»   »  தேவிப்பிரியா வீட்டில் அதிரடி சோதனை!

தேவிப்பிரியா வீட்டில் அதிரடி சோதனை!

Subscribe to Oneindia Tamil

வீடியோ கடை-கோழிப்பண்ணை அதிபரான வில்லியம் ஐசக்கின் 2வது மனைவி ஹேமமாலினியை வீடு தேடிச்சென்று அடியாட்களுடன் மிரட்டிய டிவி நடிகை தேவிப்ரியாவிடம் போலீஸார் அதிரடி விசாரணை நடத்தினர்.அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. தேவிப்பிரியா விரைவில் கைது செய்யப்படுவார் என்றும்கூறப்படுகிறது.

தேவிப்பிரியா, ஐசக், ஸ்டெல்லா, ஹேமமாலினி விவகாரம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. முதலில், ஐசக்மீது முதல் மனைவி ஸ்டெல்லா புளு பிலிம் உள்பட பல புகார்களைக் கொடுத்தார்.

இந் நிலையில் நேற்று 2வது மனைவி ஹேமமாலினியும் ஐசக் மற்றும் அவரை திருமணம் செய்யதிட்டமிட்டுள்ள டிவி நடிகை தேவிப்பிரியா ஆகியோர் மீது சரமாரியாக புகார் கொடுத்தார்.

ஸ்டெல்லா கொடுத்த புகாரில், ஐசக் பல பெண்களுடன் தொடர்பு கொண்டவர். என்னைத் தவிர மேலும் 3 பேரை அவர் கல்யாணம் செய்துள்ளார்,நீலப் படம் எடுக்கிறார். தேவிப்பிரியாவின் தங்கையையும் திருமணம் செய்து கொண்டு பின்னர் கைவிட்டவர், இப்போது தேவிப்பிரியாவையேகல்யாணம் செய்யப் போகிறார் என்று சரமாரியாக புகார் கூறினார்.

இந் நிலையில் ஐசக்கின் 2வது மனைவியான ஹேமமாலினியும் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார். சென்னை காவல்துறை ஆணையர்அலுவலகத்திற்கு வந்த அவர் கண்ணீர் மல்க ஐசக் மீது புகார் கூறி மனு கொடுத்தார்.

அதில், நான் என் முதல் கணவர் கிருஷ்ணகுமாருடனும், ஒரு பெண் குழந்தையுடனும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன். கிருஷ்ணகுமாருடன்நட்பாக பழக ஆரம்பித்த ஐசக், என்னை அவரது வலையில் வீழ்த்தினார். நானும் அந்த வலையில் வீழ்ந்தேன். எனது அன்பான கணவரை உதறிவிட்டு ஐசக்கை பதிவுத் திருமணம் செய்து கொண்டேன். ஒரு வருடம் நான் அவருடன் வாழ்ந்தேன்.

ஆனால் இந்த ஒரு வருடத்தில் அவர் எனக்கு செய்த கொடுமைகளை வாயால் சொல்ல முடியாது. அவர் சாதாரண மனிதனே அல்ல, காமக்கொடூரன். அவருடன் நான் வாழ்ந்த கொடுமையான வாழ்க்கைக்கு அடையாளமாக எனக்கு 3 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

என்னைக் கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியபோதே பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. தேவிப்பிரியாவுடனும்அவருக்கு கள்ளத் தொடர்பு இருந்தது. அவரது தங்கையையும் அவர்தான் கல்யாணம் செய்து கொண்டதாக கூறினார்கள்.

இதையடுத்தே நான் எனது குழந்தைகளுடன் அவரை விட்டுப் பிரிந்து வந்து தனியாக வசித்து வருகிறேன்.

தேவிப்பிரியாவும் நல்லவர் அல்ல. அவர் வேறு வழிகளில் சம்பாதித்த பணத்தையெல்லாம் ஐசக்கிடம் கொடுத்து வைத்துள்ளார். அவரால்தான் பலலட்சம் மதிப்புள்ள சொத்துக்களை ஐசக்கால் சேர்க்க முடிந்தது. இது பறி போய் விடக் கூடாது என்பதற்காகத்தான் ஐசக்கை மணக்க வேண்டியகட்டாயத்தில் உள்ளார் தேவிப்பிரியா.

ஆனால் தேவிப்பிரியாவை விட வசதியான, அழகான பெண் கிடைத்தால் அவளுடன் போய் விடுவார் ஐசக், பிறகு தேவிப்பிரியாவின் கதி அதோகதிதான்.

பெண்களை வைத்து நிர்வாணப் படம் எடுத்தார் என்று ஸ்டெல்லா கூறியுள்ளதில் பொய் இருக்க முடியாது. அவரது வீடியோ கடையில் வேலைபார்த்து வந்த பெண்களைக் கூட அவர் விட்டு வைக்கவில்லை. அத்தனை பேரையும் நாசப்படுத்தி விட்டார். இதற்கு தேவிப்பிரியாவும் கூடஉடந்தைதான்.

