பி.சி.ஸ்ரீராம் வசம் தாம் தூம்!!

By Staff

மறைந்த இயக்குநர் ஜீவா இயக்கி வந்த தாம் தூம் படத்தின் மிச்சமுள்ள பாடல் காட்சிகள் மற்றும் பிற காட்சிகளை அவரது குருவும், ஒளிப்பதிவாளருமான பி.சி.ஸ்ரீராம் இயக்கவுள்ளார்.

ஜெயம் ரவி, கங்கனா ரணவத் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வந்த தாம் தூம் படத்தை ஜீவா இயக்கி வந்தார். படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றிருந்தபோது மாரடைப்பால் துரதிர்ஷ்டவசமாக இறந்தார் ஜீவா.

இந்த நிலையில் தாம் தூம் படத்தை யார் இயக்கப் போவது என்ற கேள்வி எழுந்தது. ஜெயம் ரவியின் அண்ணனா இயக்குநர் ஜெயம் ராஜாதான் மிச்ச காட்சிகளை இயக்குவார் என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால் தற்போது ஜெயம் ரவி பொம்மரிலு படத்தின் ரீமேக்கில் (படத்தின் பெயர் சந்தோஷ சுப்ரமணி) ராஜா பிசியாக உள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிதான் நடிக்கிறார். எனவே தன்னால் தாம் தூம் படத்தின் மீதக் காட்சிகளை இயக்க முடியாத நிலை இருப்பதாக தாம் தூம் பட தயாரிப்பாளரிடம் தெரிவித்தார் ராஜா.

இதையடுத்து பி.சி.ஸ்ரீராம் வசம் தாம் தூம் படத்தை முடிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம். ஜீவாவின் குரு ஸ்ரீராம். ஜீவா இயக்கி வந்த படத்தின் மீதக் காட்சிகளை இயக்கும் பொறுப்பை ஸ்ரீராமும் ஏற்றுக் கொண்டாராம்.

தற்போது பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளதாம். தேவைப்பட்டால் சில காட்சிகளை கூடுதலாக சேர்க்கத் திட்டமிட்டுள்ளனராம்.

ஸ்ரீராம் இதற்கு முன்பு கமல் நடித்த குருதிப்புணல், வானம் வசப்படும் ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X