»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

பாலுமகேந்திரா இயக்கத்தில் தனுஷ் நடிக்கப் போகும் அது ஒரு கனாக் காலம் படம் மலையாள செக்ஸ்படங்களுக்கு போட்டியாக இருக்கப் போகிறதாம்.

இதில் தன்னை விட 15 வயது மூத்த ரம்யா கிருஷ்ணன் மீது ஆசை கொள்ளும் 19 வயது விடலைப் பையமானநடிக்கப் போகிறாராம் தனுஷ்.

சமீபத்தில் மனிஷா கொய்ராலா நடிக்க இந்தியில் வெளியான ஏக் சோட்டிசி லைவ்ஸ்டோரியை விடவும் படு சூடான கதையாம்.

தனுஷின் வீட்டில் தங்க வருகிறார் ஆண்டி ரம்யா கிருஷ்ணன். அப்போது அவர் மீது தனுஷுக்கு பற்றிக்கொள்கிறது. அவரை மறைந்து மறைந்து பல கோணங்களிலும் பார்க்கும் தனஷ், அவரால் எப்படியெல்லாம்பாதிக்கப்படுகிறான், அவரிடம் தன்னை எந்தெந்த மாதிரி இழக்கிறான் என்பது தான் கதை.

திருமணம் ஆகிவிட்டாலும் இதில் கவர்ச்சியை அள்ளிக் கொட்டுவதாக உறுதி தந்துவிட்டாராம் ரம்யா. இதனால்படு குஷியில் இருக்கிறார் பாலு மகேந்திரா.

இது கிட்டத்தட்ட தனது சொந்தக் கதை போலத் தான் என்று மனம் திறந்து சொல்கிறார் பாலு மகேந்திரா. டீன் ஏஜ்பருவத்தில் லேசாக முட்டி முளைக்கும் பாலியல் உணர்வும், காதலும் பாடாய் படுத்துமே. அதைத் தான் இதில்சொல்லப் போகிறேன். என் வீட்டிலும் ஒரு ஆண்டி வந்து தங்கினார். அப்போது நான் அனுபவித்த அவஸ்தைகளைஇந்தப் படத்தில் பேசப் போகிறேன்.

இது எனது அழியாத கோலங்கள் படத்தின் இன்னொரு பாகமாக இருந்தாலும் ஆச்சரியமில்லை. பிரதாப்போத்தனும் ஷோபாவும் கேரக்டர்களாகவே வாழ்ந்தார்கள். அது போலவே இதுவும் இருக்கும். அதே நேரம்இன்றைய டிரெண்ட்படி படு மார்டனாக, இளமைத் துள்ளலுடன் படத்தை எடுக்கப் போகிறேன்.

டீன் ஏஜைக் கடந்த ஒவ்வொருக்கும் அந்தப் பருவத்தை மீண்டும் நினைவில் கொண்டு வந்து நிறுத்தும் இந்தப் படம்என்கிறார் பாலு.

தனுஷ். சாயா சிங் நடிக்கும் திருடா, திருடி முடிந்துவிட்டதால் அடுத்த மாதம் அது ஒரு கனாக் காலம் சூட்டிங்தொடங்குகிறதாம்.

தனுஷ் நடிக்கப் போகும் அடுத்த இரு படங்களின் தலைப்புகள்: புதுக்கோட்டையில் இருந்து சரவணன், காதல்னாசும்மாவா? !!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil