'ஏய், இங்க பாரு!'
| Click here for more images |
தெலுங்கு ரசிகர்கள் கொஞ்சம் முரட்டுத்தனமானவர்கள். அடிதடியாக, அதிரடியாக இருந்தால்தான் அவர்களுக்குப் பிடிக்கும். அது காதலாக இருந்தாலும் சரி, குத்துப் பாட்டாக இருந்தாலும் சரி, லைட்டாக இருக்கக் கூடாது, அதிலும் ஒரு முரட்டுத்தனம், முறுக்குத்தனம் இருந்தாக வேண்டும்.
படத்தின் டைட்டிலேயே இந்த முரட்டுத்தனம் ஆரம்பித்து விடும். அதிரடியாக டைட்டில் வைப்பதில் தெலுங்கு சினிமாவுக்கு நிகர் அவர்கள்தான். அங்கிருந்து இங்கு வந்த சில தமிழ்ப் படங்களுக்குக் கூட குண்டாங்குறையாக பெயர் வைத்து சக்சஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போது மலையாளப் படங்களுக்கும் அந்த ரேஞ்சில் பெயர் வைக்க ஆரம்பித்துள்ளனர். அப்படி சமீபத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு டைட்டில்தான் 'டே, இங்கொட்டு நோக்கியே' (அதாவது ஏய், இங்க பாரு என்று அர்த்தம்).
மலையாளத்து பாக்யராஜ் என்று அழைக்கப்படும் இயக்குநர், நடிகர், கதாசிரியர், இசையமைப்பாளர் பாலச்சந்திர மேனன்தான் இதில் நாயகனாக நடிக்கவுள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மேனன் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவர் இயக்கம் பிளஸ் நடிப்பில் வெளியான கிருஷ்ண கோபாலகிருஷ்ணா பெரும் வெற்றி பெற்றது.
இப்போது இயக்கவுள்ள ஏய், இங்க பாரு படத்தை ஏவி.அனூப் தயாரிக்கவுள்ளார். பிரபல பின்னணிப் பாடகர் ஜெயச்சந்திரன்தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கொச்சியில் சமீபத்தில் படத்திற்கான பூஜை நடந்தது. அமைச்சர் விஜயக்குமார் படத்தைத் தொடங்கி வைத்தார்.
பழம்பெறும் தயாரிப்பாளர் வாசுதேவன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். இயக்குநர் பிரியதர்ஷன் கேமராவை முடுக்கி வைத்தார்.


Click it and Unblock the Notifications











