twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சமூக பிரச்சனைகளை பேசும் மாஸ் ஹிட் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்...பிறந்தநாள் ஸ்பெஷல்

    |

    சென்னை : டைரக்டர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என பல திறமைகளைக் கொண்டவர் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ். முருகதாஸ் அருணாச்சலம் என்ற பெயரை, முதல் படம் ஒப்பந்தமானதும் தனது அப்பாவின் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களை இனிசியலாக வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் என மாற்றிக் கொண்டார்.

    மூச்சு விடாமல் எஸ்.பி.பி மலையாளத்தில் பாடி கேட்டு இருக்கீங்களா? மோகன்லால் ஷேர் செய்த வீடியோ!மூச்சு விடாமல் எஸ்.பி.பி மலையாளத்தில் பாடி கேட்டு இருக்கீங்களா? மோகன்லால் ஷேர் செய்த வீடியோ!

    தனது படங்கள் அனைத்திலும் சமூக பிரச்சனைகளை பேசி, மாஸ் ஹிட் டைரக்டர் என பெயர் வாங்கிய ஏ.ஆர்.முருகதாஸ், இன்று தனது 46 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் முருகதாசுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    முதல் படமே ஹிட்

    முதல் படமே ஹிட்

    பூச்சூடவா படத்தில் திரைக்கதை எழுத்தாளராக திரையுலக பயணத்தை துவக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், ரட்சகன், குஷி படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டராக பணியாற்றினார். பிறகு எஸ்.ஜே.சூர்யா பரிந்துரை செய்ததன் பேரில் அஜித்தை வைத்து தீனா படத்தை இயக்கினார். முதல் படமே செம ஹிட் ஆனது. அஜித்திற்கும் மிகப் பெரிய பிரேக் கொடுத்ததுடன், ரசிகர்கள் கொண்டாடும் தல என்ற பட்டத்தையும் தீனா படம் தான் பெற்றுக் கொடுத்தது.

    ரூ.100 கோடி வசூல்

    ரூ.100 கோடி வசூல்

    அதைத் தொடர்ந்து இயக்கிய ரமணா, கஜினி படங்களும் பிரம்மாண்ட வெற்றி பெற்று பாக்ஸ் ஆபீசில் ரூ.100 கோடி வசூல் செய்த படங்களின் பட்டியலில் இணைந்தன. ஸ்டாலின் படத்தின் மூலம் தெலுங்கிலும், கஜினி இந்தி ரீமேக்கின் மூலம் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்தார் முருகதாஸ்.

    வரிசையாக ஹிட்

    வரிசையாக ஹிட்

    பிறகு தமிழில் ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்கார், தர்பார் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார். தனது படங்கள் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு சமூக பிரச்சனையை பற்றி பேசுவது முருகதாசின் ஸ்டைல். டைரக்ட் செய்வதுடன் எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான் கராத்தே, பத்து எண்ணுறதுக்குள்ள, ரங்கூன் போன்ற படங்களையும் முருகதாஸ் தயாரித்துள்ளார்.

    நடிகரான முருகதாஸ்

    நடிகரான முருகதாஸ்

    பூச்சூடவா, ஏழாம் அறிவு, துப்பாக்கி, இசை, நோட்டா, மான் கராத்தே, கத்தி, சர்கார் போன்ற படங்களில் சிறிய ரோல்களிலும் நடித்துள்ளார் முருகதாஸ். சிறந்த இயக்குனர், வசன எழுத்தாளர் உள்ளிட்ட பிரிவுகளுக்காக தமிழக மாநில அரசு விருதுகள், தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள், சைமா விருதுகள் போன்ற பல விருதுகளை முருகதாஸ் பெற்றுள்ளன.

    ரீமேக் படங்களும் ஹிட்

    ரீமேக் படங்களும் ஹிட்

    விஜய் நடித்த கத்தி படம் ரூ.180 கோடி வசூல் செய்தது. அதிக வசூல் செய்த விஜய்யின் முதல் படம் மற்றும் முருகதாஸ் படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றது. தெலுங்கு மற்றும் இந்தியில் முருகதாஸ் ரீமேக் செய்த படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்றன.

    முக்கிய அறிவிப்பு வருமா

    முக்கிய அறிவிப்பு வருமா

    தொடர்ந்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்து வரும் முருகதாஸ் அடுத்தபடியாக யாரை இயக்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர். அவரது பிறந்தநாளான இன்று புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    A.R.Murugadoss celebrates his birthday today. fans and celebrities wish him in social media. fans are expecting for an important announcement to come out today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X