»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

அது ஒரு கனாக்காலம் படத்தில் தனுஷூடன் படுநெருக்கமாக நடித்துள்ளார் ப்ரியாமணி

பாலுமகேந்திரா. தமிழ் சினிமாவை யதார்த்த உலகுக்குக் கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர். கிராமத்துவாழ்க்கையை செல்லுலாய்டு கவிதையாக்கிவர் பாரதிராஜா என்றால், மத்திய தரக் குடும்பங்களின் வாழ்க்கையைசினிமா பூச்சு பூசாமல் கூறியவர் பாலுமகேந்திரா.

மனித மனங்களின் நுணுக்கமான உணர்வுகளை தமிழ்த் திரையில் வடித்தவர். எதையும் நேரடியாக ரசிகர்களுக்குவிளக்க வேண்டியதில்லை, கதையின் போக்கில் புரிந்து கொள்வார்கள் என்பதில் நம்பிக்கை கொண்டு, அதை ஒருஉத்தியாக தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.

இவர் இயக்கிய மூன்றாம் பிறை, சந்தியாராகம், நெஞ்சத்தைக் கிள்ளாதே, வீடு போன்ற படங்கள் இன்றளவும்விமர்சகர்களால் கொண்டாடப்படுபவை. இப்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் படம் அது ஒரு கனாக்காலம்.

தனுஷ் கதாநாயகன். ப்ரியாமணி கதாநாயகி. இந்தப் படத்தில் தனுஷை 10, 15 அடியாட்களை அடிக்கும் ஒருஆக்ஷன் ஹீரோவாகவோ, எப்போதும் பெண்கள் துரத்தும் ஒரு காதல் நாயகனாகவோ காட்டவில்லை என்கிறார்பாலுமகேந்திரா.

ஒரு இளைஞனின் முதல் காதலை இயல்பாகக் காட்டப் போகிறாராம்.

படத்துக்கு தனுஷ் தரும் ஒத்துழைப்பைவியந்து பாராட்டுகிறார் இயக்குநர்.

கமல், மம்முட்டி ஆகியோருக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வு தனுஷுக்குஇருப்பதாகக் கூறுகிறார்.

முதல் காதல் என்பதால், அந்த வயதுக்குரிய இளமை மீறலை அப்படியே படமாக்கியிருக்கிறாராம். இயக்குநரின்எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு ப்ரியாமணி தனுஷூடன் படு நெருக்கமாக நடித்துள்ளார்.

பெரிய இயக்குநர் படம் என்பதால் தனுஷ் மிகுந்த அக்கறையுடன் நடிக்கிறாராம்.

பாலுமகேந்திரா சொல்வதைமாணவனுக்குரிய பணிவுடன் கேட்டு நடிப்பதாக படப்பிடிப்புக் குழுவினர் கூறுகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil