twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீனா முதல் தர்பார் வரை...ஏ.ஆர்.முருகதாஸ் படங்கள் ஓர் சுவாரஸ்ய அலசல்

    |

    சென்னை : தமிழ் சினிமாவில் மக்கள் ரசிக்கும் படியான படங்களை, சோஷியல் மெசேஜ் உடன் கலந்து சுவாரஸ்யமாக கொடுத்து பிரம்மாண்ட வெற்றிகளை வரிசையாக ருசித்து வரும் டைரக்டர்களில் ஏ.ஆர்.முருகதாஸும் ஒருவர். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு முருகதாஸ் இயக்கிய படங்களை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    டிவியில வசனம் பேசுறது முக்கியம் இல்லை..நேர்ல செய்யணும்.. ஷில்பா ஷெட்டியை சீண்டிய ஷெர்லின் சோப்ரா!டிவியில வசனம் பேசுறது முக்கியம் இல்லை..நேர்ல செய்யணும்.. ஷில்பா ஷெட்டியை சீண்டிய ஷெர்லின் சோப்ரா!

    முருகதாஸ் இதுவரை 8 படங்களை இயக்கி உள்ளார். இந்த 8 படங்களும் வெவ்வேறு விதமாக சமூக பிரச்சனைகளை உள்ளடக்கியதாக இருக்கும். அது நெற்றி பொட்டில் ஆனி ஆடித்தது போல் அழுத்தமான சோஷியல் மெஸேஜை, விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு வருவதாக இருக்கும். முருகதாஸ் இயக்கிய படங்களின் மையக் கருத்துக்களை பற்றி இங்கே பார்க்கலாம்.

    தீனா

    தீனா

    சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருக்கு ரவுடி பற்றிய கதை தான். ஆனால் இரக்க குணம் கொண்ட சிலர் எப்படி கூலிப்படையாக பயன்படுத்தப்படுகிறார்கள், நல்லவராக திருந்தி வாழ நினைக்கும் ரவுடியை இந்த சமூக எப்படி நடத்துகிறது என்பதை காட்டிய படம் தீனா. ரவுடியாக இருப்பவருக்கும் காதல், தங்கை பாசம், சகோதர பாசம், விஸ்வாசம் இருக்கும் என்பதை அஜித்தை வைத்து மிக அழகாக காட்டி இருப்பார் முருகதாஸ்.ரவுடிசத்தால் பாதிக்கப்படும் ஹீரோ பற்றிய கதை.

    ரமணா

    ரமணா

    லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள், அவர்களால் பாதிக்கப்படும் குடும்பங்களின் நிலை, ஆசிரியர் - மாணவர் உறவு, ஆசிரியர் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை மிக தெளிவாக காட்டிய படம் ரமணா. தனது கதைக்கு ஏற்ற ஹீரோவாக விஜயகாந்தை முருகதாஸ் தேர்வு செய்தது மிக பொருத்தமான ஒன்று. மன்னிப்பு எல்லாவற்றிற்கும் பொருந்தாது. மன்னிப்பு மற்றொரு தவறின் ஆரம்பம் என்பதை மிக அழுத்தமாக சொல்லி இருப்பார். லஞ்சத்தால் பாதிக்கப்படும் ஹீரோ பற்றிய கதை

    கஜினி

    கஜினி

    மேலோட்டமாக பார்த்தால் கடந்த கால நினைவுகளை மறந்து போகும் தொழிலதிபரின் கதை என்பது போல் தான் தோன்றும். ஆனால் பெரிய தொழிலதிபர்களாக இருந்து கொண்டு சிலர் குழந்தை கடத்தல், உடல் உறுப்பு திருட்டு போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதையும், அதற்கு எதிராக குரல் கொடுக்கும் ஹீரோயின், அவரின் கொலைக்கு பழிவாங்கிய ஹீரோ என்பது தான் கதை. சட்ட விரோத செயல்களால் பாதிக்கப்படும் ஹீரோ.

    ஏழாம் அறிவு

    ஏழாம் அறிவு

    தமிழனின் மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட அடையாளத்தை அனைவரும் உணர செய்த படம். விரட்டி அடிக்கப்படும் தமிழர்களின் மதிப்பை அறிவியல் கலந்து சொல்லி இருப்பார் முருகதாஸ். தமிழன் தான் உலகிற்கு பல கலைகள், மருத்துவ முறைகள், கலாச்சாரம் ஆகியவற்றை கற்றுக் கொடுத்தான். தனது பெருமையை உணராததால் தமிழன் சந்திக்கும் பிரச்சனைகள். தமிழ் இனத்திற்கு எதிராக அணி திரளும் உலக நாடுகள் என சர்வதேச பிரச்சனையை பேசிய படம். இன்று உலகமே சிக்கி தவிக்கும் கொரோனா பற்றி அன்றே பேசிய படம்.

    கத்தி

    கத்தி

    விவசாயிகள் மற்றும் தண்ணீர் பிரச்சனை பற்றியும், கார்ப்பரேட் கம்பெனிகளால் சாமானிய மக்கள் எந்த வகையில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெள்ளத் தெளிவாக காட்டிய படம் கத்தி. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் பற்றிய கதை.

    துப்பாக்கி

    துப்பாக்கி

    நாட்டை காப்பாற்ற எல்லையில் மட்டுமல்ல நாட்டிற்குள்ளும் இருந்து போராடும் ராணுவ வீரர்கள், அதனால் அவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் கஷ்டங்கள். மும்பை நகரில் நடக்கும் சட்ட விரோத செயல்கள் பற்றிய வெளிச்சம் போட்டு காட்டிய படம் துப்பாக்கி.

    சர்தார்

    சர்தார்

    தேர்தலில் ஓட்டளிப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை மட்டுமல்ல, கடமை என்பதை அழுத்தமாக சொல்லி படம் சர்கார். ஒரு ஓட்டை வைத்து நாட்டின் எதிர்காலத்தையே மாற்ற முடியும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ளும் வகையில் மிக ஜாலியாக, ரசிக்கும் படி சொன்ன படம். மக்கள் சக்தி எவ்வளவு பெரியது என சமூகத்திற்கு உணர்த்துவதற்காகவும், பணத்திற்கு ஓட்டை விற்க கூடாது என முகத்தில் அறைந்தாற் போல் அனல் தெறிக்கும் வசனங்களுடன் சொன்ன படம்.

    தர்பார்

    தர்பார்

    மும்பை நகரில் நடக்கும் சட்ட விரோத செயல்களை சொல்வதாக இருந்தாலும், நேர்மையாக வாழும் போலீஸ் அதிகாரிகளும், அவர்களின் குடும்பங்களும் அனுபவிக்கும் கஷ்டங்களை காட்டிய படம். அதிலும் ரஜினி நடித்ததால் இந்த படத்திற்கு இன்னும் வெயிட் கூடியது. போலீசுக்கு இருக்கும் பவரையும் திறமையையும் பற்றி பேசிய படம்.

    English summary
    Director a.r.murugadoss celebrates his birthday today . on his birthday fans wished and celebrates his movies. murugadoss has directed 8 movies with 8 social issues.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X