'மலைக்கோட்டை'யை ரசித்த கருணாநிதி!

By Staff


விஷால், ப்ரியா மணியின் நடிப்பில் உருவாகியுள்ள மலைக்கோட்டை படத்தை முதல்வர் கருணாநிதி, தனது துணைவியார் ராஜாத்தி அம்மாளுடன் பார்த்து ரசித்தார்.

Click here for more images

'புரட்சி தளபதி' விஷாலும், 'கவர்ச்சி இளவரசி' ப்ரியா மணியும் இணைந்து நடித்துள்ள படம் மலைக்கோட்டை. பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார். படம் 28ம் தேதிக்கு திரைக்கு வருகிறது.

படத்தை முதல்வர் கருணாநிதிக்குப் ேபாட்டுக் காட்ட விரும்பினார் இயக்குநர் பூபதி பாண்டியன். இதையடுத்து நேற்று ஃபோர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் படத்தின் மீடியா மேனேஜர் நிகில் முருகன், சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்தார்.

தனது துணைவியார் ராஜாத்தி அம்மாளுடன் வந்திருந்துப் படத்தைப் பார்த்து ரசித்தார் கருணாநிதி. படத்தைப் பார்த்து முடித்ததும், விஷால், பூபதி பாண்டியன் மற்றும் படக் குழுவினரை பாராட்டினார்.

படம் குறித்து பூபதி பாண்டியன் கூறுகையில், இப்படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஷால் முதல் முறையாக காமெடியிலும் கலக்கியிருக்கிறார். ஆக்ஷனிலும் அதகளம் செய்திருக்கிறார். கிட்டத்தட்ட கில்லி படத்தில் விஜய் செய்தது போல இதில் அசத்தியிருக்கிறார் விஷால் (அதுதான், புரட்சி தளபதி பட்டமா)

ப்ரியா மணி முதல் முறையாக விஷாலுடன் இணைந்து நடித்துள்ளார். படத்தின் கதை என்னவென்றால் ஜாலியாக சுற்றித் திரியும் விஷால் திருச்சிக்கு வருகிறார். ப்ரியா மணியுடன் காதல் ஏற்படுகிறது. ஆனால் அவரோ பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறார். அதிலிருந்து ப்ரியாவை விடுவிக்கிறார், அப்படியே தனது மனதுக்குள்ளும் அடைத்துக் ெகாள்கிறார். இதுதான் சார் கதை என்றார்.

ஆசிஷ் வித்யார்த்தி, கன்னட நடிகர் தேவராஜ் ஆகிேயார் வில்லர்களாக நடித்துள்ளனராம். மணி சர்மா இசையமைத்துள்ளார்.

மலைக்கோட்டை குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவும் நிலையில் முதல்வர் கருணாநிதி முதல் நபராக இப்படத்தைப் பார்த்துள்ளதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Read more about: karunanidhi malaikottai
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X