நம்ம மன்மத ராசாவுக்கு இன்று 30வது பிறந்தநாள்
சென்னை: தனுஷ் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.
தந்தை கஸ்தூரி ராஜாவின் படமான துள்ளுவதோ இளமை படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் தனுஷ். அதன் பிறகு அவர் நடித்த காதல் கொண்டேன் ஹிட்டானது. பின்னர் திருடா திருடி படத்தில் சாயா சிங்குடன் சேர்ந்து அவர் ஆடிய மன்மத ராசா பாடல் பட்டி தொட்டியெல்லாம் பல நாட்கள் ஒலித்தது.
இப்படி படிப்படியாக முன்னேறி வந்தவர் தனுஷ்.

ஐஸ்வர்யா
தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்தார்.

2 மகன்கள்
தனுஷ், ஐஸ்வர்யா ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என்று 2 மகன்கள் உள்ளனர்.

ரூ.100 கோடி வசூல்
தனுஷ் ராஞ்ஹனா படம் மூலம் கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்றார். அவர் நடித்த முதல் இந்தி படமே ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.

லண்டனில் கொண்டாட்டம்
தனுஷ் இன்று தனது 30வது பிறந்தநாளை லண்டனில் தனது குடும்பத்தாருடன் கொண்டாடினார்.
Comments


Click it and Unblock the Notifications