»   »  தேவிப்பிரியா-ஹேமமாலினி திடீர் ஹாய்

தேவிப்பிரியா-ஹேமமாலினி திடீர் ஹாய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேவிப்பிரியாவும், ஹேமமாலினியும் திடீர் என சமரசமாகியுள்ளனர். தேவிப்பிரியா, ஐசக்கைத் திருமணம் செய்து கொள்ள ஹேமமாலினிவாழ்த்துத் தெரிவித்து, தேவிப்பிரியாவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளாராம்.

நீதிமன்றத்தில் சரண்டைந்து முன்ஜாமீன் பெற்றுள்ள தேவிப்பிரியா, நீதிமன்ற நிபந்தனைப்படி அடையாறு காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகிகையெழுத்துப் போட்டு வருகிறார்.

நேற்று வழக்கம் போல கையெழுத்துப்போட வந்த தேவிப்பிரியா, போலீஸாரிடம் ஒரு செய்தியைத் தெரிவித்தார். அதாவது, தனக்கு ஹேமமாலினிஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளதாகவும், அதில், ஐசக்குடன் உங்களது திருமண வாழ்க்கை இனிதாக அமைய வாழ்த்துக்கள் என்றுதெரிவித்துள்ளதாகவும் கூறினார் தேவிப்பிரியா.

அத்தோடு அந்த எஸ்.எம்.எஸ்ஸையும் போலீஸா>டம் காட்டினாராம். அதைப் பார்த்த போலீஸார் குழப்பமடைந்தனர். ஆனால் அதைக்கண்டுகொள்ளாத தேவிப்பிரியா, இனிமேல் பிரச்சினை இருக்காது, ஹேமமாலினி சமரசமாகி விடுவார். எங்களது கல்யாணத்தில் இனி பிரச்சினைஇருக்காது என்று ஸ்டைலாக ஒரு சிரிப்பையும் சிந்தி விட்டு கிளம்பிச் சென்றார்.

கொலை செய்து விடுவதாக மிரட்டினார், கொலை செய்ய வந்தார் என்றெல்லாம் கூறி படு ஆவேசமாக தேவிப்பிரியா மீதும், ஐசக் மீதும்ஹேமமாலினி போலீஸில் கொடுத்த புகாரின்பேரில்தான் அவர்களைக் கைது செய்ய போலீஸார் கடுமையாக முயன்றனர். இந்த வழக்கில்தான்இருவரும் முன்ஜாமீன் பெற்று கையெழுத்துப் போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஹேமமாலினி வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளதாக தேவிப்பிரியா கூறியுள்ளது பல கேள்விக்குறிகளை எழுப்பியுள்ளது.

ஹேமமாலினிக்கு உரிய விலையை தேவிப்பிரியா தரப்பு பேசி முடித்து விட்டதையே இது வெளிக்காட்டுவதாக போலீஸ் தரப்பில் கூறுகிறார்கள்.உரிய விலை கிடைக்காததால்தான் ஹேமமாலினியும் தொடர்ந்து புகார் கொடுத்து வந்திருப்பார் எனவும் போலீஸ் தரப்பில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஹேமமாலினி மனைவியே அல்ல: ஐசக்

இதற்கிடையே, எனது வாழ்க்கையில் ஸ்டெல்லா ஒருவரை மட்டுமே கல்யாணம் செய்து கொண்டேன். அது ஒத்து வராததால் விவகாரத்து செய்துவிட்டேன். ஹேமமாலினியை நான் கல்யாணமே செய்து கொள்ளவில்லை என்று ஐசக் கூறியுள்ளார்.

முதல் மனைவி ஸ்டெல்லா தொடர்ந்த வழக்கில் நேற்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஐசக்குக்கு முன்ஜாமீன் கிடைத்தது. இதற்காக நேரில்சரணடைய வந்திருந்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனக்கு 3 கல்யாணம் எல்லாம் ஆகவில்லை சார். ஸ்டெல்லாவை மட்டுமேநான் மணந்தேன். அவரையும் கூட நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்து விட்டேன்.

அதன் பின்னர் தேவிப்பிரியாவை உயிருக்கு உயிராக காதலிக்கத் தொடங்கினேன். இருவரும் விரைவில் கல்யாணம் செய்து கொள்ளவுள்ளோம்.அனைவருக்கும் பத்திரிக்கை கொடுத்து, முறைப்படி சிறப்பாக திருமணம் செய்யப் போகிறோம்.

அதற்குள் நான் மோசமானவன், பெண்கள் விஷயத்தில் கேவலமானவன் என்றெல்லாம் செய்தி போட்டு விட்டனர். நான் ஒரு சாதாரண வீடியோகடை உரிமையாளர் அவ்வளவுதான்.

தேவிப்பிரியாவும், நானும் ஸ்டெல்லாவையோ அல்லது ஹேமமாலினியையோ மிரட்டவில்லை. நாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. மேலும்,ஹேமமாலினி எனது மனைவியும் கிடையாது. எனது வீடியோ கடையின் ஆயுத பூஜை விழாவுக்கு வந்தபோது அவர் என்னுடன் புகைப்படம்எடுத்துக் கொண்டார். இதேபோல பலரும் புகைப்படம் எடுத்துள்ளனர்.

என் மீதான வழக்குகளை முறைப்படி நான் நீதிமன்றம் மூலம் சந்தித்து நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்றார் ஐசக்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil