண்டார்கள். ஷூட்டிங் சமயம்தேவயானியின் பிறந்தநாள் ஊட்டியில் நடந்தது. அதையும் புறக்கணித்தாராம் ஜோதிகா.

பலரும் விசாரிக்க ஏதேதோ காரணம் சொல்லி மழுப்பிவிட்டார் ஜோதிகா. இப்பொழுது தேவயானி பற்றி ஜோதிகாவும், ஜோதிகா பற்றிதேவயானியும் மாறி மாறி வதந்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அம்மணிகளா? ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். நினைவில் வச்சு நடந்துக்கோங்க.

சிம்ரனின் சம்பளம் முப்பது லட்சம்

நடிகர், நடிகைகள் எல்லோருமே சம்பளத்தைக் குறைத்துக் கொண்டிருக்க ஒருவர் மட்டும் இன்னும் சம்பளம் வேண்டும் என்கிறாராம். அவர் சிம்ரன்.

இதுவரை இருபத்திரெண்டு லட்சம் சம்பளம் வாங்கியவர் இப்பொழுது முப்பது லட்சம் கேட்கிறாராம். யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்தயாரிப்பாளர்கள்.

தமிழ் கைவிட்டா கன்னடம்

தமிழ் படங்களில் நடித்துக்கொண்டிருந்த ரமேஷ் அர்விந்த்க்கு தற்பொழுது தமிழில் ஒரு படம் இல்லை என்றாலும் கன்னடத்தில் ரமேஷ் என்ற பெயரில்முன்னணி நடிகர்களில் ஒருவராக படுபிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

காலையில் காக்கைக்கு உணவு.

நடிகர் சிவக்குமாருக்கு ஒரு பழக்கம் உண்டு. காக்கைகளுக்கு உணவு வழங்குகின்ற பழக்கம் அது. அதிகாலையில் இவர் மொட்டைமாடிக்கு சென்றுவிட்டால் ஏகப்பட்ட காக்கைக் கூட்டம் வந்துவிடும்.

பொறுமையாக அவைகளுக்கு பல காரங்களை துண்டாக்கி போடுகிறார். இந்த காக்கைகள் எப்படித்தான் கண்டு பிடிக்குமோ, எங்கள் வீட்டில் பூரிபோடுகின்ற வாசனையை கண்டுபிடித்து காலையிலேயே வந்து அமர்ந்து விடுகின்றன என்கிறார் சிவக்குமார்.

தன் பாக்கெட்டை நிரப்பிக்கொண்ட இயக்குனர்

கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் பட இயக்குனர் ராஜீவ்மேனனுக்கும், தயாரிப்பாளர் தாணுவுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் மனத்தாங்கல்ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள்.

க.கொ.க.கொ படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மற்றும் டெக்னீஷியன்களுக்கு சேர வேண்டிய பணத்தை வாங்கிய ராஜீவ் மேனன், தன் பாக்கெட்டைநிரப்பிக் கொண்டு விட்டாராம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தயாரிப்பாளரிடம் முறையிட மீண்டும் பணம் பட்டுவாடா செய்திருக்கிறாராராம்தயாரிப்பாளர் தாணு.

Read more about: cinema, devyani, jothika, simran, sivakumar, tenali, thanu
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil