»   »  இயக்குநர் கொலை-மனைவி புது புகார்

இயக்குநர் கொலை-மனைவி புது புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை வடபழனியில் புதுமுக இயக்குநர் செல்வா கொலை செய்யப்பட்டதில் பெரும் மர்மம் இருப்பதாகவும், பைனான்சியர் ஒருவருக்கு இதில்தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவதாகவும் செல்வாவின் மனைவி மைதிலி சென்னை காவல்துறை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளார்.


சென்னை அருகே உள்ள நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வா. ஸ்டில் போட்டோகிராபராக இருந்த செல்வா, பின்னர் இயக்குநர் ஆனார்.விஜய டி.ராஜேந்தரிடம் உதவியாளராக இருந்தவர் செல்வா.

காதோடு போய் சொல் உள்ளிட்ட 2 படங்களை அவர் ஒரே சமயத்தில் இயக்கி வந்தார். கடந்த 5ம் தேதி தனது அலுவலக அறையில் செல்வா கழுத்துநெரித்துக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்ததாக அவருடன் தங்கியிருந்த புதுமுக நடிகை சங்கீதா கைது செய்யப்பட்டுள்ளார்.

செல்வா தன்னை பாலியல் இச்சைகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டதாகவும், பணம் கொடுப்பதை நிறுத்தியதால் ஆத்திரமடைந்து கொலைசெய்ததாக சங்கீதா வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் செல்வாவின் மனைவி மைதிலி, தனது நான்கு குழந்தைகளுடன் நேற்று காவல்துறை ஆணையர் அலுவலகம் வந்து ஒரு புகார்மனுவைக் கொடுத்தார்.

அதில், எனது கணவரின் சாவில் மர்மம் உள்ளது. நடிகை சங்கீதா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருக்குப் பின்னால்பெரிய கும்பலே இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

இந்த கொலையில் நடிகை சங்கீதா மட்டும் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று சந்தேகிக்கிறேன். எனது கணவர் கொலை செய்யப்படுவதற்குமுன்பு அவர் இயக்கி வந்த நினைவெல்லாம் நீயே படத்தின் விநியோக உரிமை தொடர்பாக அவருக்கும், பைனான்சியர் நடராஜன் என்பவருக்கும்இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த 3ம் தேதி நடராஜன் வந்து எனது கணவரை அழைத்துச் சென்றார். அதன் பின்னர் எனது கணவர் திரும்பவில்லை. இந்த நிலையில்தான் 5ம்தேதி அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

எனவே பைனான்சியர் நடராஜன் மீது எனக்கு சந்தேகம் வருகிறது. அவரையும் பிடித்து தீர விசாரிக்க வேண்டும். வழக்கை முழுமையாக விசாரித்துஉண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் மைதிலி.

ஆனால் மைதிலியின் புகாரில் உண்மை இல்லை என்று போலீஸார் கூறுகிறார்கள். இந்த கொலையை சங்கீதா மட்டுமே செய்துள்ளார். வேறுயாருக்கும் தொடர்பு இல்லை. முதலில் தன்னைப் பார்க்க செல்வா கடந்த ஒன்றரை மாதமாக வரவே இல்லை என்று மைதிலி கூறினார். ஆனால்இப்போது கொடுத்துள்ள புகாரில் 3ம் தேதி இரவு தனது வீட்டில் செல்வா இருந்ததாக கூறியுள்ளார்.

அவரது பேச்சிலும், புகாரிலும் முரண்பாடு உள்ளது. இருப்பினும் அவரது மனு குறித்து பரிசீலிக்கப்படும் என்று போலீஸார் தெரிவிக்கிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil