twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெண்திரையில் கீழ்வெண்மணி சோகம் 35 ஆண்டுகள் கடந்து விட்டது அந்த மறக்க முடியாத கொடூரம் நடந்து. தஞ்சை மாவட்டத்தின் குக்கிராமம் கீழ்வெண்மணி.பெரும் தனக்காரர்களின், உயர்ந்த சாதி என்று தங்களைத் தாங்களே கூறிக் கொண்ட கொழுத்த பணக்காரர்களின் வயல்களில்வேலை பார்த்து வந்த தலித் விவசாயக் கூலிகள் அங்கு அதிகம்.மாதத்தின் 30 நாட்களும் அரை குறை சாப்பாடுதான் அவர்களுக்கு. எத்தனை நாட்கள்தான் இப்படி மட்டக் கூலிக்கு வேலைபார்த்து மாய்வது, எனவே கூலியைக் கூட்டிக் கேட்க முடிவு செய்த அவர்கள், கூலியை உயர்த்தித் தருமாறு பணிவோடுவேண்டுகோள் வைத்தனர் அந்த பணக்கார வர்க்கத்திடம்.ஆனால் உணவுக்குப் பதில் பணத்தை சாப்பிட்டுக் கொழுத்துப் போயிருந்த ஜாதி வெறியர்களுக்கு இது பிடிக்காமல் போனது.எங்களை அண்டிப் பிழைக்கும் உங்களுக்கு ஊதியம் ஒரு கேடா என்று கொந்தளித்த அந்த ஜாதி வெறியர்கள், அப்பாவிவிவசாயக் கூலிகளை அழித்தொழிக்க சதித் திட்டம் தீட்டினர்.1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி இரவு கீழ்வெண்மணி கிராமத்தின் தலித் குடிசைகள் பற்றி எரிந்தன. உயிரோடு எரிந்துகலைந்து போயின 42 அப்பாவி உயிர்கள். அதில் 20 பெண்கள், 19 ஒன்றுமே அறியாத அப்பாவிக் குழந்தைகள். தலித்துகளுக்குகுழந்தைகளாகப் பிறந்த ஒரே குற்றத்தால் அந்தக் குழந்தைகளும் குருதி கொதித்து மரித்துப் போயின.மானுடத்தை வென்ற அந்த மகா பயங்கரம் நடந்து முடிந்து 35 ஆண்டுகள் உருண்டோடிப் போய் விட்டன. ஆனாலும் மாபாதகம்செய்த அந்த மனிதப் பதர்கள் மட்டும் இன்று வரை தண்டிக்கப்படவே இல்லை. அதுதான் இந்தியாவின் விசித்திர ஜனநாயகம். கீழ்வெண்மணி மக்களின் மனதில் இன்றும் கூட மறக்க முடியாத வடுவாய் மாறிக் கிடக்கிறது இந்த அவலச் சம்பவம். இந்த அகோரபயங்கரம் இப்போது திரை வடிவில் வந்துள்ளது.பாரதி கிருஷ்ணகுமார் என்பவர் ராமையாவின் குடிசை என்ற பெயரில் கீழ்வெண்மணி கொடூரத்தைப் படமாக்கியுள்ளார். இந்தப்படத்தின் வெளியீடு சென்னையில் நடந்தது.இயக்குனர் பாரதிராஜா படத்தின் முதல் பிரதியை வெளியிட்டார். அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்வரதராஜன் பெற்றுக் கொண்டார். இயக்குனர் பாலுமகேந்திரா, நடிகர் கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் சங்கரய்யா, இந்து ஆசிரியர் என்.ராம், தமிழ் மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் வீரய்யன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகையில், சுமார் இரண்டு வருடங்கள் இந்த சம்பவம் குறித்து முழுமையாக ஆய்வு செய்துபல்வேறு தகவல்களைத் திரட்டினேன். அதன் பிறகே படமாக்கும் முயற்சிகளில் இறங்கினேன். இந்த இரண்டு ஆண்டு காலத்தில்நான் செய்த ஆய்வின்போது எனக்குக் கிடைத்த தகவல்கள் எனது நெஞ்சையே உலுக்கி எடுத்து விட்டது.இப்படிப்பட்ட ஒரு பயங்கரம் இனிமேலும் நடக்கக் கூடாது என்ற எண்ணம்தான் எனது மனதில் உதித்தது. இதில் வேதனைஎன்னவென்றால் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டவர்களுக்கு இன்று வரை தண்டனை கிடைக்கவில்லை என்பதுதான்.இது மிகப் பெரும் சோகம்.எனது இரண்டாண்டு கால ஆய்வின்போது மதுரையைச் சேர்ந்த தியாகி மாயாண்டி பாரதி எனக்கு கிடைப்பதற்கரிய ஒருபொருளை கொடுத்தார். அது ஒரு அஸ்திக் கலசம். கீழ்வெண்மணி பயங்கரம் நடந்த பிறகு எரிந்து சாம்பலாகிப் போன ஒருஅப்பாவி விவசாயக் கூலியின் மிச்ச எலும்புகளும், சாம்பலும் அந்த கலசத்தில் இருந்தது.கீழ்வெண்மணிக் கொடூரத்தை படமாக்கப்போகும் என்னைப் பாராட்டியும், ஊக்கப்படுத்தும் வகையிலும், இத்தனை காலமாகபத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த கலசத்தை என்னிடம் கொடுத்தார். அதை வாங்கியபோது என்னால் கண்களில் பெருகி ஓடியகண்ணீரை அடக்க முடியவில்லை.அந்தக் கலசத்தை இப்போது நான் தமிழ் மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் வீரய்யனிடம் ஒப்படைக்கிறேன் என்று உருக்கமாகபாரதி கிருஷ்ணகுமார் பேசியபோது அரங்கில் பெருத்த அமைதி நிலவியது.

    By Staff
    |

    35 ஆண்டுகள் கடந்து விட்டது அந்த மறக்க முடியாத கொடூரம் நடந்து. தஞ்சை மாவட்டத்தின் குக்கிராமம் கீழ்வெண்மணி.பெரும் தனக்காரர்களின், உயர்ந்த சாதி என்று தங்களைத் தாங்களே கூறிக் கொண்ட கொழுத்த பணக்காரர்களின் வயல்களில்வேலை பார்த்து வந்த தலித் விவசாயக் கூலிகள் அங்கு அதிகம்.

    மாதத்தின் 30 நாட்களும் அரை குறை சாப்பாடுதான் அவர்களுக்கு. எத்தனை நாட்கள்தான் இப்படி மட்டக் கூலிக்கு வேலைபார்த்து மாய்வது, எனவே கூலியைக் கூட்டிக் கேட்க முடிவு செய்த அவர்கள், கூலியை உயர்த்தித் தருமாறு பணிவோடுவேண்டுகோள் வைத்தனர் அந்த பணக்கார வர்க்கத்திடம்.

    ஆனால் உணவுக்குப் பதில் பணத்தை சாப்பிட்டுக் கொழுத்துப் போயிருந்த ஜாதி வெறியர்களுக்கு இது பிடிக்காமல் போனது.எங்களை அண்டிப் பிழைக்கும் உங்களுக்கு ஊதியம் ஒரு கேடா என்று கொந்தளித்த அந்த ஜாதி வெறியர்கள், அப்பாவிவிவசாயக் கூலிகளை அழித்தொழிக்க சதித் திட்டம் தீட்டினர்.

    1968ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி இரவு கீழ்வெண்மணி கிராமத்தின் தலித் குடிசைகள் பற்றி எரிந்தன. உயிரோடு எரிந்துகலைந்து போயின 42 அப்பாவி உயிர்கள். அதில் 20 பெண்கள், 19 ஒன்றுமே அறியாத அப்பாவிக் குழந்தைகள். தலித்துகளுக்குகுழந்தைகளாகப் பிறந்த ஒரே குற்றத்தால் அந்தக் குழந்தைகளும் குருதி கொதித்து மரித்துப் போயின.

