பிரபு தேவா சம்பளம் 1.5 கோடி!

By Staff

தமிழிலும், தெலுங்கிலும் தொடர்ந்து 3 படங்கள் வெற்றிகரமாக ஓடி விட்டதால், பிரபு தேவா தனது சம்பளத்தைஉயர்த்தி விட்டாராம்.

டான்ஸரா, டான்ஸ் மாஸ்டராக, நடிகராக கலக்கி வந்த பிரபு தேவா இப்போது வெற்றிப் பட இயக்குநராக புதுஅவதாரம் எடுத்துள்ளார்.

தெலுங்கில்தான் முதல் படத்தை இயக்கினார் பிரபு தேவா. அது வெற்றி பெறவே அடுத்து இன்னொருதெலுங்குப் படத்தையும் இயக்கி அதுவும் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து வாழ்வு தமிழுக்கு வந்தார் பி.தேவா. விஜய்யை வைத்து அவர் இயக்கிய முதல் தமிழ்ப்படமான போக்கிரி வசூல்ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. இதனால் பிரபு தேவாவுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.இதையடுத்து தனது சம்பளத்தை ஏற்றி விட்டாராம் பிரபு.

அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்கப் போகிறார் பிரபு தேவா. இந்தியில் வெற்றி வாகைசூடிய லகே ரகோ முன்னாபாய் படத்தின் ரீமேக்கான இப்படத்துக்கு முன்னாபாய் ஜிந்தாபாத் என்றுபெயரிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு பிரபு தேவா கேட்டு, ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள சம்பளம் ஒன்றரை கோடியாம். இனி தமிழுக்கும்இதுதான் சம்பளமாம். இப்போதைக்கு தமிழில் அதிக சம்பளம் வாங்குபவராக ஷங்கர் உள்ளார். கிட்டத்தட்ட 5கோடிக்கு பக்கத்தில் அவர் சம்பளம் வாங்குகிறார்.

போகிற வேகத்தைப் பார்த்தால் ஷங்கருக்குப் பக்கத்தில் வந்து விடுவார் போலும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X