விலைபோகாமல் திணறும் தனுஷ் படம்! தனுஷ், ப்ரியா மணி நடித்து, பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள அது ஒரு கனாக்காலம் படம் பெரிய விலைக்குக்கேட்கப்படாததால் படம் விற்பனையாகாமல் தத்தளித்து வருகிறது.தனுஷ் மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள படம் அது ஒரு கனாக்காலம். புதுக்கோட்டை சரவணன் படத்திலிருந்து அவருக்குஇறங்குமுகம்தான். வரிசையாகத் தோல்விப்படங்களாக தந்து கொண்டுள்ளதால் தனுஷ் படத்திற்கு முன்பு இருந்தமாபெரும் மார்க்கெட் இப்போது பெட்டிக் கடை அளவுக்கு சுருங்கிப் போய் விட்டது.இதன் காரணமாக, அட்டகாசமாக வந்திருந்தும் அது ஒரு கனாக்காலம் படம் நல்ல விலைக்குப் கேட்கப்படாததால் படம்விற்பனையாகாமல் உள்ளது. இதனால் தனுஷ் தரப்பு அப்செட் ஆகிக் காணப்படுகிறது.அதேபோல அப்செட் ஆகிக் காணப்படுகிறவர் பாலுமகேந்திரா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலு மகேந்திர இயக்கியுள்ளஇப்படம், அவர் அணு அணுவாக ரசித்து எடுக்கப்பட்டது. மிகவும் ஈடுபாட்டுடன் எடுத்துள்ள இந்தப் படம் சரியான விலைக்குகேட்கப்படாத காரணத்தால் பாலுவும் அப்செட்டாக உள்ளார். பொதுவாக பாலுவின் படங்கள் அதிக விலைக்கு வாங்கப்படுவதில்லை. இதனால் இந்தப் படத்தில் தனுஷ் இருந்தும் கூட,வழக்கமான விலைக்கே விநியோகஸ்தர்கள் கேட்கிறார்களாம்.அது ஒரு கனாக்காலம் படத்தில் இத்தனைக்கும் ஏகப்பட்ட பிளஸ் பாயிண்டுகள் உள்ளன. இசைஞானியின் அட்டகாசமானஇசையில் அருமையான பாடல்கள் படத்துக்குப் பெரும் வலுவைக் கொடுத்துள்ளன. பாடல் கேசட்டுகள் விறுவிறுப்பாகவிற்பனையாகியுள்ளதாக மார்க்கெட் நிலவரம் கூறுகிறது.அதேபோல தனுஷும், ப்ரியா மணியும் போட்டி போட்டு நன்றாக நடித்திருக்கிறார்களாம். இதுபோதாதென்று, தேஜாஸ்ரீயின்கெட்ட ஆட்டமும் படத்தில் உள்ளது. இத்தனை இருந்தும் படம் நல்ல விலைக்குப் போகாததால் தனுஷ், பாலு தரப்புமட்டுமல்லாமல் ப்ரியா மணியும் அப்செட் ஆகிப் போகியுள்ளார். இந்தப் படம் வந்தால் தனக்கு தமிழில் நல்ல பிரேக் கிடைக்கும் என நினைத்திருந்தார் ப்ரியா. அதில் கொஞ்சம் போலமண்ணைப் போட்டு விட்டார்கள் விநியோகஸ்தர்கள்.இதற்கிடையே இந்தப் படத்தை நல்ல விலைக்கு வாங்குமாறு தனக்கு மிகவும் நெருக்கமான விநியோகஸ்தர்களிடம் தனுஷின்மாமனார் (அதாங்க நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி) அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம். ஒரு வேளை படம் கையை கடித்து விட்டால் நான் உங்களை தனியாக கவனித்துக் கொள்கிறேன் என்று விநியோகஸ்தர்களிடம்ரஜினி வாக்குறுதி அளித்துள்ளாராம். ஏற்கனவே ரஜினி படத்திற்கே அப்படி ஒரு அனுபவம் உண்டு.பாபா படம் சரியாக போகாததால் அந்தப் படத்தை வாங்கி பெரும் நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்களுக்கு ரஜினி பணத்தைதிரும்பக் கொடுத்து விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்துள்ளார். இதனால் ரஜினியை நம்பிவிநியோகஸ்தர்கள் தனுஷின் படத்தை வாங்க தயாராவார்கள் என்று தெரிகிறது. எனவே மருமகனின் படத்திற்கு மாமனாரால் விரைவில் விடிவு காலம் பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.அது ஒரு கனாக் காலம் வரும் காலம் எப்போதோ?

By Staff

தனுஷ், ப்ரியா மணி நடித்து, பாலுமகேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள அது ஒரு கனாக்காலம் படம் பெரிய விலைக்குக்கேட்கப்படாததால் படம் விற்பனையாகாமல் தத்தளித்து வருகிறது.

தனுஷ் மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள படம் அது ஒரு கனாக்காலம். புதுக்கோட்டை சரவணன் படத்திலிருந்து அவருக்குஇறங்குமுகம்தான். வரிசையாகத் தோல்விப்படங்களாக தந்து கொண்டுள்ளதால் தனுஷ் படத்திற்கு முன்பு இருந்தமாபெரும் மார்க்கெட் இப்போது பெட்டிக் கடை அளவுக்கு சுருங்கிப் போய் விட்டது.

இதன் காரணமாக, அட்டகாசமாக வந்திருந்தும் அது ஒரு கனாக்காலம் படம் நல்ல விலைக்குப் கேட்கப்படாததால் படம்விற்பனையாகாமல் உள்ளது. இதனால் தனுஷ் தரப்பு அப்செட் ஆகிக் காணப்படுகிறது.

அதேபோல அப்செட் ஆகிக் காணப்படுகிறவர் பாலுமகேந்திரா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலு மகேந்திர இயக்கியுள்ளஇப்படம், அவர் அணு அணுவாக ரசித்து எடுக்கப்பட்டது. மிகவும் ஈடுபாட்டுடன் எடுத்துள்ள இந்தப் படம் சரியான விலைக்குகேட்கப்படாத காரணத்தால் பாலுவும் அப்செட்டாக உள்ளார்.


பொதுவாக பாலுவின் படங்கள் அதிக விலைக்கு வாங்கப்படுவதில்லை. இதனால் இந்தப் படத்தில் தனுஷ் இருந்தும் கூட,வழக்கமான விலைக்கே விநியோகஸ்தர்கள் கேட்கிறார்களாம்.

அது ஒரு கனாக்காலம் படத்தில் இத்தனைக்கும் ஏகப்பட்ட பிளஸ் பாயிண்டுகள் உள்ளன. இசைஞானியின் அட்டகாசமானஇசையில் அருமையான பாடல்கள் படத்துக்குப் பெரும் வலுவைக் கொடுத்துள்ளன. பாடல் கேசட்டுகள் விறுவிறுப்பாகவிற்பனையாகியுள்ளதாக மார்க்கெட் நிலவரம் கூறுகிறது.

அதேபோல தனுஷும், ப்ரியா மணியும் போட்டி போட்டு நன்றாக நடித்திருக்கிறார்களாம். இதுபோதாதென்று, தேஜாஸ்ரீயின்கெட்ட ஆட்டமும் படத்தில் உள்ளது. இத்தனை இருந்தும் படம் நல்ல விலைக்குப் போகாததால் தனுஷ், பாலு தரப்புமட்டுமல்லாமல் ப்ரியா மணியும் அப்செட் ஆகிப் போகியுள்ளார்.

இந்தப் படம் வந்தால் தனக்கு தமிழில் நல்ல பிரேக் கிடைக்கும் என நினைத்திருந்தார் ப்ரியா. அதில் கொஞ்சம் போலமண்ணைப் போட்டு விட்டார்கள் விநியோகஸ்தர்கள்.

இதற்கிடையே இந்தப் படத்தை நல்ல விலைக்கு வாங்குமாறு தனக்கு மிகவும் நெருக்கமான விநியோகஸ்தர்களிடம் தனுஷின்மாமனார் (அதாங்க நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி) அன்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறாராம்.


ஒரு வேளை படம் கையை கடித்து விட்டால் நான் உங்களை தனியாக கவனித்துக் கொள்கிறேன் என்று விநியோகஸ்தர்களிடம்ரஜினி வாக்குறுதி அளித்துள்ளாராம். ஏற்கனவே ரஜினி படத்திற்கே அப்படி ஒரு அனுபவம் உண்டு.

பாபா படம் சரியாக போகாததால் அந்தப் படத்தை வாங்கி பெரும் நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்களுக்கு ரஜினி பணத்தைதிரும்பக் கொடுத்து விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல பெயரை சம்பாதித்துள்ளார். இதனால் ரஜினியை நம்பிவிநியோகஸ்தர்கள் தனுஷின் படத்தை வாங்க தயாராவார்கள் என்று தெரிகிறது.

எனவே மருமகனின் படத்திற்கு மாமனாரால் விரைவில் விடிவு காலம் பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.

அது ஒரு கனாக் காலம் வரும் காலம் எப்போதோ?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X