twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2021 ல் நேரடியாக டிவி.,யில் ரிலீசான படங்கள்...ஓர் பார்வை

    |

    சென்னை : கொரோனா லாக்டவுனால் தியேட்டர்கள் மூடப்பட்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளில் ஓடிடி.,யில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் ஓடிடி வெளியீட்டிற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பல படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் உள்ளன.

    தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் வருவார்களா என்ற தயக்கம் காரணமாக பலர் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய தயங்கி வருகின்றனர். தியேட்டரிலும் ரிலீஸ் செய்ய முடியாமல், ஓடிடி.,யிலும் ரிலீஸ் செய்ய முடியாமல் இருப்பதை விட டிவி.,யில் நேரடியாக வெளியிடலாம் என்ற முடிவுக்கு வந்து சிறிய பட்ஜெட் படங்கள் பலவும் டிவி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.

    எங்களின் கடைசி உரையாடல்… விவேக்கை நினைந்து உருகும் கௌதம் மேனன்!எங்களின் கடைசி உரையாடல்… விவேக்கை நினைந்து உருகும் கௌதம் மேனன்!

    அப்படி 2021 ம் ஆண்டு துவங்கியது முதல் கடந்த 8 மாதங்களில் நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டு, மக்களிடம் வரவேற்பை பெற்ற படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    புலிக்குத்தி பாண்டி

    புலிக்குத்தி பாண்டி

    கொம்பன் படத்தை இயக்கிய டைரக்டர் முத்தையா, விக்ரம் பிரபுவை ஹீரோவாக வைத்து இயக்கிய படம் புலிக்குத்தி பாண்டி. தந்தை சமுத்திரக்கனியை போல் நியாயத்திற்காக அடிதடி செய்யும் பாண்டியாக விக்ரம் பிரபு, அவரை காதலித்து திருமணம் செய்யும் பேச்சியாக லட்சுமி மேனன். திருமணத்திற்கு பிறகு அமைதியாக வாழும் பாண்டியை எதிரிகள் சூழ்ச்சி செய்து கொலை செய்கிறார்கள். பாண்டியை கொலை செய்தவர்களை பேச்சியும், பாண்டியின் குடும்பத்தினரும் எப்படி பழிவாங்குகிறார்கள் என்பது தான் படத்தின் கதை. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் சன் டிவி.,யிலும், பிறகு சன் நெக்ஸ்டிலும் ரிலீஸ் செய்யப்பட்டது.

    ஏலே

    ஏலே

    சில்லு கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ள படம் ஏலே. ஐஸ் விற்பனை செய்து தனது வாழ்க்கைக்காக சந்தோஷமாக வாழ்ந்து இறந்து போகும் தந்தை சமுத்திரக்கனி. அவருக்கு இறுதிக் காரியங்கள் செய்ய ஊருக்கு வரும் மகனாக மணிகண்டன். சகோதரி, நண்பர்கள், வேறு திருமணத்திற்கு தயாராக இருக்கும் முன்னாள் காதலி, தந்தை செய்தவற்றை நினைத்து பார்க்கும் பார்த்தியின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கிறது என்பது தான் கதை. இந்த படம் நேரடியாக விஜய் டிவி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது.

    மண்டேலா

    மண்டேலா

    மடோனா அஸ்வின் இயக்கிய காமெடி படம் மண்டேலா. யோகிபாபு ஹீரோவாக நடித்த இந்த படம் விஜய் டிவி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. சாதியால் இரண்டாக பிரிந்து கிடக்கும் கிராமம். அங்கு நடக்கும் தலைவர் பதவிக்கான உள்ளாட்சி தேர்தல். அதில் வெற்றியை தீர்மானிக்கும் ஒதுக்கப்பட்ட சவர தொழிலாளியான மண்டேலாவின் ஓட்டு. அந்த ஓட்டை கைப்பற்ற, தேர்தலில் போட்டியிடும் இரு தரப்பினர் செய்யும் முயற்சிகளை காமெடியாக சொல்லிய படம். டிவி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டாலும் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படம்.

    சர்பத்

    சர்பத்

    பிரபாகரன் இயக்கத்தில் கதிர், சூரி நடித்த படம் சர்பத். சென்னையில் ஐடி ஊழியராக பணியாற்றும் அறிவு. அண்ணனின் திருமணத்திற்காக ஊருக்கு வரும் அறிவுக்கு, திருமணம் நின்ற தகவல் தெரிகிறது. அண்ணன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் அறிவுக்கு காதல் ஏற்படுகிறது. பிறகு வரும் சிக்கல்களை அவர் எப்படி சமாளித்து காதலியை கைபிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை. நட்பு, காதல், சகோதர பாசம், காமெடி கலந்து சொல்லப்பட்டிருந்த இந்த படம் கலர்ஸ் தமிழ் சேனலில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டது.

    வணக்கம் டா மாப்பிள

    வணக்கம் டா மாப்பிள

    டைரக்டர் ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அமிர்தா அய்யர், டேனியல் போப் ஆகியோர் நடித்துள்ள காமெடி படம் வணக்கம் டா மாப்பிள. சிறு வயது முதலே நண்பர்களாக இருக்கும் ஜி.வி.பிரகாஷ் மற்றும் டேனியல், தங்களுக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கல்லூரி நாட்களில் சபதம் செய்கிறார்கள். பிறகு ஜி.வி.பிரகாஷ் கப்பல் வேலைக்கு செல்ல, டேனியலுக்கு முறைப் பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. இதைத் தெரிந்து டேனியலின் திருமணத்தை தள்ளி வைக்கச் சொல்லி டைம் கேட்டு, இருவருக்கும் பிடித்த பெண்ணை தேடி காதலித்து, திருமணம் செய்வது தான் படத்தின் கதை. இந்த படம் நேரடியாக சன் டிவி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது.

    வெள்ளை யானை

    வெள்ளை யானை

    சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகிபாபு, ஆத்மியா நடித்த படம் வெள்ளை யானை. விவசாயிகள் மற்றும் விவசாயிகள் பிரச்சனையை சமூக அக்கறையுடன், நகைச்சுவை கலந்து சொல்லி உள்ள கதை. இந்த படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஆப்பில் வெளியிடப்பட்டது.

    பூமிகா

    பூமிகா

    டைரக்டர் ரதிந்திரன் ஆர்.பிரசாத் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன் நடித்துள்ள படம் பூமிகா. இது ஐஸ்வர்யா ராஜேஷின் 25 வது படம். கைவிடப்பட்ட வனப்பகுதியை அழித்து டவுன்ஷிப் அமைக்கும் பணியில் ஈடுபடும் ஐஸ்வர்யாவின் கணவர். அதற்காக அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்கள். அங்கு அவர்கள் சந்திக்கும் அமானுஸ்யங்கள், அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார்கள் என்பது தான் கதை. இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம். இந்த படம் விஜய் டிவி.,யில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டது.

    துக்ளக் தர்பார்

    துக்ளக் தர்பார்

    டெல்லி பிரசாத் தீனதயாளன் எழுதி, இயக்கிய படம் துக்ளக் தர்பார். விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன் நடித்துள்ள இந்த படம் அரசியல், காமெடி கலந்த படம். இந்த படம் செப்டம்பர் 10 ம் தேதி சன் டிவி.,யில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

    English summary
    many small budget movies are directly released in television. vellai yannai, mandela, tuglaq durbar like movies are released in television.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X