தனுஷ் முதல் ஏ.ஆர். ரஹ்மான் வரை.. தமிழ்நாட்டில் அதிகரித்த Grey Divorce.. இதுதான் காரணமா?

சென்னை: பாலிவுட்டில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப் போவதாகவும் அபிஷேக் பச்சன் Grey Divorce போஸ்ட்டுக்கெல்லாம் லைக் போட்டு ஷேர் செய்துள்ளார் என ஏகப்பட்ட தகவல்கள் பரவின. ஆனால், அவர்கள் இருவரும் விவாகரத்து வதந்திகளை தொடர்ந்து உடைத்து வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பல பிரபலங்கள் விவாகரத்து அறிவிப்பை அறிவித்து அதிர்ச்சியை கிளப்பியுள்ளனர்.

நரைகூடி போனாலும் உன் கரம் கோர்த்து கடைசி வரை நடப்பேன் என்கிற காலமெல்லாம் மாறிவிட்டது என்றும் குழந்தை பிறந்து வளர்ந்து விட்டாலே என் ரூட் தனி உன் ரூட் தனி என பிரிந்துச் செல்லும் நிலைக்கு பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் வந்துவிட்டனர் என மனோதத்துவ நிபுணர்கள் மற்றும் விவாகரத்து வழக்கறிஞர்கள் எல்லாம் இந்த Grey Divorce குறித்து அதிகம் பேச ஆரம்பித்துள்ளனர்.

ar rahman

பாலிவுட்டில் அமீர்கான் தனது 2வது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்ததில் இருந்தே இந்த வார்த்தை அதிகளவில் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. சகித்துக் கொண்டு ஏன் போக வேண்டும் என்கிற முடிவு தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என்கின்றனர்.

Grey Divorce என்றால் என்ன?: சால்ட் அண்ட் பெப்பராக கிரே கலரில் தலைமுடி நரைத்த பின்னர் பல ஆண்டுகளாக நடத்தி வந்த குடும்ப வாழ்க்கையில் இருந்து கணவன் மற்றும் மனைவி பலவித காரணங்களுக்காக விவாகரத்து கோரி பிரிவது தான் இந்த Grey Divorce. நடிகர் தனுஷ் முதல் ஏ.ஆர். ரஹ்மான் வரை தமிழ்நாட்டில் இப்படி பல வருட திருமண வாழ்க்கையை ஒரே ஒரு போஸ்ட் மூலம் முடித்துக் கொண்ட பிரபலங்களை பற்றி பார்ப்போம்.

ar rahman

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து: கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி பொங்கல் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் சந்தோஷமாக இருந்து வந்த நிலையில், அதிரடியாக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களின் 17 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அறிவித்தது தான் சமீபத்தில் தமிழ் சினிமாவை பெரிதும் உலுக்கி எடுத்தது. அதனை தொடர்ந்து தான் இங்கே Grey Divorce பிரச்சனை பெரிதாக சூடு பிடித்தது. சூப்பர் ஸ்டாரின் மகளுக்கே இந்த நிலைமையா? என்றும் தனுஷ் - ஐஸ்வர்யா காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இரண்டு மகன்களும் நன்றாக வளர்ந்துள்ள நிலையில், இப்படியொரு முடிவை எடுக்கலாமா என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பின. விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு இருவரும் படம் இயக்குவதில் அதிக ஆர்வத்தை செலுத்தி வருகின்றனர்.

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து: அடுத்த காதல் பறவைகளாக கோலிவுட்டில் வலம் வந்த ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தாஜ்மகாலுக்கு எல்லாம் கடைசியாக சென்று விதவிதமாக ரொமாண்டிக் போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி தங்களை போல காதலர்களே உலகில் இல்லை என்பது போல புகைப்படங்களை வெளியிட்டனர். ஆனால், திடீரென இந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி ஜெயம் ரவி தனது மனைவிக்கே தெரியாமல் தனிப்பட்ட முறையில் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 15 ஆண்டுகால திருமண வாழ்க்கையை ஜெயம் ரவி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார். அவருடைய இரு மகன்களும் பதின்ம பருவத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ar rahman

ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு டைவர்ஸ்: சமீபத்தில் தான் ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது ஏ.ஆர். ரஹ்மான் சகோதரிக்கே மனக்கஷ்டத்தை கொடுத்திருந்தது. இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானை பிரியப்போவதாக சாய்ரா பானு அறிவித்திருப்பது அவரது குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 29 ஆண்டுகள் காதலுடன் வாழ்ந்து வந்த இவர்களா விவாகரத்து செய்து பிரியப்போகின்றனர் என்றும் இந்த கிரே டைவர்ஸில் அப்படி என்ன தான் பிரச்சனை என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கிரே டைவர்ஸ் நடப்பது ஏன்?: பொதுவாக புதிதாக திருமணம் ஆகி வாழ்க்கையை புரிந்துக் கொள்ளாமல் ஏகப்பட்ட இளம் வயதினர் விவாகரத்து செய்து பிரிந்து வருவதை அதிகளவில் இந்த சமூகம் பார்த்திருக்கும். ஆனால், பல வருடங்கள் திருமண உறவில் இருந்துவிட்டு கணவரை பற்றி மனைவிக்கும் மனைவி பற்றி கணவருக்கும் நன்றாக புரிதல் உள்ள நிலையில், இருவரும் பிரிய முக்கிய காரணமாக ஈகோ தான் இருக்கும் என்று கூறுகின்றனர். திருமண உறவுக்கு முக்கியமே நம்பிக்கை தான். அந்த நம்பிக்கையை ஒருவர் உடைக்கும் இடத்தில் இந்த விவாகரத்து பிரச்சனை அதிகரிக்கும் என்கின்றனர். சகிப்புத்தன்மை குறையும் இடத்திலும் தவறான புரிதல் காரணமாகவும் இது நடப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X