»   »  தேவிப்பிரியா கல்யாணம் ஓவர்?

தேவிப்பிரியா கல்யாணம் ஓவர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தலைமறைவாக உள்ள நடிகை தேவிப்பிரியாவுக்கும், வீடியோ கடை அதிபர் வில்லியம் ஐசக்குக்கும் இன்றுரகசியமாக கல்யாணம் நடந்து விட்டதாக செய்திகள் கசிந்துள்ளன.

ஐசக்கின் முதல் மனைவி ஸ்டெல்லா கொடுத்த புகாரைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார்.

இந் நிலையில், ஐசக்கின் 2வது மனைவி ஹேமமாலினியை மிரட்டியது தொடர்பாக தேவிப்பிரியா மீதும் வழக்குதொடரப்பட்டது. இதையடுத்து தேவிப்பிரியாவும் தலைமறைவாகி விட்டார்.

தலைமறைவான தேவிப்பிரியா மீது கொலை மிரட்டல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரதுவீட்டிலிருந்து ஏராளமான புளு பிலிம் சிடிக்கள் சிக்கியுள்ளன. இதில் சில சிடிக்களில் நடித்திருப்பதுதேவிப்பிரியாவும் அவரது தங்கை பிரியாவும். உடன் நடித்திருப்பது ஐசக்.

கொலை வழக்கில் தேவிப்பிரியாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது. ஆனால் எழும்பூர்நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் இதுவரை தேவிப்பிரியா கோர்ட்டில் சரணடையவில்லை. அதேசமயம், இன்று அவர் திட்டமிட்டபடிஐசக்கை மணந்து கொள்வாரா என்ற கேள்விக்குறியும் எழுந்தது.

இந் நிலையில் இன்று காலை சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில், உள்ள ஒரு சர்ச்சில்வைத்து ஐசக்கும், தேவிப்பிரியாவும் கல்யாணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இருவருக்கும் நெருக்கமான ஒரு சிலர் மட்டுமே இதில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இன்றுஐசக்கின் பிறந்த நாளாம். அவருடன் காதல் கொண்டிருந்தபோது, பிறந்த நாளுக்கு என்னையே பரிசாகதருகிறேன் என்று வாக்கு கொடுத்திருந்தாராம் தேவிப்பிரியா.

ஹேமமாலினியை கடந்த 2002ம் ஆண்டு மே மாதம் 14ம் தேதி பல்லவாரத்தில் உள்ள பதிவாளர்அலுவலகத்தில் வைத்து ஐசக் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். அவரிடமிருந்து இன்னும் ஐசக்விவாகரத்து வாங்கவில்லை.

இந்த நிலையில் தேவிப்பிரியாவை அவர் மணந்துள்ளது சட்டப்படி செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐசக்குக்கும் முன் ஜாமீன்:

இந் நிலையில், ஐசக்குக்கும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீனைவழங்கியது.

அவர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு நீதிபதி ரகுபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவைவிசாரித்த நீதிபதி, ஒரு வாரத்திற்கு போலீஸில் ஆஐராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். ரூ. 3லட்சத்திற்கான சொத்து மதிப்பை நீதிமன்றத்தில் காட்டி ஜாமீன் பெறலாம் என உத்தரவிட்டார்.

ஐசக் ஒரு விபச்சார புரோக்கர்?:

இதற்கிடையே வீடியோ கடை, கோழிப் பண்ணை என பிஸினஸ்கள் செய்து வந்தாலும் ஐசக்கின் முக்கியவேலை விபச்சார புரோக்கர் தொழில் தான் என போலீசார் கூறுகின்றனர்.

தேவிப்பிரியாவில் ஆரம்பித்து பல நடிகைகளையும் தனது தொழிலுக்கு அவர் பயன்படுத்தியுள்ளதாகத்தெரிகிறது.

ஹேமமாலினிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தேவிப்பிரியாவுக்கும், ஸ்டெல்லாவை மிரட்டியவழக்கில் ஐசக்குக்கும் முன் ஜாமீன் கிடைத்துவிட்டாலும் புளு பிலிம் சங்கதியில் இருந்து இருவரும் தப்பமுடியாது என்றே காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil