»   »  தேவிப்பிரியா-திரில்லர் பின்னணி

தேவிப்பிரியா-திரில்லர் பின்னணி

Subscribe to Oneindia Tamil

மீடியாக்களின் வாய்க்கு திகட்டாத அவலாக மாறியுள்ள தேவிப்பிரியாவின் வாழ்க்கை வரலாறும், தமிழ்திரைப்படம் போலவே திகு திகு திருப்பங்களைக் கொண்ட ஒரு சூப்பர் கதை.

கல்லூரி நாட்களிலிருந்தே தேவிப்பிரியா ஒரு சுதந்திரப் பறவையாகத்தான் இருந்தார். நினைத்தது நடக்கவேண்டும், நடக்காததையும் நினைத்து நடத்திக் காட்ட வேண்டும் என்பதில் வீம்புக்காரியாக இருந்துள்ளார்.

மதுரைக்காரப் பெண்ணாக இருந்தாலும் சென்னையில் செட்டிலாகி தனக்கென ஒரு செட்டப்பை ஏற்படுத்திக்கொண்டவர் தேவிப்பிரியா. கிண்டி செல்லம்மாள் கல்லூரியில், கம்ப்யூட்டர் சயின்ஸை முடித்த தேவிப்பிரியா,அண்ணா சாலையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

இப்போது இருப்பது போல பார்த்தவுடன் பச்செக்கன மனதில் ஒட்டிக் கொள்ளும் பேரழகியாக அப்போதுதேவிப்பிரியா இல்லை. இருந்தாலும் சீரான வளைவுகள், சிறப்பான பேச்சுக்கள் மூலம் மற்றவர்களை தன்பக்கம் ஈர்த்து விடுவதில் கெட்டிக்காரியாக இருந்தார் தேவிப்பிரியா.

தேவிப்பிரியாவின் கிக் வலையில் சிக்கியவர்கள் பலர். அவர்களில் தேவிப்பிரியா வேலை பார்த்து வந்தகம்ப்யூட்டர் நிறுவன பாஸும் ஒருவர். தேவிப்பிரியா மீது மோகம் கொண்ட அவர், உன்னை டிவியில் சேர்த்துவிட்டு எங்கேயோ கொண்டு போகட்டுமா? என்று ஆசை வலையை விரித்தார்.

வீட்டில் கேட்டுச் சொல்வதாக (சும்மா ஒப்புக்குத்தான்!) தேவிப்பிரியா சொன்னார். ஆனால் வீட்டில்தேவிப்பிரியாவின் வாய்ஸுக்கு எதிர் வாய்ஸே கிடையாது. காரணம், அவரது அப்பா பக்கத்து வீட்டுக்காரரின்மனைவியை அபேஸ் செய்து கொண்டு எப்போதோ எஸ் ஆகி விட்டார்.

தேவிப்பிரியாவின் சம்பளத்தை நம்பித்தான் குடும்பமே இருந்தது. எனவே தேவிப்பிரியா என்ன சொன்னாலும்அதை அவரது அம்மாவும், தங்கை மீனா குமாரியும், தம்பியும் கேட்டுத்தான் ஆக

வேண்டிய நிலை.

பாஸுக்கு ஓ.கே. சொன்ன தேவிப்பிரியா, ஆபீஸில் வேலை பார்த்த நேரம் போக, சாயங்கால வேளைகளில்,சப்ஜாடாக பல டிவி தொடர் தயாரிப்பு நிறுவனங்களில் ஏறி இறங்கினார். சைடில், பாஸும் பல பக்கங்களில்வாய்ப்பு தேடி அலைந்தார்.

தனக்காக பாஸ் அலைந்தாலும், முழுக்க அவரை மட்டும் நம்பியிராமல் தனது திராணியைக் கொண்டுதேவிப்பிரியாவும் வாய்ப்பு தேடினார். இந்தத் தேடலில் சில(ர்) சிக்கின(ர்).

இதில் இன்னொரு வியஷமும் நடந்தேறியது. நடிக்க சான்ஸ் கிடைத்ததோ இல்லையோ, பாய் பிரண்டுகள்பட்டாளம் பல்கிப் பெருகியது. புள்ளிவைக்க முடியாத அளவுக்கு கமா போட்டு லிஸ்ட்டை ஏற்றிக் கொண்டேபோனார் தேவிப்பிரியா.

அக்கா இப்படி அடித்துக் கலக்கியதைப்பார்த்த தங்கச்சி மீனா குமாரியும் தன் சத்துக்கு ஆண் நண்பர்களைசேர்க்கஆரம்பித்தார். அக்கா, தங்கச்சியின் இந்த அட்டாக்கில் பல ஆண்கள் சரண்டர் ஆயினர்.

இப்படிப் போய்க் கொண்டிருந்த நிலையில்தான் ஒரு நல்ல நாளில்தான் (யாருக்கு? யாருக்கோ!) கோழிஐசக்கை இருவரும் சந்தித்தனர். டெலிபிலிம் தயாரிப்பு நிறுவனத்தில் வைத்து கோழியை அமுக்கினர்.

தேவிப்பிரியா சிஸ்டர்ஸிடம், தன்னை ஒருசீரியல் தயாரிப்பாளர் கம் பைனான்சியர் என அறிமுகப்படுத்திக்கொண்டார் ஐசக். கூடவே விசிட்டிங் கார்டு ஒன்றையும் தூக்கி நீட்டினார். அதைப் பார்த்த தேவிப்பிரியா, அதில்வீடியோ கடை ஒன்றின் பெயரும், ஐசக்தான் அதன் முதலாளி என்று இருந்ததையும் பார்த்தார்.

அந்த முகவரி தனது வீட்டுக்கு அருகே இருப்பதை அறிந்த தேவிப்பிரியா அடுத்த நாள் மாலையே அங்குதங்கச்சியோடு சென்றார். அக்கா, தங்கச்சியை பாரத்த ஐசக், அளப்பரிய சந்தோஷத்தோடு வரவேற்றார். அவரதுபார்வையில் தேவியை விட மீனா குமாரிக்குத்தான் செமத்தியான வரவேற்பு தென்பட்டது.

நடிக்க விரும்புவதாக தேவிப்பிரியா கூற, ஐசக்கும் கண்டிப்பாக வாய்ப்பு வாங்கித் தருவதாக உறுதியளித்தார்.சொன்னதோடு நிற்காமல் முயற்சிகளும் எடுத்தார். சீரியல் ஒன்றை இயக்கி வந்த தனது நண்பரிடம்தேவிப்பிரியாவை அறிமுகப்படுத்தினார்.

அவரும் தேவிப்பிரியாவுக்கு தனது சீரியலில் சின்னதாக ஒரு வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அதன் பிறகுசான்ஸுகள் அதிகம் வரவில்லை. ஆனால் ஐசக், தேவிப்பிரியா, மீனாகுமாரி அடிக்கடி சந்தித்துக் கொள்ளஆரம்பித்தனர்.

ஒரு நாள் தேவிப்பிரியாவிடம், உன்னை வைத்து ஒரு டெலிபிலிம் தயாரிக்கப் போவதாக ஐசக் கூறியுள்ளார்.அதேசமயம், மீனா குமரியை கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் பிட்டைப் போட்டுள்ளார்.

இந்த டீலை உடனே ஏற்றுக் கொண்டார் தேவிப்பிரியா. இந்த நேரத்தில் ஐசக் குறித்த சில மேட்டர்கள்தேவிப்பிரியாவுக்கு தெரிய வந்துள்ளது. ஐசக்கின் அம்மா குளோரி கவுன்சிலர் எனத் தெரிய வந்ததால் அதைவைத்து ஆதாயம் கிடைக்குமா என கணக்குப் போட்டார்.

குளோரிதான் தேவிப்பிரியாவை டிவிக்கு அறிமுகப்படுத்தினாராம். அதன் பின்னர் சக்தி சீரியலில் நடிக்கும்வாய்ப்பு தேவிப்பிரியாவுக்கு கிடைத்தது.

சக்தியில் நடிக்க ஆரம்பித்த பிறகுதான் தேவிப்பிரியாவுக்கு புது சக்தி கிடைத்தது, நிறைய வாய்ப்புகளும்குவியத் தொடங்கின. நெளிவு சுளிவுகளை நீக்கமற கற்றுக் கொண்ட தேவிப்பிரியாவும் கலக்க ஆரம்பித்தார்.

தனது ஏறுமுகத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட ஐசக்கை தேவிப்பிரியா மிகவும மதிக்க ஆரம்பித்தார். வாரஇறுதி நாட்களை ஐசக்குக்காக ஒதுக்க ஆரம்பித்தார். இருவரும் சேர்ந்து போகும் இடம் தி கிரேட் கிழக்குகடற்கரைச் சாலைதான். கூடவே கொடுக்கு மீனாகுமாரியும் போவாராம்.

மீனா குமாரியை கல்யாணம் செய்து கொள்வதாக முதலில் சொல்லிய ஐசக், அதை அப்படியேகண்டுகொள்ளாம்விட்டு விட்டார். மற்றபடி நட்பை மட்டும் விடாமல் வைத்துக் கொண்டார்.

இந்த மூன்று பேரும் சந்தோஷமாக, உற்சாகமாக, கொண்டாட்டமாக இருப்பது போன்ற சிடிக்கள் ஏற்கனவேகாக்கிகள் வசம் உள்ளதாம்.

இப்படி ஐசக்குடன் ஒரு டிராக் ஒடிக் கொண்டிருந்த நிலையில் பக்கவாட்டிலேயே, நடிகர் மாஸ்டர் சுரேஷ் எனும்உதய்கிரணுடனும் நட்பு பாராட்டி வந்தார் தேவிப்பிரியா. உதய்கிரணின் தங்கச்சிதான் நடிகை சுஜிதா. இருவரும்நிறையப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக திறமை காட்டியவர்கள்.

தேவிப்பிரியாவின் திரைமறைவு லீலைகள் சுரேஷுக்குத் தெரிய வர, திகிலாகிப் போன அவர், ஆத்தாடிவிட்டுடுத்தா என்று கூறி கழன்று கொண்டார். ஆனால் இது தேவிப்பிரியாவை பெரிதாக பாதிக்கவில்லை.கோழியும், கும்மாளமுமாக கன ஜோராக இருந்தார்.

இப்படியே போய்க் கொண்டிருந்தால் சரிப்பட்டு வராது, முறைப்படி போணி பண்ணலாம் எனமுடிவெடுத்துத்தான் ஐசக்கை மணக்க முடிவு செய்தார். இநத நேரம் பார்த்துத்தான் ஐசக்கின் முதல் மனைவிஸ்டெல்லா, 2வது மனைவி ஹேமமாலினி மூலம் வந்து சேர்ந்தது வம்பு.

ஆனால் தெம்பு ஜாஸ்தியான தேவிப்பிரியாவோ ரகசிய இடத்தில் வைத்து ஐசக்கை மணந்து சாதித்து விட்டார்.

ஐசக்கை மணந்து விட்டாலும் கூட தன் மீது குண்டக்க மண்டக்க வழக்குகள் போடப்பட்டுள்ளதால் தற்காலிகமாகதிரைமறைவு வாழ்க்கையைத் தொடர தேவிப்பிரியா முடிவு செய்துள்ளாராம்.

இப்போது தேவிப்பிரியா மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ஸ்டெல்லாவை கொலை செய்ய முயற்சித்தது, ஸ்டெல்லாவை ஐசக் வரதட்சணை கேட்டுகொடுமைப்படுத்தியதில் உடந்தையாக இருந்தது, ஹேமமாலினியை கொலை செய்வதாக மிரட்டியது, கொலைசெய்ய முயற்சித்தது, 2வது மனைவியான ஹேமமாலினி உயிருடன் இருக்கும்போதே ஐசக்கை மணந்தது,நீதிமன்ற உத்தரவுப்படி முன்ஜாமீன் பெற நீதிமன்றத்தில் சரண் அடையாமல் இருந்தது என வழககுகள்தேவிப்பிரியா மீது உள்ளன.

இந்த வழக்குகள் தவிர தேவிப்பிரியா மீது ப்ளூ பிலிமில் ஆபாசமாக நடித்த வழக்கையும் பதிவு செய்யபோலீஸார் காத்துக் கொண்டுள்ளனர்.

Read more about: who is devipriya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil