»   »  தேவியின் ஐசக் நாளை சரண்?

தேவியின் ஐசக் நாளை சரண்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

2வது மனைவி ஹேமமாலினியைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில்முன்ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து கோழிப்பண்ணை அதிபர் வில்லியம் ஐசக், நாளை நடிகைதேவிப்பிரியாவுடன் சேர்ந்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை தேவிப்பிரியாவும், ஐசக்கும் சேர்ந்து நள்ளிரவில் காரில் அடியாட்களுடன் சென்று ஹேமமாலினியை நடுரோட்டில் வழிமறித்து கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக போலீஸில் புகார் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தேவிப்பிரியாவுக்கு ஏற்கனவே முன்ஜாமீன் கிடைத்து விட்டது. இதையடுத்து சமீபத்தில் அவர்நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இந்த நிலையில், ஐசக்கும் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில்மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ரகுபதி முன்னிலையில் இன்று விசாரைணக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஐசக்கிற்குமுன்ஜாமீன் வழங்கினார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ. 5,000க்கு சொந்த ஜாமீன் மற்றும்அதே தொகைக்கு இரு நபர் ஜாமீன் செலுத்தி முன்ஜாமீன் பெறலாம் என நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.

இதைத் தொடர்ந்து ஐசக் நாளை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைவார், அப்போது தேவிப்பிரியாவும்அவருடன் வந்து தங்களது திருமணத்தையும், நெருக்கத்தையும் உறுதி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more about: isac to surrender tomorrow

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil