»   »  தேவிப்பிரியா, தங்கை பிரியா தலைமறைவு!!

தேவிப்பிரியா, தங்கை பிரியா தலைமறைவு!!

Subscribe to Oneindia Tamil

கோழிப்பண்ணை அதிபர் வில்லியம் ஐசக்கின் 2வது மனைவி ஹேமமாலினியை கொலை செய்து விடுவதாக மிரட்டியது தொடர்பாக நடிகைதேவிப்பிரியா மீது கொலை மிரட்டல் வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஐசக்கின் 2 கூட்டாளிகளைபோலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை அடையாரைச் சேர்ந்த முன்னாள் த.மா.கா. கவுன்சிலர் குளோரியின் மகன் வில்லியம் ஐசக் மீது அவரது முதல் மனைவி ஸ்டெல்லா,2வது மனைவி ஹேமமாலினி ஆகியோர் பரபரப்பு புகார்களைக் கூறியுள்ளனர்.

ஐசக்கும், அவர் கல்யாணம் செய்து கொள்ளவுள்ள நடிகை தேவிப்பிரியாவும் சேர்ந்து பல தகிடுதித்தங்களில் ஈடுபட்டு வருவதாக ஹேமமாலினிபோலீஸில் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனது அடியாட்களுடன் சென்று ஹேமமாலினியை தேவிப்பிரியா மிரட்டியதாக போலீஸாரிடம்ஹேமமாலினி தெரிவித்தார்.

இதையடுத்து தேவிப்பிரியாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அவரது வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தேவிப்பிரியா மீது மற்றும் ஐசக் ஆகியோர் மீது கொலை மிரட்டல் வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.

மேலும் தேவிப்பிரியாவின் அம்மா, தங்கை பிரியா ஆகியோர் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐசக் மீதும், அவரது தாயார் குளோரி மீதும் வரதட்சணைக் கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந் நிலையில் தேவிப்பிரியாவை இன்று போலீசார் கைது செய்ய திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர் தனது தாய், தங்கையுடன் வீட்டை விட்டுஓடி தலைமறைவாகிவிட்டார். அவர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நேற்று மாலை வரை போலீசாருக்கு ஒத்துழைப்பு தந்து வந்த தேவிப்பிரியா, மைலாப்பூரில் படப்பிடிப்பில் இருப்பதாகக் கூறினார். ஆனால்,தன்னை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிந்தவுடன் அவர் எஸ்கேப் ஆகிவிட்டார். அவர் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுசெய்யலாம் என்று தெரிகிறது.

ஐசக் நண்பர்கள் சிக்கினர்:

இதற்கிடையே, தலைமறைவாக உள்ள ஐசக்கின் 2 நெருங்கிய நண்பர்களைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அயூப், கலையரசன் என்ற அவர்கள்இருவரையும் அடையாறு போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நேற்று இரவு முழுவதும் ஐசக் குறித்து போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். விரைவில் ஐசக்கும் போலீஸ் பிடியில்சிக்குவார் என்று கூறப்படுகிறது. இன்னொரு கூட்டாளியான வடிவேலு என்பவரையும் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர்.

இதற்கிடையே ஐசக் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil