தேவிப்பிரியா தாய், தங்கைக்கும் ஜாமீன்!

By Staff

ஐசக்கின் 2வது மனைவி ஹேமமாலினி கொடுத்த கொலை மிரட்டல் புகார் மீதான வழக்கில், நடிகை தேவிப்பிரியாவின் தாய்க்கும் அவரதுதங்கைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் அளித்துள்ளது.

விசிடி கடை நடத்தி வந்த ஐசக்கின் 2வது மனைவி ஹேமமாலினி. கேரளத்தைச் சேர்ந்த இவர் கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.விசிடி வாங்கப் போகும்போது ஐசக் பழக்கமாகியுள்ளார். ஒரு முறை ஹேமமாலினிக்கு ப்ளு பிலிம் விசிடியை ஐசக் கொடுக்க அதைப் பார்த்தஹேமமாலினி கவிழ்ந்து போனார்.

அந்த விசிடிக்களை விரும்பியே வாங்கிப் பார்க்க ஆரம்பித்துள்ளார். அதை வைத்தே ஹேமமாலியினியை மடக்கிப் போட்டார் ஐசக். ஏற்கனவேமுதல் கணவர் மூலம் ஹேமமாலினிக்கு ஒரு குழந்தை இருந்தது. ஐசக்குடனான பழக்கம் அதிகமாகி அவரை திருமணண் செய்த ஹேமமாலினிக்குஇன்னொரு குழந்தையும் பிறந்தது.

இந் நிலையில் தன்னையும் ஸ்டெல்லாவையும் (ஐசக்கின் முதல் மனைவி) கைவிட்டுவிட்டு தேவிப்பிரியாவையும் அவரது தங்கையையும் கைபிடிக்க முயன்ற ஐசக்கு எதிராக போலீசில் புகார் தந்தார் ஹேமமாலினி.

இதையடுத்து ஹேமமாலினியின் வீட்டைத் தேடிப் போன தேவிப்பிரியாவும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்த வழக்கில் தேவிப்பிரியாஏற்கனவே முன் ஜாமீன் பெற்றுவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் தேவிப்பிரியாவின் தாய் சுப்புலட்சுமி, தங்கை மீனாகுமாரி என்ற ப்ரியா ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர். இதனால்அவர்களும் தேவிப்பிரியாவோடு சேர்ந்து தலைமறைவாகிவிட்டதோடு, முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி, சுப்புலட்சுமிக்கும், மீனாகுமாரிக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இருவரும்தொடர்ந்து ஒரு வாரம் அடையாறு மகளில் காவல்நிலையத்தில் ஆஜராகி போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இந் நிலையில் நள்ளிரவில் நடுரோட்டில் வைத்து தன்னை பெட்ரோல் ஊற்றி கொளுத்த முயன்றதாக தேவிப்பிரியா-ஐசக் மீது ஹேமமாலினிஇன்னொரு புகார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹேமமாலினியை மிரட்டிய வழக்கில் முன் ஜாமீன் பெற்றுவிட்டாலும் ப்ளு பிலிம் சர்ச்சையால் ஐசக்கும் தேவிப்பிரியாவும் தொடர்ந்துதலைமறைவாகவே இருந்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X