கவுண்டமணி சார் பொண்ணு தீவிர சி.எஸ்.கே ரசிகை.. கிரிக்கெட்டையும் தாண்டிய பத்ரிநாத்தின் பேட்டி!
சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பத்ரிநாத் ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
சக வீரர்கள் தன்னை பேட் என்றும் பேட்மேன் என்றும் அழைப்பார்கள் என்றும், தல தோனி நார்மலாக பத்ரி என்றே அழைப்பார் என்றும், தனக்கு பிடித்த பெயர் பேட்மேன் தான் என்றும் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

கிரிக்கெட்டை தாண்டியும் பல விசயங்களையும் பகிர்ந்து கொண்ட பத்ரிநாத், தான் ஒரு கவுண்டமணியின் தீவிர ரசிகன் என்பதை தெரிவித்தார்.
கவுண்டமணி, வடிவேலுவின் காமெடி கவுண்ட்டர்களை கிரிக்கெட் விளையாட்டுக்களில் பயன்படுத்துவோம் என்றும், எதிர் அணியினர் தங்களை புரட்டி எடுத்தால், "ஒரு பத்து பேர்.. வச்சு வெளு வெளுன்னு வெளுத்துட்டாய்ங்க மாப்பிள்ளை' என வின்னர் பட வசனத்தையும், "உனக்கு பெட்டர்மாக்ஸ் லைட்டே தான் வேணுமா" என கவுண்டமணியின் வசனத்தையும் பேசுவோம் என்றார்.
மேலும், கவுண்டமணியின் மகள் தீவிரமான சி.எஸ்.கே ரசிகை என்றும், சென்னையில் மேட்ச் நடந்தால் ஸ்டேடியத்துக்கு வந்துவிடுவார் என்றும் கூறினார். கவுண்டமணியிடம் போனில் பேசியிருப்பதாகவும், நேரில் காணும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை உட்பட பல சுவாரஸ்யமான விஷயங்களை இரு பாகங்களாக அவர் பேசியுள்ள பேட்டியை கண்டு மகிழ வீடியோ லிங்கை கிளிக் செய்யுங்க!


Click it and Unblock the Notifications











