»   »  தனுஷின் தில்லாலங்கடி!

தனுஷின் தில்லாலங்கடி!

Subscribe to Oneindia Tamil

புதிதாக படத் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார் தனுஷ். அவரது தயாரிப்பில் உருவாகப் போகும்படத்திற்கு தில்லாலங்கடி என்று பெயரிட்டுள்ளனர்.

காதல் கொண்டேன் வெளியானபோது அடுத்த கமல் இவர்தான்யா என்று சொல்லி வைத்தாற்போல அத்தனைபேரும் தனுஷை பாராட்டத் தொடங்கினர். ஆனால் சரியான கதையை செலக்ட் செய்யாததாலும், சகட்டு மேனிக்குகால்ஷீட்டுகளை சொதப்பியதாலும் ஏறிய வேகத்தில் கீழே இறங்கியது தனுஷின் மார்க்கெட்.

திருடா திருடிக்குப் பிறகு அவருக்கு பெரிய ஹிட் படம் என்று இதுவரை எதுவும் வரவில்லை. தேவதையைக்கண்டேன் பரவாயில்லாமல் ஓடியது. இருப்பினும் தனுஷின் மார்க்கெட் இன்னும் நிமிர்ந்தபாடில்லை.

அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடித்த புதுப்பேட்டை படமும் தனுஷுக்கு பெரியஅளவுக்கு செல்வாக்கைத் தேடித் தரவில்லை.

இந் நிலையில் தேவதையைக் கண்டேன் மூலம் தனக்கு மீண்டும் ஒரு சின்ன பிரேக் கொடுத்த பூபதிபாண்டியனின் இயக்கத்தில் திருவிளையாடல் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். இப்படத்தை அவர் பெரிதும்எதிர்பார்க்கிறார். தனது மார்க்கெட்டை இப்படம் தூக்கி நிறுத்தும் என்பது தனுஷின் அபார நம்பிக்கை.

இதேபோல, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தையும் தனுஷ்அதிகம் நம்பியுள்ளார். இவை இரண்டும் சேர்ந்து தனுஷைத் தூக்கி விட்டால்தான் உண்டு என்று கோலிவுட்டில்குசுகுசுக்கிறார்கள்.

இந்த நிலையில், புதிய பட நிறுவனத்தை தனுஷ் தொடங்கியுள்ளார். மனைவி ஐஸ்வர்யாவின் முதல் எழுத்தானஏ மற்றும் தனது பெயரின் முதல் எழுத்தான டி ஆகியவற்றை இணைத்து ஏடி பிக்சர்ஸ் என்று படநிறுவனத்துக்கு பெயரிட்டுள்ளார்.

இந்த நிறுவனத்தின் முதல் படமாக தில்லாங்கடி தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தையும் பூபதி பாண்டியனேஇயக்கவுள்ளார். திருவிளையாடல் படத்தில் ஒப்பந்தமானபோதே சேலம் சந்திரசேகரின் தேசிய நெடுஞ்சாலைஎன்ற படத்திலும் ஒப்பந்தமானார் தனுஷ்.

ஆனால் தற்போது சந்திரசேகர், விஜயகாந்த்தை வைத்து சபரி என்ற படத்தை தயாரித்து வருகிறார். அது எப்போதுமுடியும் என்று தெரியவில்லை. அதை முடித்து விட்டுத்தான் ரோட்டுக்கு வரவுள்ளார் சந்திரசேகர். எனவேஇடையில் ஏற்பட்டுள்ள கேப்பில் தனது சொந்தப் படத்தில் நடித்து முடித்து விட முடிவு செய்துள்ளார் தனுஷ்.

சந்திரசேகர் தயாரிப்பில் ஏற்கனவே சுள்ளான் என்ற படத்தில் தனுஷ் நடித்தார். அந்தப் படம்தான் அவரதுமார்க்கெட்டை ஊத்தி மூடியது. அப்படி இருந்தும் கூட மீண்டும் சந்திரசேகர் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவுள்ளதுஅவரது அபார நம்பிக்கையைத்தான் காட்டுகிறது என்கிறார்கள் கோலிவுட்டினர்.

தில்லாங்கடியின் கதை விடலைப் பசங்களின் கதை என்கிறார்கள். இதில் தனுஷுக்கு யார் ஜோடி என்பது இன்னும்தீர்மானிக்கப்படவில்லை. அனேகமாக முன்னணி நடிகை யாரையாவது போடுவார்கள் அல்லது புதுமுகத்தைகூட்டி வருவார்கள் எனத் தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil