»   »  நள்ளிரவில் ஹேமமாலினியைவழிமறித்து தாக்கிய தேவிப்பிரியா!

நள்ளிரவில் ஹேமமாலினியைவழிமறித்து தாக்கிய தேவிப்பிரியா!

Subscribe to Oneindia Tamil

நடிகை தேவிப்பிரியா தன்னை பெட்ரோல் உற்றி கொலை செய்ய முயற்சித்தார் என ஐசக்கின் 2வது மனைவி ஹேமமாலினி புகார்கொடுத்துள்ளார்.

ஐசக்கின் முதல் மனைவி ஸ்டெல்லா, 2வது மனைவி ஹேமமாலினி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில்தலைமறைவாகி விட்ட ஐசக்கை, 2வது மனைவியை மிரட்டிய வழக்கில் தலைமறைவாகியுள்ள நடிகைதேவிப்பி>யா, நேற்று பலத்த போலீஸ் வேட்டையையும் மீறி ரகசியத் திருமணம் செய்து கொண்டு விட்டார்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு நடிகைக்குச் சொந்தமான பங்களாவில் வைத்து இந்தத் திருமணம்நடந்துள்ளதாம்.

இந் நிலையில் தனது கணவரோடு சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைைய தேவிப்பிரியாதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து தனது நெருங்கிய தோழி ஒருவரிடம் அவர் பேசியுள்ளாராம்.அப்போது, குண்டர் சட்டத்தில் ஐசக்கை உள்ளே போட முயலுகிறார்கள் என்றாராம் தேவிப்பி>யா.

இதற்கிடையே, ஐசக்கின் 2வது மனைவி ஹேமமாலினி, இன்று காலை தேவிப்பிரியா மீது அடையாறு காவல்நிலையத்தில் புதிய புகாரைக் கொடுத்துள்ளார். அதில், நேற்று நள்ளிரவில் தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்ய தேவிப்பிரியா முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து தேவிப்பிரியா மீது மீண்டும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்துஹேமமாலினி கொடுத்துள்ள புகாரில், நானும், ஐசக்கும் கணவன், மனைவி ஆவோம். அதற்கு அடையாளமாகஎங்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இருவரும் இன்னும் விவாகரத்து பெறவில்லை.

எனது சம்மதம் இல்லாமல் தேவிப்பிரியாவை அவர் கல்யாணம் செய்து கொண்டுள்ளார். இதுசட்டவிரோதமாகும்.

இந்நிலையில் நேற்று இரவு 12 மணி அளவில் எனக்கு உடல் நிலை கோளாறு ஏற்பட்டது. அதற்காக திருவான்மியூரில் உள்ள மருத்துவமனைக்குநடத்து சென்று கொண்டிருந்தேன். அப்போது இரண்டு கார்கள் என் மீது மோதுவது போல் வந்து நின்றது. அதில் ஒரு காரில் தேவிப்பிரியாவும்,ஐசக்கும் இருந்தனர். மற்றொரு காரில் அடியாட்கள் வந்திருந்தனர்.

காரில் இருந்து இறங்கிய தேவிப்பிரியாவும், ஐசக்கும் என் தலை முடியை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். அப்போது உடனடியாக எங்கள் மீதுகொடுத்த புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டு ஊரை விட்டு ஓடி விடு இல்லை என்றால் உன்னையும், குழுந்தையையும் கொலை செய்து விடுவோம்என மிரட்டினர்.

அப்போது தேவிப்பிரியா காரில் இருந்த பெட்ரோலை எடுத்து உன் மீது ஊற்றி எரித்து கொல்ல போகிறேன் என கூறி பெட்ரோல் கேனைஎடுத்தார். நான் அவர்கள் பிடியில் இருந்து தம்பி ஓடி வந்து விட்டேன். நான் தப்பவில்லை என்றால் என்னை கொலை செய்திருப்பார்கள்.

எனவே எனது உயிருக்கு ஆபத்து நேர்தால் நடிகை தேவிப்பிரியாவும், ஐசக்கும் தான் பொறுப்பு. அவர்களின் கொலை வெறி நடவடிக்கையில்இருந்து என்னையும், என் குழந்தையையும் காக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஹேமமாலினி.

இந்தப் புகாரைப் பெற்ற இன்ஸ்பெக்டர் கீதா விசாரணை நடத்தி வருகிறார்.

நள்ளிரவில் வந்து ஹேமமாலியினியை மடக்கி தாக்கியுள்ளதன் மூலம், தலைமறைவாக இருந்து வரும் தேவிப்பிரியாவும் ஐசக்கும் சென்னையில்தான் பதுங்கியுள்ளதாகத் தெரிகிறது. இருவர் மீதும் கொலை முயற்சி, மிரட்டல், ப்ளு பிலிம் என அடுக்கடுக்காக புகார்கள் குவிந்து கொண்டுள்ளன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil