அந்த நடிகையை பத்தி நா சொன்னப்ப தனுஷ் கூட நம்பல... செல்வராகவன் சொன்ன சுவாரஸ்ய தகவல்

சென்னை: பொதுவாக சினிமா துறையில் ஒரு நடிகர் இன்னொரு நடிகரின் எதிர்கால வளர்ச்சியை பற்றி பேச மாட்டார்கள். காரணம், தன்னம்பிக்கையின்மையை தாண்டி, தொழில் போட்டி உள்ளே வந்துவிடும்.

ஒரு நடிகர் எதிர்காலத்தில் வீழ்ச்சியடைவான் என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் லைட் மேன் கூட கண்டுபிடித்துவிடுவார். ஆனால் ஒரு நடிகரின் வளர்ச்சி இப்படி இருக்கும் என்று பெரும்பாலும் யூகிக்க கூடியவர்கள் இயக்குநர்களே.

அப்படி யூகிக்கப்பட்ட நடிகர்கள் பற்றியும், யூகித்த இயக்குநர்கள் பற்றியும் இந்தக் கட்டுரையில் காணலாம்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் முதல் படத்தில் நடிக்கும் முன்னரே கமல் ஹாசனின் திறமையை தமிழ் மற்றும் மலையாள சினிமா பார்த்துவிட்டது. ஆனால் ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த SP பாலசுப்பிரமணியத்திடம் ரஜினியை கை காட்டி,"இந்தப் பையன் தமிழ் சினிமா மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே புகழ் மிக்க நடிகனாக மாறுவான்" என்று பாலச்சந்தர் கூறினாராம். அப்போது தலை முடி கூட வாராமல், ஒரு சாதாரன மனிதனாக ரஜினி SPB கண்ணில் பட்டுள்ளார். பாலச்சந்தர் பேச்சு வாக்கில் கூறியதாக SPB மனதில் நினைத்துக் கொண்டதாகவும், ஆனால் அவர் கணித்தது போலவே நடந்ததாகவும் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

 எதிர் நீச்சல்

எதிர் நீச்சல்

தனுஷ் தயாரித்து சிவ கார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருந்த எதிர் நீச்சல் திரைப்படத்தை செல்வராகவனிடம் போட்டுக் காண்பித்துள்ளார் தனுஷ். படத்தை பார்த்துவிட்டு,"அடுத்த பெரிய ஹீரோ இந்தப் பையன்தான்" என்று செல்வா கூறினாராம். அவர் கூறியது போலவே இன்று சிவ கார்த்திகேயனின் வளர்ச்சி அசுரத்தனமாக உள்ளது. இந்தத் தலைமுறை நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக மாறிக் கொண்டிருக்கிறார்.

 நம்பாத தனுஷ்

நம்பாத தனுஷ்

இயக்குநர் ஹரி இயக்கத்தில், நடிகர் சரத் குமாருக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான நடிகை நயன்தாராவை, அந்தப் படம் வெளியானபோது,"இந்த நடிகை எதிர்காலத்தில் பெரிதாக சாதிப்பார்" என்று பலரிடமும் சொன்னாராம் செல்வராகவன். அவர் கூறியபோது தனுஷ் கூட நம்பவில்லையாம். ஆனால் செல்வராகவன் கூறியது போல நயன்தாரா இன்று லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தனித்து நடித்து வெற்றிப் படங்களையும் கொடுத்துள்ளார்.

 தயாரித்த தனுஷ்

தயாரித்த தனுஷ்

அண்ணன் சொல்லியதை நம்பாத அதே தனுஷ் தான் பிற்காலத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நயன்தாராவை விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். வளர்ந்து வந்த விஜய் சேதுபதியுடன் நயன்தாரா நடிக்கிறார் என்ற செய்திதான் அப்படத்தின் பெரிய புரமோஷனாக அமைந்தது. அதேபோலத்தான் '3' படத்தில் நகைச்சுவை நடிகராக நடிக்க வைத்து, பின்னர் எதிர் நீச்சல் திரைப்படத்தில் ஹீரோவாக்கி அதன் பின் காக்கிச் சட்டை என்கிற கமர்சியல் படத்திலும் சிவாவை தனது தயாரிப்பில் நடிக்க வைத்தார் தனுஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X