»   »  ஷார்ஜாவில் கோலிவுட் Vs

ஷார்ஜாவில் கோலிவுட் Vs

Subscribe to Oneindia Tamil

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணிகளைக் கண்ட அரபு நகரான ஷார்ஜா, வித்தியாசமான ஒரு கிரிக்கெட் போட்டியை வரும்ஜனவரி 27ம் தேதி காணவுள்ளது.

இந்தப் போட்டியில் ஆடப் போவோர் இதுவரை கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டதில்லை, கிரிக்கெட்டின்விதிமுறைகளும் இவர்களுக்குத் தெரியாது, ஏன்.. இவர்களுக்கு கிரிக்கெட்டே தெரியாது.

இவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகரிக்கிறதா? வெயிட்!.

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் தான் இந்த கிரிக்கெட் வீரர்கள்.

எம்.ஜி.ஆர்.- என்.டி.ஆர். கோப்பை என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள கோப்பைக்காக தமிழ் திரையுலகைச் (கோலிவுட்)சேர்ந்தவர்கள் ஒரு அணியாகவும், தெலுங்குத் திரையுலகைச் (டோலிவுட்) சேர்ந்தவர்கள் ஒரு அணியாகவும் ஷார்ஜாமைதானத்தில் நடைபெறப் போகும் ஒரு நாள் பகலிரவுப் போட்டியில் மோதப் போகின்றனர்.


புகழ்பெற்ற ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த கிரிக்கெட் போட்டி 30 ஓவர்களைக் கொண்டதாம்.

ஷார்ஜா தொடர்பான செய்திகள்பு நிறைய நட்சத்திரக் கலை விழாக்களைக் கண்டுள்ளது. ஆனால் நட்சத்திர கிரிக்கெட் போட்டி இதுவரைநடந்ததில்லை.

வளைகுடா பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தமிழ் மற்றும் தெலுங்கு பேசும் மக்களுக்கு இந்த கிரிக்கெட் போட்டி மிகச்சிறந்த விருந்தாக அமையும் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 30,000 ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோலிவுட் அணிக்கு பயிற்சியாளராக முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரர் சுரேஷ்குமார் இருப்பார். டோலிவுட் அணிக்கு முன்னாள்கிரிக்கெட் வீரர் வெங்கடபதி ராஜு இருப்பார்.


இரு அணிகளுக்கும் சீருடையும் கொடுக்கப்படும். போட்டிக்கு 3வது நடுவரும் உண்டாம்.

கோலிவுட் அணியில் இடம் பெறும் வீரர்கள்:

விக்ரம், மாதவன், சிம்பு, ஷாம், அப்பாஸ், பரத், ஜீவா, ஆர்யா, ரமேஷ்.

டோலிவுட் அணில் இடம் பெறக் கூடியவர்கள்:

தருண், பாலகிருஷ்ணா, ராஜேஷ், உதய் கிருஷ்ணா, ரவி தேஜா, அர்ஜூன், விஷ்ணு ஆகியோர்.

இந்தப் போட்டியின் மூலம் வசூலாகும் தொகையை சமூக சேவை நிறுவனங்களுக்குக் கொடுக்கப் போகிறார்களாம். இதேபோன்றபோட்டிகளை வேறு சில நகரங்களிலும் நடத்தும் திட்டமும் உள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil