ஸ்பெஷல்ஸ்
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்....
தேவயானியும் சொந்தப் படம் எடுக்க முடிவு செய்து விட்டார் என்பது தான்.
கல்யாணத்திற்குப் பிறகு சூடு பிடித்துள்ள மார்க்கெட் எப்போது வேண்டுமானாலும் குறையலாம் என்பதால் இப்போதே சொந்தப்படம் எடுத்து துட்டுப்பார்த்து விட முடிவு செய்து விட்டாராம் தேவயானி.
அது தவிர இயக்குவதற்கு பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்து இருக்கும் தனது கணவர் ராஜகுமாரனுக்கு ஒரு வேலையும்கொடுத்தது மாதிரி இருக்கும் என்பதால் இந்த முடிவாம்.
கல்யாணத்திற்குப் பிறகும் தமிழ் சினிமாவில் பிசியான நடிகை ஒருவர் இருக்கிறார் என்றால் கடந்த சில ஆண்டுகளில் தேவயானி மட்டுமே. கல்யாணத்தால்பல படங்களை அவர் இழந்தாலும் கூட தனது விடா முயற்சியால் மீண்டும் பல படங்களில் புக் ஆனார். இப்போது கை நிறைய படங்களுடன் வலம் வருகிறார்.
தேவயானியின் கையில் நிறைய படங்கள் இருப்பதைப் பார்த்த அவரது அம்மாவும் கண்களில் தண்ணீர் விட்டுக் கொண்டு மகளிடம் தூது விட்டுள்ளார்.பரிதாபப்பட்ட தேவயானி சமீபத்தில் வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்த்து கண்ணீர் சிந்தி விட்டு வந்தாராம் (ராஜகுமாரன் கூடப் போகவில்லை).
இப்போது சொந்தமாக ஒரு படம் தயாரிக்க தேவயானி முடிவு செய்துள்ளார். இந்தப் படத்தை இயக்கப் போவது சாட்சாத் ராஜகுமாரன்தான். ஹீரோயின்யார் என்று தெரியவில்லை, ஒருவேளை தேவயானியாகக் கூட இருக்கலாம்.
ஆனால் விஜய் அல்லது அஜீத்தான் ஹீரோ என்பதை தேவயானி முடிவு செய்து விட்டார். அவர்கள் கிடைக்காவிட்டால் விக்ரம் பக்கம் காற்று வீசலாம்.
கதை கூட முடிவு செய்து விட்டார்களாம். ஹீரோவை முடிவு செய்து கால்ஷீட் கிடைத்தவுடன் படத்தைத் துவக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











