ஷங்கர் முதல் ஷாருக்கான் வரை... அட்லீயின் திரையுலக வெற்றி பயணம் ஒரு பார்வை

சென்னை : வெறும் நான்கு படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் ஹிட் பட டைரக்டர் என்ற பெயருடன் டாப் ஹீரோக்களை இயக்கி வருகிறார் டைரக்டர் அட்லீ. அனைவராலும் எதிர்பார்க்கப்படும் டைரக்டராகவும் இருந்து வருகிறார்.

அருண்குமார் என்ற தனது சொந்த பெயரை சினிமாவிற்காக அட்லீ என மாற்றிக் கொண்டார். டைரக்டர், தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்ட, எளிமையான மனிதர் அட்லீ. கமர்ஷியல் வெற்றி கொடுப்பதில் அட்லீக்கு இணை அவர் தான் என சினிமா வட்டாரத்தில் பாராட்டப்படுபவர்.

அசிஸ்டென்ட் டைரக்டர்

அசிஸ்டென்ட் டைரக்டர்

டைரக்டர் ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் அவருக்கு அசிஸ்டென்டாக பணியாற்றி தனது திரையுலக வாழ்க்கையை துவக்கினார் அட்லீ. அதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கிய, இந்தியின் பிளாக்பஸ்டர் படமான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் படத்திலும் அசிஸ்டென்டாக பணியாற்றினார். இரண்டு வருட அசிஸ்டென்ட் டைரக்டர் அனுபவத்தை வைத்து, 2013 ல் தனது முதல் படமான ராஜா ராணியை இயக்கி, டைரக்டராக அறிமுகமானார்.

முதல் படமே ஹிட்

முதல் படமே ஹிட்

முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. ஆர்யா, நயன்தாரா நடித்த ராஜா ராணி படம் ரிலீசான 4 வாரங்களிலேயே தென்னிந்திய பாக்ஸ் ஆபீசில் 500 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வசூல் செய்தது. இந்த படம் விஜய் விருதுகள் உள்ளிட்ட விருதுகளை பெற்றது. முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால் அடுத்ததாக விஜய்யை வைத்து 2016 ல் தெறி படத்தை இயக்கினார். அந்த ஆண்டில் அதிகமாக வசூலை பெற்ற இரண்டாவது படமாக தெறி அமைந்தது.

விஜய்யுடன் 2 ஹிட்

விஜய்யுடன் 2 ஹிட்

வரிசையாக விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றி படங்களை கொடுத்தார். அதிலும் 2017 ம் ஆண்டு தீபாவளி ரிலீசாக வெளிவந்த மெர்சல், 251 கோடிகளை வசூல் செய்தது. விஜய்யின் திரையுலக பயணத்தில் அதிக வசூலை பெற்ற படம் இது தான். அதனால் மூன்றாவதாக அட்லீயுடன் கூட்டணி வைத்து பிகில் படத்தில் நடித்தார் விஜய். அட்லீ இயக்கிய நான்கு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி, வசூல் சாதனை படைத்ததால் தற்போது ஐந்தாவதாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார் அட்லீ.

பான் இந்தியன் படம்

பான் இந்தியன் படம்

ஷாருக்கானுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, பிரியா மணி, யோகிபாபு உள்ளிட்ட பல தென்னிந்திய பிரபலங்கள் நடிக்கிறார்கள். விஜய்யும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாராம். இதனால் இந்த படத்தை பான் இந்தியன் படமாக எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். இந்த படத்திற்கு ஜவான் என பெயரிட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டது. தற்போது Lion என்ற டை்டடில் வைக்கப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் கூறப்படுகிறது.

தயாரிப்பும் நடிப்பும்

தயாரிப்பும் நடிப்பும்

படங்களை இயக்கியதுடன் சங்கிலி புங்கிலி கதவ திற, அந்தகாரம் ஆகிய படங்களையும் அட்லீ தயாரித்தார். இது தவிர நண்பன் படத்தில் அஸ்கு லஷ்கா பாடலிலும், பிகில் படத்தில் சிங்கப் பெண்ணே பாடலிலும் சிறப்பு தோற்றத்தில் தோன்றி நடித்துள்ளார் அட்லீ. இவர் இயக்கிய நான்கு படங்களுமே சைமா, ஆனந்த விகடன், எடிசன், விஜய் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளன.

முதல் படத்திற்கு பின் திருமணம்

முதல் படத்திற்கு பின் திருமணம்

டிவி நடிகையான கிருஷ்ண ப்ரியாவை காதலித்து வந்த அட்லீ, தனது படத்தை இயக்கி, அது வெற்றி படமாக ஆனதை அடுத்து 2014 ல் திருமணம் செய்து கொண்டார். இன்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடும் அட்லீக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்

பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள்

இந்நிலையில் விஜய்யை வைத்து 3 மெகாஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் என்பதால் விஜய் ரசிகர்கள் அட்லீயின் பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். இதனால் பிகில் ஹாஷ்டாக்கை திடீரென விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். இதில் ஏராளமானோர் அட்லீக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர். விஜய் ரசிகர்கள் சிலர், அடுத்து எப்போது விஜய்யை வைத்து படம் பண்ணுவீர்கள் என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X