»   »  தேவிப்பிரியா-ஐசக் நாளை கல்யாணம்?

தேவிப்பிரியா-ஐசக் நாளை கல்யாணம்?

Subscribe to Oneindia Tamil

தலைமறைவாக உள்ள கோழிப் பண்ணை அதிபர் ஐசக்கும், நடிகை தேவிப்பிரியாவும் நாளை ரகசியத் திருமணம் செய்து கொள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.

ஐசக் மீது அவரது முதல் மனைவி ஸ்டெல்லா கொடுத்த புகாரின் பேரில் ஐசக்கின் தாயார் குளோரி கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஐசக்தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் 2வது மனைவி ஹேமமாலினியும் ஐசக் மற்றும் தேவிப்பிரியா மீது புகார் கொடுத்தார். மேலும், இருவரும் சேர்ந்து தன்னைக்கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாக அவர் கொடுத்த புகாரின் பேரில் இருவர் மீதும் கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தேவிப்பிரியா தலைமறைவானார். முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் எழும்பூர்நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஐசக்கும், தேவிப்பிரியாவும் நாளை சென்னை புறநகரில் ரகசியத் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நாளை அவர்களது திருமணம் இரு வீட்டாரின் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததுநினைவிருக்கலாம். ஆனால் தற்போது நிலைமை சரியில்லை என்பதால் ரகசியமாக திருமணத்தைநடத்த தேவிப்பிரியா முடிவு செய்துள்ளார்.

தற்போது ஐசக் திருப்போரூர் அருகே ஒரு பண்ணை வீட்டில் ரகசியமாக, பத்திரமாக தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர் இருக்கும் இடம்காவல்துறைக்கும் தெரியும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல தேவிப்பிரியாவும் படு பத்திரமானஇடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

நாளை திட்டமிட்டபடி கல்யாணத்தை நடத்தி விடுவது, இந்து முறைப்படி கல்யாணத்தை நடத்துவது என தற்போது தேவிப்பிரியாவும், ஐசக்கும்முடிவு செய்துள்ளனராம். இந்த யோசனையை தேவிப்பிரியாவுக்குக் கொடுத்ததே ஒரு முக்கிய காவல்துறை அதிகாரிதான் என்றும் கூறப்படுகிறது.

இவர்களது திருமணம் நாளை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு கோவிலில் ரகசியமாக நடைபெறவுள்ளது. இந்தத் திருமணத்திற்குதேவிப்பிரியாவின் தோழியான ஒரு டிவி நடிகை மட்டுமே சாட்சிக்கு வரவுள்ளாராம்.

கல்யாணத்தை முடித்துக் கொண்டு தம்பதி சமேதராக நீதிமன்றத்தில் ஐசக்கும், தேவிப்பிரியாவும் சரணடைவார்கள் என்றும் கூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil