தசாவதாரம் படம் சாதாரணமான படைப்பு இல்லை... காரணங்கள் சொல்லிய கேஎஸ் ரவிக்குமார் !
சென்னை: இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர்
தமிழில் பல வெள்ளிவிழா படங்களை கொடுத்த கே எஸ் ரவிகுமார் மற்ற மொழிகளிலும் படங்களை இயக்கி அங்கும் வெற்றி கண்டுள்ளார்
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசனின் அட்டகாசமான பத்து அவதார நடிப்பில் வெளியான தசாவதாரம் திரைப்படம் சாதாரண படைப்பு இல்லை என தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசியுள்ளார்

ரொம்பவே ஸ்பெஷல்
தமிழ் சினிமாவில் பல வெள்ளிவிழா படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக இருந்தவர் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜித் என தொடர்ந்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் இணைந்து பணியாற்றி வந்த கேஎஸ் ரவிக்குமார் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல் அவ்வை சண்முகி தெனாலி தசாவதாரம் பஞ்சதந்திரம் என கே எஸ் ரவிக்குமார் கமல்ஹாசன் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றுள்ளது. இதில் மிகவும் வித்தியாசமான படைப்பாக அமைந்தது தசாவதாரம்.

பத்து வேடங்களில்
ஒவ்வொரு படத்திற்கும் கதாபாத்திரத்தை மாற்றும் கமல்ஹாசன் ஒரே படத்தில் பத்து வேடங்களில் நடித்து அசத்திய திரைப்படம் தசாவதாரம் இந்திய வரலாற்றிலேயே இது போன்ற பிரம்மாண்ட படைப்பை யாரும் முயற்சிக்காத நிலையில் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் நவீன தொழில் நுட்பத்தை வைத்துக்கொண்டு தசாவதாரம் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தார்.

குரலை மாற்றி பேசியும்
ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மற்ற கதாபாத்திரத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் கதை களத்தை அமைத்துத் சுவாரசியம் குறையாமல் அதிநவீன தொழில்நுட்பத்தில் வெளியான தசாவதாரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலிலும் மாஸ் காட்டியது. கமல்ஹாசன் இந்த படத்தில் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத 10 வேடத்தில் கலக்கியிருப்பார். ஒவ்வொரு வேடங்களுக்கும் தகுந்தவாறு அவரே குரலை மாற்றி பேசியும் நடித்திருப்பார்
Recommended Video

தசாவதாரம் படம் சாதாரணமான படைப்பு இல்லை
இவ்வாறு தமிழ் சினிமாவில் ஆகச் சிறந்த படைப்பாக இருந்து வரும் தசாவதாரம் திரைப்படம் சாதாரண படைப்பு இல்லை. தசாவதாரம் மாறி ஒரு படத்தை நானே நினைத்தாலும் எடுக்க முடியாது. கமல்ஹாசன் ஒரு நாளைக்கு ஒரு கெட்டப்பை மட்டும்தான் போடமுடியும் ஏனென்றால் அந்த மேக்கப்பை கலைப்பதற்கு 5 மணி நேரம் ஆகிவிடும் அதனால் அடுத்த நாள் மற்றுமொரு கமல்ஹாசனின் கதாபாத்திர காட்சிகளை எடுப்போம். படம் முழுவதுமே க்ரீன் மேட் கொண்டுதான் காட்சிகளை பெரும்பாலும் எடுத்துள்ளோம். என அந்த நேர்காணலில் கேஎஸ் ரவிக்குமார் தசாவதாரம் குறித்த சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











