»   »  நடிகை சங்கீதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

நடிகை சங்கீதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் செல்வாவைக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள புதுமுக நடிகை சங்கீதாவின் ஜாமீன் மனு சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில்தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை வடபழனியில் வாடகை அறையில் அலுவலகம் அமைத்து, படங்களை இயக்கி வந்த புதுமுக இயக்குநர் செல்வாவை, அவருடன்தங்கியிருந்த சங்கீதா என்ற புதுமுக நடிகை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னை செக்ஸ் அடிமை போல வைத்திருந்து, பணம் கொடுக்காமல் பாலியல் வடிகாலாக தன்னை பயன்படுத்தி வந்ததால், செல்வாவைக் கழுத்தைநெரித்துக் கொலை செய்ததாக சங்கீதா போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கீதா ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு நீதிபதிபெரியகருப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கு விசாரணை ஆரம்ப கட்ட நிலையில் இருப்பதால் சங்கீதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான்எதிர்ப்பு தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி சங்கீதாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil