»   »  ஸ்குவாஷ் தீபிகாவும் சினிமாவும்!

ஸ்குவாஷ் தீபிகாவும் சினிமாவும்!

Subscribe to Oneindia Tamil

ஸ்குவாஷ் விளையாட்டில் கலக்கி வரும் 14 வயசு அழகு தேவதை தீபிகா பல்லிகல்லை நோக்கி சினிமாக்காரர்கள்படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

பொசு பொசுன்னு இருக்கிறார் தீபிகா பல்லிகல். கேரளத்து ரத்தம் என்பது பெயரைப் பார்த்தாலே புரியும். ஸோ,சொக்க வைக்கும் அழகுடன் தீபிகா திகழ்வதில் ஆச்சரியமும் இல்லை.

படு க்யூட்டாக இருக்கும் தீபிகா, இந்திய ஸ்குவாஷ் உலகில் வளர்ந்து வரும் அழகு தேவதை. தீபிகா, கேரளதேவதை என்றாலும் பிறந்து, வளர்ந்து ஸ்குவாஷ் விளையாட ஆரம்பித்தது சென்னையில்தான்.

10 வயசிலேயே விளையாட வந்து விட்டார் தீபிகா. அன்று ஆரம்பித்த இவரது பூணைப் பாய்ச்சல் இன்று புலிப்பாய்ச்சலாக மாறி, இந்திய ஸ்குவாஷ் விளையாட்டின் அடுத்த மகாராணியாக அடையாளம் காட்டியுள்ளது.

முன்னணி வீராங்கனையான ஜோஷ்னா சின்னப்பாவும், தீபிகாதான் அடுத்த இந்திய ஸ்டார் என்று புகழ்கிறார்.விளையாட்டில் கலக்கி வரும் தீபிகா, பெல்ஜியம் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன், பிரெஞ்சு ஓபன், ஜெர்மன் ஓபன்ஆகிய போட்டிகளில் ஜூனியர் பி>வில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

இவர் களத்தில் இறங்கி விளையாடும் அழகே தனி. படு துறுதுறுப்பாக இருக்கும், பேசும் தீபிகாவுக்கு சமீபத்தில்ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்தது. அது அவரைத் தேடி வந்த ஒரு சினிமா வாய்ப்பு.

மோகன்லால் தரப்பில் தீபிகாவை அணுகி அவர் நடிக்கும் புதுப் படத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டுள்ளனர்.மோகன்லாலின் ரசிகையான தீபிகாவுக்கு ஆச்சரியமான ஆச்சரியம். நான் அவ்ளோ அழகாகவா இருக்கிறேன்என்று வந்தவர்களிடமே ஆச்சரியமாக கேட்டாராம்.

பிறகு இப்போதைக்கு ஸ்குவாஷ்தான் முக்கியம். அப்புறம் பார்க்கலாமே என்று அமைதியாக அனுப்பி வைத்துவிட்டாராம். இவ்ளோ அழகா இருக்கீங்களே, சினிமாவுக்கு வந்தால்தான் என்னவாம் என்று தீபிகாவிடம்கேட்டால், அய்யோ, அப்படியெல்லாம் விளையாட்டை விட்டு விட முடியாது.

நான் அழகாக இருக்கிறேன் என்பது எனக்கு எப்பவோ தெரிந்த விஷயம். இருந்தாலும் விளையாட்டில் பெ>யஇடத்துக்கு வருவதுதான் லட்சியம். ஒருவேளை ஸ்குவாஷ் விளையாட வராமல் இருந்திருந்தால்நடிகையாகியிருப்பேனோ என்னவோ என்று கண்கள் ஜொலிக்க சிரிக்கிறார் தீபிகா.

மோகன்லாலைப் போலவே, தமிழ் சினிமாக்காரர்கள் சிலரும் கூட தீபிகாவை அணுகியுள்ளனராம். ஆனால்அவர்களுக்கும் ஸாரிதான் சொல்லியுள்ளதாம் இந்த இளம்புயல்.

சென்னையில் பொறந்து வளர்ந்தாலும் பாப்பா இப்போது இருப்பது எகிப்தில். அங்கு பெரும் ரசிகர் கூட்டமேஇவருக்கு இருக்கிறதாம். அதை விட ஐரோப்பிய ஸ்குவாஷ் வட்டாரத்திலும் இவருக்கு செமையான ரசிகர்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil