அப்படியெல்லாம் நடிக்க முடியாது.. பிரபாஸ் படத்தில் இருந்து விலகிய தீபிகா படுகோன்?.. அடுத்து அவரா?

ஹைதராபாத்: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த கல்கி 2898 ஏடி படத்தில் தீபிகா படுகோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் 2ம் பாகமும் இன்னும் சில ஆண்டுகளில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள 'ஸ்பிரிட்' படத்திலும் தீபிகா படுகோன் தான் ஜோடி என பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், அந்த படத்தில் இருந்து தீபிகா படுகோன் விலகி விட்டதாக அதிர்ச்சியான தகவல்கள் கசிந்துள்ளன.

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் இயக்குநர் சந்தீப் ரெட்டி. அர்ஜுன் ரெட்டி படத்தை இந்தியில் கபீர் சிங் என ரீமேக் செய்து 400 கோடி ரூபாய் வரை கல்லா கட்டினார்.

Deepika Padukone left and Mrunal Thakur is in talks for Prabhas Spirit movie due to this reason

ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான அனிமல் திரைப்படம் 900 கோடி வரை வசூல் செய்ய இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநர்கள் வரிசையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். அடுத்ததாக பிரபாஸை வைத்து 'ஸ்பிரிட்' படத்தை விரைவில் ஆரம்பிக்க காத்திருக்கிறார்.

அனிமல் படத்தில் எல்லை மீறிய காட்சிகள்: சந்தீப் ரெட்டி வங்கா படங்கள் என்றாலே உதட்டு முத்தக் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. அர்ஜுன் ரெட்டி படத்தை விட அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் எல்லை மீறிய லிப் கிஸ் காட்சிகளில் நடித்தனர். ராஷ்மிகா மந்தனாவை ஓவர்டேக் செய்யும் விதமாக திரிப்தி திம்ரி உடன் ரன்பீர் கபூர் படுக்கையறை காட்சிகளில் நடித்து பதை பதைக்க வைத்தார். அனைத்துக்கும் மேலாக பிறந்த மேனியாக அவர் நடந்து வரும் சீனெல்லாம் ஆபாசத்தின் உச்சம்.

Deepika Padukone left and Mrunal Thakur is in talks for Prabhas Spirit movie due to this reason

லிப் கிஸ் காட்சிகளுக்கு நோ: இந்நிலையில், பிரபாஸ் உடன் இணைந்து ஸ்பிரிட் படத்தில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதிகளவிலான லிப் கிஸ் மற்றும் படு நெருக்கமான காட்சிகளை இருவருக்கும் ஏகத்துக்கு சந்தீப் ரெட்டி வங்கா எழுதிய நிலையில், அதை படித்துவிட்டு பெரிய 'நோ' சொல்லிவிட்டார் தீபிகா படுகோன் என்கின்றனர். சமீபத்தில், அம்மாவான நிலையில், இதற்கு மேல் இன்டிமேசி காட்சிகளில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என்றும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.

மிருணாள் தாகூர் நடிக்கப்போறாராம்: தீபிகா படுகோனே பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக மிருணாள் தாகூரை ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் சந்தீப் ரெட்டி வங்கா எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படத்துக்கும் மிருணாள் தாகூர் தான் ஜோடி என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

Take a Poll

பிரபாஸ் உடன்: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த கல்கி படத்திலும் மிருணாள் தாகூர் நடித்திருந்தார். ஆனால், அது வெறும் கேமியோ ரோலாகவே கடந்து சென்றது. பிரபாஸ் உடன் மிருணாள் தாகூர் ஜோடியாக சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடித்தால் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கன்ஃபார்ம் என்கின்றனர். விரைவில் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X