Exclusive - தமன்னாவை நான் அறிமுகப்படுத்தவில்லை.. இயக்குநர் பாலாஜி சக்திவேல் பிரத்யேக பேட்டி
சென்னை: கோலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் தமன்னா. பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த அவருக்கு திடீரென வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதனையடுத்து ஹிந்தி பக்கம் சென்ற அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே விஜய் வர்மாவை காதலித்து பிரேக் அப்பும் செய்தார். இந்நிலையில் ஃபில்மிபீட் தமிழுக்கு இயக்குநர் பாலாஜி சக்திவேல் அளித்த பேட்டியி தமன்னா குறித்து பேசியிருக்கிறார்.
மும்பையை சேர்ந்த தமன்னாவுக்கு கேடி படத்தின் மூலம் நடிக்கும் வாய்ப்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது. முதல் படத்திலேயே வில்லியாக தோன்றி பலரது கவனத்தை ஈர்த்தார். அதனையடுத்து வியாபாரி படத்தில் குடும்ப பாங்காக நடித்து வெரைட்டி காண்பித்தார். இரண்டு படங்களுமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்திருந்தாலும் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி படம் தமன்னாவுக்கு மிகப்பெரிய அளவில் வெளிச்சத்தை பெற்றுக்கொடுத்தது.
முன்னணி நடிகை: அதனைத் தொடர்ந்து தமன்னாவுக்கு வரிசையாக தமிழில் வாய்ப்புகள் கிடைத்தன. விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த அவருக்கு டோலிவுட்டும் சிகப்பு கம்பள வரவேற்பை கொடுத்தது. அங்கும் சென்று தனது வெற்றிக்கொடியை நாட்டிய அவர்; இன்னும் பல வருடங்களுக்கு முடிசூடா ராணியாக திரைத்துறையில் வலம் வருவார் என்று ஆரூடம் கூறினார்கள்.

குறைந்த வாய்ப்புகள்: ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை தமன்னாவுக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவர் பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கினார்.அங்கு கவர்ச்சியிலும் எல்லை தாண்டி சென்ற அவருக்கு மார்க்கெட் உருவானது. அதனை பயன்படுத்திக்கொண்ட அவர் தனக்கான ஒரு இடத்தை பிடித்துவிட்டார். பிறகு ஜெயிலர் படத்தில் காவாலா பாடலில் நடனமாடி தமிழில் மீண்டும் ட்ரெண்டானார்.
காதல் முறிவு: இதற்கிடையே நடிகர் விஜய் வர்மாவை காதலித்த தமன்னா விரைவில் அவரை திருமணம் செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்தக் காதல் பிரேக் அப்பில் முடிந்தது. அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அந்தக் காதல் பிரேக் அப்புக்கு பிறகு தமன்னா சிங்கிளாக இருக்கிறார். அதேசமயம் விஜய் வர்மா இன்னொருவரை காதலிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
பாலாஜி சக்திவேல் பேட்டி: இந்நிலையில் ஃபில்மிபீட் தமிழுக்கு இயக்குநர் பாலாஜி சக்திவேல் பிரத்யேக பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "தமன்னாவை நான் கல்லூரி படத்துக்காக புக் செய்தேன். ஆனால் அதற்கு முன்னதாகவே தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் இரண்டு மகன்களில் ஒருவர் கேடி படத்துக்கு புக் செய்துவிட்டார். அதனையடுத்து வியாபாரி படத்தில் நடித்தார். ஆனால் நான்தான் தமன்னவை கல்லூரி படத்தில் அறிமுகம் செய்ததாக சொல்கிறார்கள். அது முற்றிலும் தவறான ஒன்று" என்றார்.


Click it and Unblock the Notifications











