ஸ்பெஷல்ஸ்
ரீமா சென் மற்றும் ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்து விக்ரம் கலக்கியிருக்கும் தூள், படு அட்டகாசமானவந்திருப்பதாக டைரக்டர் தரப்பு சந்தோஷத்தில் ஆழ்ந்திருக்கிறது.
ஆனால், தயாரிப்பாளர் தரப்போ கலக்கத்தில் உள்ளது. பல கோடிகளை விழுங்கியிருக்கும் தூள் படம் வசூலிலும்அட்டகாசம் செய்தால்தான் போட்ட பணத்தை எடுக்க முடியுமாம்.
மேலும் திருட்டு விசிடிக்காரர்களின் அட்டகாசம் வேறு கட்டுக்கடங்காமல் உள்ளதால், படம் நல்லபடியாக ஓடவேண்டுமே என்ற அச்சம் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தை மிரட்சியில் ஆழ்த்தியுள்ளது.
டைரக்டர் தரணிக்கு இது விக்ரமுடன் இரண்டாவது படம். முதல் படமான தில், போலவே தூள் படமும்அட்டகாசமாக ஓடும் என்று அடித்துச் சொல்கிறார் தரணி.
முதலில் தில், இப்போது தூள், அடுத்தது புல்லா??
Comments


Click it and Unblock the Notifications