»   »  டும் டும்-தேவிப்பிரியா டென்ஷன்!

டும் டும்-தேவிப்பிரியா டென்ஷன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனக்கும், ஐசக்குக்கும் கல்யாணம் குறித்த தகவல்களை யார் கூறுகிறார்கள் என்று அடையாறு காவல் நிலையத்தில் ஆவேசமாக கேட்டு பரபரப்பைஏற்படுத்தினார் நடிகை தேவிப்பிரியா.

கோழிப்பண்ணை மற்றும் வீடியோ கடை அதிபர் வில்லியம் ஐசக்கை மணக்கப் போவதாக நடிகை தேவிப்பிரியா அறிவித்த அடுத்த ஓரிருநாட்களிலேயே சர்ச்சை வெடித்தது.

வில்லியம் ஐசக்கின் முதல் மனைவியான ஸ்டெல்லா போலீஸில் வரதட்சணை பொருட்களை ஐசக் திரும்பத் தரக் கோரி புகார் கொடுத்தார். அதன்பேரில் ஐசக்கின் தாயார் கைது செய்யப்பட்டார். அவர் தலைமறைவாகி விட்டார்.

தனது புகாரில், ஐசக் குறித்த பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார் ஸ்டெல்லா. இதைத் தொடர்ந்து இன்னொரு வெடி வெடித்தது. ஐசக்கின்2வது மனைவி ஹேமமாலினி, ஐசக் மீதும், தேவிப்பிரியா மீதும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.

அத்தோடு தேவிப்பிரியாவும், ஐசக்கும் தன்னைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இப்படி அடுக்கடுக்காக தேவிப்பிரியா மீ"தும், ஐசக்மீதும் பல்வேறு புகார்கள் கிளம்பின. தேவிப்பிரியாவின் மறுபக்கம், ஐசக்கின் அடுத்த பக்கம் என கதை கதையாக பல செய்திகள் கிளம்பி தமிழகமக்களின் வாய்க்கு பெரும் அவலாக அமைந்தன.

தேவிப்பிரியா, ஐசக் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் நீதிமன்றத்தில் சரணடைந்து முன்ஜாமீன் பெற்றனர் இருவரும்.ஹேமமாலினியை மிரட்டிய வழக்கில் இருவரும் கடந்த 23ம் தேதி ஜோடியாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன்பெற்றனர்.

அதன் பின்னர் நீதிமன்ற நிபந்தனைப்படி அடையாறு காவல் நிலையத்தில் தேவிப்பிரியாவும், ஐசக்கும் நேற்று நேரில் ஆஜராகிகையெழுத்திட்டனர்.

பின்னர் வெளியே வந்த தேவிப்பிரியா செய்தியாளர்களிடம் சில வார்த்தை பேசினார்.

அப்போது, நான் தலைமறைவாக இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் நான் எங்கும் ஓடிப் போய் விடவில்லை. எனது அத்தை வீட்டில்தான்தங்கியிருந்தேன்.

எனக்கும், ஐசக்கிற்கும் விரைவில் அதிகாரப்பூர்வமாக கல்யாணம் நடக்கும். எல்லோரையும் கல்யாணத்திற்கு அழைப்பேன்.

என் மீது ஹேமமாலினி கொடுத்த புகாரில் கொஞ்சமும் உண்மை இல்லை. அதைப் பார்த்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். அந்தப் புகார்கள்அத்தனையும் பொய் என்றார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் காவல் நிலையம் வந்த இருவரும் கையெழுத்திட்டனர். அப்போது அங்கிருந்த போலீஸாரிடம் ஆவேசமாகபேசினார் தேவிப்பிரியா.

நானும், ஐசக்கும் நாளை (மார்ச் 5ம் தேதி) பதிவுத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக உங்களிடம் கூறியதாக வெளியில் பேச்சுகிளம்பியுள்ளது. இப்படிப்பட்ட தகவலை யார் வெளியிட்டது என்று வேகமாக கேட்டார் தேவிப்பிரியா. ஆனால் அதற்கு போலீஸார் யாரும் பதில்தரவில்லை, அமைதியாக இருந்தனர்.

பின்னர் வெளியில் வந்த தேவிப்பிரியா அங்கு கூடியிருந்த செய்தியாளர்களைப் பார்த்து கோபமாக யார் உங்களுக்கு நானும், ஐசக்கும் கல்யாணம்செய்து கொள்ளப் போவதாக கூறினார்கள் என்றார். செய்தியாளர்களும் அதற்குப் பதில் ஏதும் தரவில்லை.

இதனால் கடுப்பான தேவிப்பிரியா ஐசக்குடன் அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்று விட்டார்.

இதற்கிடையே, தேவிப்பிரியாவும், ஐசக்கும் நாளை அதிகாரப்பூர்வமாக பதிவுத் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக போலீஸ் தரப்பில் உறுதியாககூறுகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil