இது துள்ளுற வயசு டெக்னிக் தீபிகா என்ற புதுமுகமும் ராகவா என்ற பொடியனும் நடித்த துள்ளுற வயசு படத்தை தியேட்டர்களை விட்டுதூக்கிவிட்டாராம் தயாரிப்பாளர். காரணம், படத்தை கொஞ்சம் மாற்றி எடுத்து மீண்டும் ரிலீஸ் செய்வதற்காம். இந்திய சினிமா வரலாற்றிலேயே கேள்விப்படாத ரொம்ப புதிய முயற்சியா இருக்கே என்று விசாரித்தால் பலசுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்தன.தனுஷ் குடும்பத்தின் புண்ணியத்தால் உருவான துள்ளுவதோ இளமையைத் தொடர்ந்து அதே போன்ற குஜால்பருவ காதல் லீலைகளை பறைசாற்றும் படங்கள் கஜினி முகம்மது மாதிரி படையெடுத்தன. அதில் பல படங்கள்வந்த வேகத்தில் ஓடிப் போய்விட்டன.அதே வரிசையில் உருவான படம் தான் துள்ளுற வயசும். முழுக்க முழுக்க நாயகியின் இளமைத் துள்ளலை நம்பிஎடுக்கப்பட்ட படம் இது.புதுமுகமாக அறிமுகமான தீபிகாவுக்கு சினிமா தான் புதுசே தவிர சினிமா உலகம் புதுசில்லை. சான்சுக்காகஅலைந்து திரிந்ததில் சினிமாலோகத்தை நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டார்.இதனால் தனது முதல் படத்திலேயே எல்லோரையும் பேலன்ஸ் செய்து தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்என்பதை முற்றும் உணர்ந்து முனகாமல் நடித்து துணிச்சலைக் காட்டினார்.இளமையை டால்டா மாதிரி வழிய வழிய கொட்டிக் கொடுத்தார்.கே.ஆர்.சி. பிலிம் என்ற நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. கோபால் என்பவர் தயாரித்து, இயக்கினார். படம்போன மாதமே ரிலீஸ் ஆகிவிட்டது.சென்னை, மதுரை பகுதிகளுக்காக என மொத்தமே நான்கே பிரிண்டுகள் தான் போட்டார்கள். ஏனாம்?நான்கு பிரிண்ட் மட்டும் போட்டு படத்தை டிரையல் ரன்னுக்கு விடுவது, படத்துக்கு ரெஸ்பான்ஸ் எப்படி என்றுஅறிவது, மக்கள் எதை விரும்புகிறார்கள் எதை விரும்பவில்லை அறிந்து அத்கேற்ப கதையை திருத்தி மீண்டும்சூட் செய்து மக்களுக்கு புடிச்சா மாதிரி படத்தை எடுத்து மீண்டும் ரிலீஸ் செய்வது.இது எப்டி இருக்கு?இதற்காகத் தான் 4 பிரிண்ட் மட்டும் போட்டு படத்தை ரிலீஸ் செய்த இயக்குனர்-தயாரிப்பாளர் கோபால்,படத்தை பார்த்தவர்களிடம் நேரிடையாக கருத்து கேட்டார்.கருத்து சொன்ன பலரும் படத்துக்கு நல்ல ரிசல்ட் கொடுக்கவில்லை. இதையடுத்து படத்தை அந்த 4தியேட்டர்களில் இருந்தும் எடுத்து விட்டாராம்.ஒரு குத்து பாட்டு இருந்தா நல்லாருக்கும் என இளசுகள் பீல் பண்ணியதால், "என்னாடி வயது, பொன்னான மனசுஎன்ற பாடலை லக்ஷாவை விட்டு ஆட விட்டு சுட்டுள்ளார்.அத்துடன் ஒரு ஸ்டண்ட் மற்றும் கொஞ்சம் சூடான வசனங்களையும் எடுத்து படத்தில் சேர்த்தாராம்.கடைசியாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியையும் மாற்றிவிட்டாராம் (எல்லாம் மக்கள் வேண்டுகோளுக்குஇணங்க தான்).இப்போது அடுத்த கட்டத்துக்கு வந்துள்ளார் இயக்குனர். அதாவது படத்தின் பெயரை "இதயம் உனக்காக என்றுமாற்றிவிட்டார்.இனி மறுபடியும் படத்தை சென்சாருக்கு அனுப்பி மீண்டும் புதுப் பெயரில் படத்தை ரிலீஸ் செய்யப் போகிறாராம்கோபால்.இந்தப் படத்துக்கு நீண்ட காலத்துக்குப் பின் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By Staff

தீபிகா என்ற புதுமுகமும் ராகவா என்ற பொடியனும் நடித்த துள்ளுற வயசு படத்தை தியேட்டர்களை விட்டுதூக்கிவிட்டாராம் தயாரிப்பாளர். காரணம், படத்தை கொஞ்சம் மாற்றி எடுத்து மீண்டும் ரிலீஸ் செய்வதற்காம்.

இந்திய சினிமா வரலாற்றிலேயே கேள்விப்படாத ரொம்ப புதிய முயற்சியா இருக்கே என்று விசாரித்தால் பலசுவாரஸ்யமான விஷயங்கள் கிடைத்தன.

தனுஷ் குடும்பத்தின் புண்ணியத்தால் உருவான துள்ளுவதோ இளமையைத் தொடர்ந்து அதே போன்ற குஜால்பருவ காதல் லீலைகளை பறைசாற்றும் படங்கள் கஜினி முகம்மது மாதிரி படையெடுத்தன. அதில் பல படங்கள்வந்த வேகத்தில் ஓடிப் போய்விட்டன.

அதே வரிசையில் உருவான படம் தான் துள்ளுற வயசும். முழுக்க முழுக்க நாயகியின் இளமைத் துள்ளலை நம்பிஎடுக்கப்பட்ட படம் இது.

புதுமுகமாக அறிமுகமான தீபிகாவுக்கு சினிமா தான் புதுசே தவிர சினிமா உலகம் புதுசில்லை. சான்சுக்காகஅலைந்து திரிந்ததில் சினிமாலோகத்தை நன்றாகவே புரிந்து கொண்டுவிட்டார்.

இதனால் தனது முதல் படத்திலேயே எல்லோரையும் பேலன்ஸ் செய்து தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்என்பதை முற்றும் உணர்ந்து முனகாமல் நடித்து துணிச்சலைக் காட்டினார்.

இளமையை டால்டா மாதிரி வழிய வழிய கொட்டிக் கொடுத்தார்.

கே.ஆர்.சி. பிலிம் என்ற நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. கோபால் என்பவர் தயாரித்து, இயக்கினார். படம்போன மாதமே ரிலீஸ் ஆகிவிட்டது.


சென்னை, மதுரை பகுதிகளுக்காக என மொத்தமே நான்கே பிரிண்டுகள் தான் போட்டார்கள். ஏனாம்?

நான்கு பிரிண்ட் மட்டும் போட்டு படத்தை டிரையல் ரன்னுக்கு விடுவது, படத்துக்கு ரெஸ்பான்ஸ் எப்படி என்றுஅறிவது, மக்கள் எதை விரும்புகிறார்கள் எதை விரும்பவில்லை அறிந்து அத்கேற்ப கதையை திருத்தி மீண்டும்சூட் செய்து மக்களுக்கு புடிச்சா மாதிரி படத்தை எடுத்து மீண்டும் ரிலீஸ் செய்வது.

இது எப்டி இருக்கு?

இதற்காகத் தான் 4 பிரிண்ட் மட்டும் போட்டு படத்தை ரிலீஸ் செய்த இயக்குனர்-தயாரிப்பாளர் கோபால்,படத்தை பார்த்தவர்களிடம் நேரிடையாக கருத்து கேட்டார்.


கருத்து சொன்ன பலரும் படத்துக்கு நல்ல ரிசல்ட் கொடுக்கவில்லை. இதையடுத்து படத்தை அந்த 4தியேட்டர்களில் இருந்தும் எடுத்து விட்டாராம்.

ஒரு குத்து பாட்டு இருந்தா நல்லாருக்கும் என இளசுகள் பீல் பண்ணியதால், "என்னாடி வயது, பொன்னான மனசுஎன்ற பாடலை லக்ஷாவை விட்டு ஆட விட்டு சுட்டுள்ளார்.

அத்துடன் ஒரு ஸ்டண்ட் மற்றும் கொஞ்சம் சூடான வசனங்களையும் எடுத்து படத்தில் சேர்த்தாராம்.

கடைசியாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியையும் மாற்றிவிட்டாராம் (எல்லாம் மக்கள் வேண்டுகோளுக்குஇணங்க தான்).


இப்போது அடுத்த கட்டத்துக்கு வந்துள்ளார் இயக்குனர். அதாவது படத்தின் பெயரை "இதயம் உனக்காக என்றுமாற்றிவிட்டார்.

இனி மறுபடியும் படத்தை சென்சாருக்கு அனுப்பி மீண்டும் புதுப் பெயரில் படத்தை ரிலீஸ் செய்யப் போகிறாராம்கோபால்.

இந்தப் படத்துக்கு நீண்ட காலத்துக்குப் பின் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X