என்னை ஐசக் விவகாரத்து செய்யவில்லை. எனவே அவர் இன்னும் எனது கணவர்தான். நாங்கள் இருவரும் முறையாக பதிவுத் திருமணம்செய்துள்ளோம். எனவே தேவிப்பிரியாவை எனது கணவர் மணக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ஹேமமாலினி.

மேலும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று ஹேமமாலினி கோரியதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஆணையர் லத்திகாசரண் உத்தரவிட்டார்.

இந் நிலையில் போலீசில் ஹேமமாலினி புகார் கொடுத்ததால் ஆத்திரமடைந்த தேவிப்பிரியா, அடியாட்களுடன் சென்றுஹேமமாலினியை மிரட்டியுள்ளார். இதைத் தொடர்ந்து தனது உயிருக்கு ஆபத்து என்று ஹேமமாலினி தரப்பில்அடையாறு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து அடையார் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா, ஹேமமாலினியிடம் விசாரணைநடத்தினார்.

இதைத் தொடர்ந்து தேவிப்பிரியா வீட்டுக்குப் போலீஸார் விரைந்தனர். அங்கு ஐசக் பதுங்கியிருக்கலாம் என்றுபோலீஸார் சந்தேகப்பட்டதால் வீட்டைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தனிப்படை போலீஸார் இரவு 11.40 மணிக்கு தேவிப்பிரியா வீட்டுக்குள் நுழைந்தனர். முன்னதாக அங்குதூங்கிக் கொண்டிருந்த கார் டிரைவ>டம் போலீஸார் ஐசக் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் வீட்டுக்குள்சென்று அறை அறையாக சோதனை போட்டனர்.

தேவிப்பிரியாவின் படுக்கை அறையில் மது பாட்டில்களும், ஆபாச பட சிடிக்களும் இருந்தன. ஆனால்,வீட்டில் தேவிப்பிரியாவைத் தவிர வேறு யாரும் இல்லை. அவரிடம் தலைமறைவாக இருக்கும் ஐசக் குறித்துபோலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

அதற்கு முதலில் பதிலளிக்காமல் முரண்டு பிடித்து ஆவேசமாக பேசியள்ளார் தேவிப்பி>யா. எனது செல்வாக்குதெரியாமல் வந்து விட்டீர்கள். நான் நினைத்தால் உங்கள் அத்தனை பே>ன் வேலையையும் காலி செய்யமுடியும் என்று மிரட்டினார்.

ஆனால் அதற்கு சளைக்காத போலீஸார், ஹேமமாலினி கொடுத்த புகாரை வைத்து உங்களை உள்ளே தூக்கிப்போட முடியும். எனவே அமைதியாக விசாரணைக்கு ஒத்துழையுங்கள் என்று கண்டிப்புடன் கூறவே,கண்ணீரும், புலம்பலுமாக அனைத்து விவரங்களையும் தெரிவித்தாராம் தேவிப்பிரியா.

ஒரு கட்டத்தில் நான் எங்காவது ஓடி விடுகிறேன், என்னை விட்டு விடுங்கள் என்று கூறி கதறினாராம்.கிட்டத்தட்ட 2 மணி நேரம் தேவிப்பிரியாவிடம் விசாரணை நடந்துள்ளது.

பின்னர் அழைக்கும்போது விசாரணைக்கு வர வேண்டும், வெளியூர் போகக் கூடாது என்று கூறி விட்டுபோலீஸார் கிளம்பினர்.

இதற்கிடையே, ஹேமமாலினி கொடுத்த புகாரின் அடிப்படையில் தேவிப்பிரியாவைக் கைது செய்ய போலீஸார்திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

விரைவில் தேவிப்பிரியா உள்ளே போகக் கூடும்.

அரசியல்வாதியிடம் ஐசக் அடைக்கலம்?:

இதற்கிடையே தேவிப்பிரியா தவிர அவரது தங்கை பிரியாவுடனுடன் ஐசக்குக்கு கடந்த இரு வருடமாகவே தொடர்பு உள்ளதாகவும், இவர்கள்திருமணம் செய்து கொள்ளாமலேயே குடும்பம் நடத்தி வருவதாகவும், தேவிப்பிரியா முறைகேடாக சேர்த்த பணத்தையெல்லாம் ஐசக்கிடம் தான்தந்து வைத்துள்ளதாகவும் ஹேமமாலினி குற்றம் சாட்டியுள்ளார்.

அத்தோடு புளு பிலிம் எடுத்தும், பெண்களை நிர்வாண பணம் எடுத்து விற்கும், தேவிப்பிரியா-பிரியாவை வைத்து வேறு கேவலமான வழிகளிலும்ஐசக் பணம் சேர்த்துள்ளதாகவும் முதல் மனைவி ஸ்டெல்லா புகார் கூறியுள்ளார்.

இந் நிலையில், தலைமறைவாக உள்ள ஐசக், சென்னையில் உள்ள ஒரு அரசியல் பிரமுகரின் பாதுகாப்பில்பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. தனது தாயாரின் அரசியல் செல்வாக்கைக் கொண்டு (அவர் தாமகவில்இருந்தவர்) அவர் அரசியல் நிழலில் தஞ்சம் புகுந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையே முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐசக் மனு தாக்கல் செய்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil