»   »  ஸ்னேகா-நாக் ரவி-கமல தீபிகா

ஸ்னேகா-நாக் ரவி-கமல தீபிகா

Subscribe to Oneindia Tamil

சலசலவென சர்ச்சையில் சிக்கி, கோடம்பாக்கத்தில் இன்று மளமளவென வளர்ந்து நிற்கும் நாக் ரவிக்கும், டிவி தொகுப்பாளினி கமல தீபிகாவுக்கும் கல்யாணம் நிச்சயமாகியுள்ளதாம்.

நாக் ரவியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். தமிழ் சினிமாவுக்கான அவரது லான்ச்சிங் பேடே ஸ்னேகாதான்.

ஸ்னேகாவும், அவரும் காதலித்தனர், நிச்சயதார்த்தம் கூட ஆகி விட்டது, மோதிரம் மாற்றிக் கொண்டு விட்டனர் என்று அடுக்கடுக்காக செய்திகளும், ஆதாரங்களாக புகைப்படங்களும் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தின.

இந்த செய்திகளை ஸ்னேகா மறுத்தார். ஆனால் நாக் ரவி ஆமாம் என்றார். இப்படியாக இந்த சர்ச்சை வெளியாகிக் ெகாண்டிருந்த நிலையில் ஸ்னேகாவின் புகார்கள், நாக் ரவியின் மறுப்புகள் என இந்த விவகாரம் கொஞ்ச காலத்திற்கு சந்தடியாக இருந்தது.

அப்புறம் எல்லாம் அடங்கிப் போனது. இப்ேபாது நாக் ரவி தமிழ் திரையுலகில் முக்கியப் புள்ளி. சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாக உள்ளார் நாக் ரவி.

படத்தை முடிக்க முடியாதவர்களுக்கு நிதியுதவி செய்வது, படங்களின் வினியோக உரிமையை வாங்குவது படு பிசியாக உள்ளார் ரவி.

இந் நிலையில்தான் ரவிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இது காதல் திருமணம் அல்ல, ஆனால் கண்டதும் காதல் கொண்டு, பெற்றோர்களை விட்டுப் பேசி முடிக்கப்பட்ட திருமணமாம்.

நாக் ரவியின் மனம் கவர்ந்த மங்கை கமல தீபிகா. இவர் டிவியில் தொகுப்பாளினியாக உள்ளார். டிவியில் இவரைப் பார்த்த ரவி, அசந்து போய் விட்டாராம். இந்த அழகுப் பெண்தான் எனக்கு வேண்டும் என்று டிவி திரையைக் காட்டி பெற்றோரிடம் சொல்ல, உடனே போய்ப் பார்த்துப் பேசி முடித்து விட்டார்களாம்.

நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாம். அக்டோபரில் கல்யாணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதற்கு முன்பு நடந்ததையெல்லாம் நான் மறந்து விட்டேன். இனிமேல் கமல தீபிகா மட்டுமே எனது தேவதை. இனிய இல்லற வாழ்க்கைக்குத் தயாராகி வருகிறேன் என்கிறார் ரவி.

கங்கிராட்ஸ் ரவி! (அவருக்கு அழைப்பு அனுப்புவீங்களா?)

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil