விஜய் டிவியில் மீண்டும் ஜோடி நம்பர்-1

By Staff

Vijay Jodi No.1
விஜய் டிவியின் பிரபலமான ஜோடி நம்பர் 1 ரியாலிட்டி ஷோ, மீண்டும் கலக்கலான ஜோடிகளுடன் நேயர்களை கவர வருகிறது.

வித்தியாச நிகழ்ச்சிகளை மட்டுமே தருவது என்ற பிடிவாதத்துடன் இருப்பது விஜய் டிவி. இந்த டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகள் நேயர்களிடையே மட்டுமல்லாமல், பிற டிவிகளிடையேயும் கூட பாப்புரலாக உள்ளன.

விஜய் டிவியின் மிகவும் பாப்புலரான ஒரு நிகழ்ச்சி ஜோடி நம்பர் 1 டான்ஸ் நிகழ்ச்சி. முதலில் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டபோதே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் 2வது பாகமான ஜோடி நம்பர் 1 - சீசன் 2 தான் ரொம்பப் பாப்புலர் ஆனது.

இதற்கு முக்கிய காரணம் நடுவர்களாக வந்த சிம்பு, சங்கீதா மற்றும் டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் ஆகியோரின் கலக்கல் தீர்ப்புகளும், கலகலப்பாக நிகழ்ச்சியை கொண்டு சென்ற விதமும்தான்.

இந்த நிலையில் 3வது பாகமாக ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி தொடரவுள்ளது. இந்த முறை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்து வருவோரும், பங்கேற்போரும் ஜோடிகளாக பங்கேற்கவுள்ளனர்.

கனா கானும் காலங்கள், மதுரை, காதலிக்க நேரமில்லை, லொள்ளு சபா, ஈக்யூ ஆகிய நிகழ்ச்சிகளில் நடிப்பவர்களும், கலந்து கொள்பவர்களும்தான் இந்த புதிய ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் ஜோடி சேரவுள்ளனர்.

முந்தைய இரு பாகங்களையும் விட இந்த மூன்றாவது நிகழ்ச்சி படு கலகலப்பாக இருக்கும் என்கிறது விஜய் டிவி.

மொத்தம் பத்து ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். அவர்கள் குறித்த விவரம்

கனா கானும் காலங்கள் புகழ் பாண்டி, கார்த்திகா, பச்சை, ராகவி, மதன், பிரியா, ராக்கி, மின்டு, உண்ணி, லொள்ளு சபா புகழ் ஜீவா, ஐஸ்வர்யா, மதுரை புகழ் அன்பு, நிலா, காதலிக்க நேரமில்லை புகழ் சக்தி, திவ்யா, சுஹாசினி ஆகியோருடன், ஈக்யூ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ரிஷி, ஜில்லுன்னு ஒரு சந்திப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சர்மிளா மற்றும் படவா கோபி, ஹரிதா கோபி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இவர்களில் படவா கோபியும், ஹரிதா கோபியும் நிஜ ஜோடிகள் ஆவர்.

போட்டியில் வெற்றி பெறும் ஜோடிக்கு ரூ. 5 லட்சம் பரிசும், சிறந்த பெர்பார்மர் விருதும் அளிக்கப்படும். மொத்தம் 13 வாரங்களுக்கு வருமாறு நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை தோறும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் சுவாரஸ்ய அம்சங்கள் ஒளிபரப்பாகும். சனிக்கிழமைதோறும் நடன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

ஜனவரி 4ம் தேதி (இன்று) முதல் தொடங்கும் இந்த நிகழ்ச்சியை வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X