    மானுடத்தை வென்ற அந்த மகா பயங்கரம் நடந்து முடிந்து 35 ஆண்டுகள் உருண்டோடிப் போய் விட்டன. ஆனாலும் மாபாதகம்செய்த அந்த மனிதப் பதர்கள் மட்டும் இன்று வரை தண்டிக்கப்படவே இல்லை. அதுதான் இந்தியாவின் விசித்திர ஜனநாயகம்.

    கீழ்வெண்மணி மக்களின் மனதில் இன்றும் கூட மறக்க முடியாத வடுவாய் மாறிக் கிடக்கிறது இந்த அவலச் சம்பவம். இந்த அகோரபயங்கரம் இப்போது திரை வடிவில் வந்துள்ளது.


    பாரதி கிருஷ்ணகுமார் என்பவர் ராமையாவின் குடிசை என்ற பெயரில் கீழ்வெண்மணி கொடூரத்தைப் படமாக்கியுள்ளார். இந்தப்படத்தின் வெளியீடு சென்னையில் நடந்தது.

    இயக்குனர் பாரதிராஜா படத்தின் முதல் பிரதியை வெளியிட்டார். அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்வரதராஜன் பெற்றுக் கொண்டார். இயக்குனர் பாலுமகேந்திரா, நடிகர் கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர் சங்கரய்யா, இந்து ஆசிரியர் என்.ராம், தமிழ் மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் வீரய்யன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகையில், சுமார் இரண்டு வருடங்கள் இந்த சம்பவம் குறித்து முழுமையாக ஆய்வு செய்துபல்வேறு தகவல்களைத் திரட்டினேன். அதன் பிறகே படமாக்கும் முயற்சிகளில் இறங்கினேன். இந்த இரண்டு ஆண்டு காலத்தில்நான் செய்த ஆய்வின்போது எனக்குக் கிடைத்த தகவல்கள் எனது நெஞ்சையே உலுக்கி எடுத்து விட்டது.

    இப்படிப்பட்ட ஒரு பயங்கரம் இனிமேலும் நடக்கக் கூடாது என்ற எண்ணம்தான் எனது மனதில் உதித்தது. இதில் வேதனைஎன்னவென்றால் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டவர்களுக்கு இன்று வரை தண்டனை கிடைக்கவில்லை என்பதுதான்.இது மிகப் பெரும் சோகம்.

    எனது இரண்டாண்டு கால ஆய்வின்போது மதுரையைச் சேர்ந்த தியாகி மாயாண்டி பாரதி எனக்கு கிடைப்பதற்கரிய ஒருபொருளை கொடுத்தார். அது ஒரு அஸ்திக் கலசம். கீழ்வெண்மணி பயங்கரம் நடந்த பிறகு எரிந்து சாம்பலாகிப் போன ஒருஅப்பாவி விவசாயக் கூலியின் மிச்ச எலும்புகளும், சாம்பலும் அந்த கலசத்தில் இருந்தது.

    கீழ்வெண்மணிக் கொடூரத்தை படமாக்கப்போகும் என்னைப் பாராட்டியும், ஊக்கப்படுத்தும் வகையிலும், இத்தனை காலமாகபத்திரப்படுத்தி வைத்திருந்த அந்த கலசத்தை என்னிடம் கொடுத்தார். அதை வாங்கியபோது என்னால் கண்களில் பெருகி ஓடியகண்ணீரை அடக்க முடியவில்லை.

    அந்தக் கலசத்தை இப்போது நான் தமிழ் மாநில விவசாயிகள் சங்கத் தலைவர் வீரய்யனிடம் ஒப்படைக்கிறேன் என்று உருக்கமாகபாரதி கிருஷ்ணகுமார் பேசியபோது அரங்கில் பெருத்த அமைதி நிலவியது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X