twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதல் கராத்தே! கிராமத்து மண் வாசனையை கொஞ்சம் காதல் கலந்து திருடி படத்தில்கொடுத்திருப்பதாக கூறுகிறார் படத்தின் இயக்குநர் சங்கர். கேமராமேன் ஜீவாவின் உதவியாளர்தான் இந்த சங்கர். லயோலா கல்லூரியில்விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ள சங்கருக்கு, பாலுமகேந்திரா, பாலச்சந்தர்,பாரதிராஜா போன்றவர்களின் படங்கள் தான் உதாரணங்கள்.இவர்களைப் போல நாம் நல்ல படங்களை இயக்க வேண்டும் என்ற வெறியோடுசினிமாவுக்கு வந்தவர் ஜீவாவிடம் உதவியாளராக சேர்ந்தார். இப்போது இயக்குநராகமாறியுள்ளார். ஜீவி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் திருடி படத்தில் கதிர் என்றபுதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.ஹீரோயின் தன்யாவும் கூட புதுமுகம் தான். குணசேகர் என்பவரை வில்லனாகஅறிமுகப்படுத்துகிறார் சங்கர். எல்லோருமே புதுமுகங்கள் என்பதால் அத்தனைபேரையும் எளிதாக கையாள முடிகிறது, நாம் நினைப்பதை கொண்டு வர முடிகிறதுஎன்கிறார் சங்கர்.படத்தின் கதை என்னவோ? சென்னையிலிருந்து கராத்தே கற்பதற்காக கிராமம்ஒன்றுக்கு செல்கிறான் நாயகன். அங்கே நாயகியை சந்தித்து காதல் கொள்கிறான்.கிராமத்தில் தான் காதலுக்கு கட்டுப்பாடுகள், எதிர்ப்புகள் ஜாஸ்தியாச்சே. இந்தக்காதலர்களுக்கும் அந்தத் தொல்லைகள் வருகின்றன.கூடவே முறை மாமன் என்ற இடையூறு வேறு. இத்தனையையும் தாண்டிஎப்படிகராத்தே கற்று முடிக்கிறான், காதலியைகைப் பிடிக்கிறான் என்பதுதான் கதை.வள்ளியூர், நெல்லை, நாகர்கோவில் என அருமையான லொகேஷன்களில்படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் சங்கர்.படத்தின் நாயகி தன்யா படு அழகாக இருக்கிறார். கிளி கொத்தாத கொய்யாப்பழம்போல படுபளிச்சென இருக்கும் தன்யா, இப்படத்தில் நடிக்கவில்லையாம். மாறாகஅந்த கேரக்டராகவே மாறி வாழ்ந்திருக்கிறாராம்.அம்மணிக்கு படம் பூராவும் பாவாடை, தாவணிதான் காஸ்ட்யூமாம். மாடர்ன்பொண்ணாக இருந்தாலும், பாவாடை தாவணியில் கிராமத்து கிளியாக மாறிஅசத்தியிருக்கிறாராம் தன்யா. கிராமத்து சொலவடைகள், பேச்சு வழக்கை அப்படியேபடம் பூராவும் படு நேர்த்தியாக பேசி கலக்கியுள்ளாராம் தன்யா.தன்யா தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என்று நம்பிக்கையோடுசொல்கிறார் சங்கர்.நம்புவோம்!

    By Staff
    |

    கிராமத்து மண் வாசனையை கொஞ்சம் காதல் கலந்து திருடி படத்தில்கொடுத்திருப்பதாக கூறுகிறார் படத்தின் இயக்குநர் சங்கர்.

    கேமராமேன் ஜீவாவின் உதவியாளர்தான் இந்த சங்கர். லயோலா கல்லூரியில்விஷூவல் கம்யூனிகேஷன் படித்துள்ள சங்கருக்கு, பாலுமகேந்திரா, பாலச்சந்தர்,பாரதிராஜா போன்றவர்களின் படங்கள் தான் உதாரணங்கள்.

    இவர்களைப் போல நாம் நல்ல படங்களை இயக்க வேண்டும் என்ற வெறியோடுசினிமாவுக்கு வந்தவர் ஜீவாவிடம் உதவியாளராக சேர்ந்தார். இப்போது இயக்குநராகமாறியுள்ளார். ஜீவி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் திருடி படத்தில் கதிர் என்றபுதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

    ஹீரோயின் தன்யாவும் கூட புதுமுகம் தான். குணசேகர் என்பவரை வில்லனாகஅறிமுகப்படுத்துகிறார் சங்கர். எல்லோருமே புதுமுகங்கள் என்பதால் அத்தனைபேரையும் எளிதாக கையாள முடிகிறது, நாம் நினைப்பதை கொண்டு வர முடிகிறதுஎன்கிறார் சங்கர்.

    படத்தின் கதை என்னவோ? சென்னையிலிருந்து கராத்தே கற்பதற்காக கிராமம்ஒன்றுக்கு செல்கிறான் நாயகன். அங்கே நாயகியை சந்தித்து காதல் கொள்கிறான்.கிராமத்தில் தான் காதலுக்கு கட்டுப்பாடுகள், எதிர்ப்புகள் ஜாஸ்தியாச்சே. இந்தக்காதலர்களுக்கும் அந்தத் தொல்லைகள் வருகின்றன.

    கூடவே முறை மாமன் என்ற இடையூறு வேறு. இத்தனையையும் தாண்டிஎப்படிகராத்தே கற்று முடிக்கிறான், காதலியைகைப் பிடிக்கிறான் என்பதுதான் கதை.வள்ளியூர், நெல்லை, நாகர்கோவில் என அருமையான லொகேஷன்களில்படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் சங்கர்.

    படத்தின் நாயகி தன்யா படு அழகாக இருக்கிறார். கிளி கொத்தாத கொய்யாப்பழம்போல படுபளிச்சென இருக்கும் தன்யா, இப்படத்தில் நடிக்கவில்லையாம். மாறாகஅந்த கேரக்டராகவே மாறி வாழ்ந்திருக்கிறாராம்.

    அம்மணிக்கு படம் பூராவும் பாவாடை, தாவணிதான் காஸ்ட்யூமாம். மாடர்ன்பொண்ணாக இருந்தாலும், பாவாடை தாவணியில் கிராமத்து கிளியாக மாறிஅசத்தியிருக்கிறாராம் தன்யா. கிராமத்து சொலவடைகள், பேச்சு வழக்கை அப்படியேபடம் பூராவும் படு நேர்த்தியாக பேசி கலக்கியுள்ளாராம் தன்யா.

    தன்யா தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு வருவார் என்று நம்பிக்கையோடுசொல்கிறார் சங்கர்.

    நம்புவோம்!

      Read more about: dhanya in tirudi
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X