»   »  தனுசின் திருவிளையாடல்: அக்காவுக்கு நோட்டீஸ்! திருவிளையாடல் ஆரம்பம் என்ற பெயரில் தனுஷ் நடித்து வரும் படத்தின் பெயரை மாற்றக் கோரி, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சமூகப் பேரவை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தனுஷின் சகோதரியான டாக்டர் விமலகீதாவின் பெயரில் அவரது குடும்பத்தினர் திருவிளையாடல் ஆரம்பம்என்ற பெயரில் படத்தைத் தயாரித்து வருகின்றனர். இதில் திருவிளையாடல் என்ற வார்த்தையை மிகப் பெரிதாகவும்,ஆரம்பம் என்பதை மிகச் சிறிய அளவிலும் எழுதி விளம்பரம் செய்திருந்தனர்.இந்தப் படத்தில் தனுஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் பெயருக்கு நடிகர் திலகம்சிவாஜி கணேசன் சமூகப் பேரவை என்ற அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்லது.திருவிளையாடல் என்றால் சிவாஜிதான் நினைவுக்கு வருவார். ஆனால் ஆபாசமான படங்களிலேயே நடித்துப்பழக்கப்பட்ட தனுஷ், அதே படத்தின் பெயரில் நடிக்கும் படத்தில் என்ன மாதிரியான காட்சிகள் இடம் பெறும்என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.எனவே படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரி வருகிறார்கள்.இந் நிலையில் சிவாஜி சமூக பேரவை தலைவர் சந்திரசேகர் சார்பில் தனுசின் சகோதரி விமலகீதாவுக்கு வக்கீல்நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அதில், தனுஷ் நடிக்க, திருவிளையாடல் ஆரம்பம் என்ற பெயரில் தாங்கள் படம் தயாரிக்கப் போவதாகசெய்திகள் வெளியாகியுள்ளன. இது சிவாஜி ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.திருவிளையாடல் என்ற பெயரைச் சொன்னாலே சிவாஜி கணேசன்தான் நினைவுக்கு வருவார். இன்றும் மதநம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த தெய்வீகப் படமாக அது கருதப்படுகிறது.ஆனால் தனுஷ் நடிக்கவிருக்கும் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் தலைப்பில் இடம் பெற்றுள்ள முதல்வார்த்தை பெரிய எழுத்தாகவும், அடுத்த வார்த்தையை சிறிய எழுத்தாகவும் குறிப்பிட்டிருப்பது எனது கட்சிக்காரர்மற்றும் சிவாஜி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சிவாஜியின் புகழில் ஆதாயம் தேட நீங்கள் முயல்வதாகவும் தெரிகிறது.எனவே இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் தனுஷ் நடிக்கும் படத்தின் பெயரை மாற்றியமைக்காவிட்டால்தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நோட்டீஸின் நகல் தனுஷுக்கும்அனுப்பப்பட்டுள்ளது.

தனுசின் திருவிளையாடல்: அக்காவுக்கு நோட்டீஸ்! திருவிளையாடல் ஆரம்பம் என்ற பெயரில் தனுஷ் நடித்து வரும் படத்தின் பெயரை மாற்றக் கோரி, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சமூகப் பேரவை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.தனுஷின் சகோதரியான டாக்டர் விமலகீதாவின் பெயரில் அவரது குடும்பத்தினர் திருவிளையாடல் ஆரம்பம்என்ற பெயரில் படத்தைத் தயாரித்து வருகின்றனர். இதில் திருவிளையாடல் என்ற வார்த்தையை மிகப் பெரிதாகவும்,ஆரம்பம் என்பதை மிகச் சிறிய அளவிலும் எழுதி விளம்பரம் செய்திருந்தனர்.இந்தப் படத்தில் தனுஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் பெயருக்கு நடிகர் திலகம்சிவாஜி கணேசன் சமூகப் பேரவை என்ற அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்லது.திருவிளையாடல் என்றால் சிவாஜிதான் நினைவுக்கு வருவார். ஆனால் ஆபாசமான படங்களிலேயே நடித்துப்பழக்கப்பட்ட தனுஷ், அதே படத்தின் பெயரில் நடிக்கும் படத்தில் என்ன மாதிரியான காட்சிகள் இடம் பெறும்என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.எனவே படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரி வருகிறார்கள்.இந் நிலையில் சிவாஜி சமூக பேரவை தலைவர் சந்திரசேகர் சார்பில் தனுசின் சகோதரி விமலகீதாவுக்கு வக்கீல்நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அதில், தனுஷ் நடிக்க, திருவிளையாடல் ஆரம்பம் என்ற பெயரில் தாங்கள் படம் தயாரிக்கப் போவதாகசெய்திகள் வெளியாகியுள்ளன. இது சிவாஜி ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.திருவிளையாடல் என்ற பெயரைச் சொன்னாலே சிவாஜி கணேசன்தான் நினைவுக்கு வருவார். இன்றும் மதநம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த தெய்வீகப் படமாக அது கருதப்படுகிறது.ஆனால் தனுஷ் நடிக்கவிருக்கும் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் தலைப்பில் இடம் பெற்றுள்ள முதல்வார்த்தை பெரிய எழுத்தாகவும், அடுத்த வார்த்தையை சிறிய எழுத்தாகவும் குறிப்பிட்டிருப்பது எனது கட்சிக்காரர்மற்றும் சிவாஜி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சிவாஜியின் புகழில் ஆதாயம் தேட நீங்கள் முயல்வதாகவும் தெரிகிறது.எனவே இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் தனுஷ் நடிக்கும் படத்தின் பெயரை மாற்றியமைக்காவிட்டால்தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நோட்டீஸின் நகல் தனுஷுக்கும்அனுப்பப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

திருவிளையாடல் ஆரம்பம் என்ற பெயரில் தனுஷ் நடித்து வரும் படத்தின் பெயரை மாற்றக் கோரி, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சமூகப் பேரவை வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனுஷின் சகோதரியான டாக்டர் விமலகீதாவின் பெயரில் அவரது குடும்பத்தினர் திருவிளையாடல் ஆரம்பம்என்ற பெயரில் படத்தைத் தயாரித்து வருகின்றனர். இதில் திருவிளையாடல் என்ற வார்த்தையை மிகப் பெரிதாகவும்,ஆரம்பம் என்பதை மிகச் சிறிய அளவிலும் எழுதி விளம்பரம் செய்திருந்தனர்.

இந்தப் படத்தில் தனுஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் பெயருக்கு நடிகர் திலகம்சிவாஜி கணேசன் சமூகப் பேரவை என்ற அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்லது.

திருவிளையாடல் என்றால் சிவாஜிதான் நினைவுக்கு வருவார். ஆனால் ஆபாசமான படங்களிலேயே நடித்துப்பழக்கப்பட்ட தனுஷ், அதே படத்தின் பெயரில் நடிக்கும் படத்தில் என்ன மாதிரியான காட்சிகள் இடம் பெறும்என்பதை யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


எனவே படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரி வருகிறார்கள்.

இந் நிலையில் சிவாஜி சமூக பேரவை தலைவர் சந்திரசேகர் சார்பில் தனுசின் சகோதரி விமலகீதாவுக்கு வக்கீல்நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், தனுஷ் நடிக்க, திருவிளையாடல் ஆரம்பம் என்ற பெயரில் தாங்கள் படம் தயாரிக்கப் போவதாகசெய்திகள் வெளியாகியுள்ளன. இது சிவாஜி ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

திருவிளையாடல் என்ற பெயரைச் சொன்னாலே சிவாஜி கணேசன்தான் நினைவுக்கு வருவார். இன்றும் மதநம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த தெய்வீகப் படமாக அது கருதப்படுகிறது.


ஆனால் தனுஷ் நடிக்கவிருக்கும் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் தலைப்பில் இடம் பெற்றுள்ள முதல்வார்த்தை பெரிய எழுத்தாகவும், அடுத்த வார்த்தையை சிறிய எழுத்தாகவும் குறிப்பிட்டிருப்பது எனது கட்சிக்காரர்மற்றும் சிவாஜி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சிவாஜியின் புகழில் ஆதாயம் தேட நீங்கள் முயல்வதாகவும் தெரிகிறது.

எனவே இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் தனுஷ் நடிக்கும் படத்தின் பெயரை மாற்றியமைக்காவிட்டால்தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நோட்டீஸின் நகல் தனுஷுக்கும்அனுப்பப்பட்டுள்ளது.

Read more about: notice against dhanush

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil