பிரின்ஸ் படத்தை எடுத்தவர் முன்னதாக சிவாஜியை வைத்து தரமான சம்பவம் செய்த படம் ஒன்றை எடுத்தது தெரியுமா?
சென்னை: நேற்று வெளியான பிரின்ஸ் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் பிரின்ஸ் மற்றும் சர்தார் திரைப்படங்கள் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது.
இந்நிலையில் சிவாஜி கணேசன் நடித்து மிகப் பெரிய சூப்பர் ஹிட் ஆன படத்தை எடுத்தவர்கள்தான் பிரின்ஸ் திரைப்படத்தையும் எடுத்துள்ளதாக சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

பிரின்ஸ்
சிவகார்த்திகேயன், சத்யராஜ், பிரேம்ஜி அமரன், மரியா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தில் பிரேம்ஜி நகைச்சுவை வில்லனாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். டாக்டர் திரைப்படத்தில் மருத்துவம் பார்க்க மாட்டேன், பாக்சராக நடித்தபோது பாக்சிங் செய்யவில்லை, டான் திரைப்படத்தில் ஸ்டூடன்ட் ஆனால் படிக்க மாட்டேன், அதேபோல இந்தப் படத்தில் வாத்தியார் ஆனால் பாடம் எடுப்பதுபோல் ஒரு காட்சி கூட இல்லை என்று நகைச்சுவையாக தன் கதாபாத்திரங்களை பற்றி கூறியிருக்கிறார்.

ரஜினிகாந்த் பாராட்டு
டான் திரைப்படத்தை எடுத்த இயக்குநர் சிபி சக்கரவர்த்தியிடம் கதை கேட்டிருக்கிறார் ரஜினிகாந்த். அடுத்தது அவர் இயக்கத்தில்தான் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டான் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனை அழைத்து பாராட்டிய போது குறிப்பாக அவரது நடனத்தை பாராட்டினாராம். அதற்கு முக்கிய காரணம் நடன இயக்குநர் சோபி மாஸ்டர்தான் என்றும் இந்தப் படத்திலும் அவர் பணிபுரிந்துள்ளார். அவருடன் இணைந்து மற்ற பாடல்களுக்கு கோரியோகிராஃப் செய்த சாண்டி மற்றும் சதீஷ் மாஸ்டர்களுக்கும் எனது நன்றிகள் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார்.

தெலுங்கு நிறுவனம்
பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ஒரு தெலுங்கு இயக்குநரால் எடுக்கப்பட்டுள்ளது. அதனால் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற தெலுங்கு நிறுவனம்தான் தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகள் தொடர்ச்சியாக தெலுங்கில் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கும் அந்த நிறுவனம் தமிழிலும் சில படங்கள் தயாரித்திருக்கின்றன.

சிவாஜி படம்
அப்படி அவர்கள் முதன் முதலில் தமிழில் தயாரித்த படம் எது தெரியுமா? நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் அட்டகாசமான நடிப்பில் உருவாகி மிகப்பெரிய சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற வசந்த மாளிகை திரைப்படம்தான், காதல் திரைப்படங்களிலும் சரி காலத்தால் அழிக்க முடியாத திரைப்படங்களிலும் சரி வசந்த மாளிகை படத்திற்கு தனி பெயர் உண்டு. சிவாஜி சார் நடித்த வசந்த மாளிகை படத்தை தயாரித்த ஒரு நிறுவனம் என்னுடைய படத்தையும் தயாரித்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று சிவகார்த்திகேயன் ஒரு நிகழ்வில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











