20 ஆண்டுகளை கடந்தும் நெகிழ்ந்த தாய் பாசக்காட்சி .. தளபதி படத்தை புகழ்ந்த பிரபல இயக்குனர்!
சென்னை : தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியடைந்த பல படங்கள் இன்றும் பேசப்பட்டு வருகிறது அதில் மிக முக்கியமான ஒரு படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தளபதி.
பல தமிழ் படங்களை கலாய்த்து யாரும் நினைக்காத புதிய கோணத்தில் படங்களை இயக்கி மக்களை மகிழ்வித்து வருபவர் இயக்குனர் சி எஸ் அமுதன்.
இயக்குனர் சி எஸ் அமுதன் தற்பொழுது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தளபதி திரைப்படத்தை பற்றி நெகிழ்ந்து ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த
தமிழ் சினிமா நூற்றாண்டை கடந்து தற்போது வெற்றிகரமாக பல படங்களை உலகத்தரத்தில் தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பயணத்தில் பல முக்கியமான திரைப்படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வரும் நிலையில் அதில் ரஜினிகாந்த் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.

சிறந்த இலக்கணமான
அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த தளபதி திரைப்படம் இன்றளவும் நட்பிற்கு சிறந்த இலக்கணமான படமாக இருந்து வருகிறது.

அனைத்து அம்சங்களையும்
1991 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் மம்முட்டி, அரவிந்தசாமி, ஜெய்சங்கர், ஷோபனா, ஸ்ரீவித்யா, பானுப்பிரியா உள்ளிட்ட பல பிரபலமான நடிகர்கள் நடித்திருந்த இந்த திரைப்படம் நட்பு, காதல், தாய்ப்பாசம் என அனைத்து அம்சங்களையும் கொண்டு வெளியானது.

மனதை பிழிந்து
மேலும் இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்த நிலையில் தளபதி படத்தில் உருவான அனைத்து பாடல்களும் இன்றளவும் மிகச் சிறந்த பாடல்களாக பேசப்பட்டு வருகிறது. மேலும் ரஜினிகாந்தின் காதல் காட்சிகளிலும், தாய் பாச காட்சிகளிலும் இளையராஜா தனது பின்னணி இசையால் பார்ப்பவர்கள் அனைவரின் மனதையும் பிழிந்து எடுத்திருப்பார்.

தளபதி படத்தைப்பற்றி
இவ்வாறு அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டு வெளியான இந்தப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை கடந்தும் பலரது விருப்பப் படமாக இருந்துவரும் நிலையில், தமிழில் மிர்சி சிவாவை வைத்து பல தமிழ் படங்களை கலாய்த்து "தமிழ் படம்" என்ற பெயரிலேயே இயக்கி பலரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் சி எஸ் அமுதன் தற்பொழுது தளபதி படத்தைப்பற்றி உருகி தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதி இருக்கிறார்.

கூட்டணி மாயாஜாலத்தில்
அதில் இவர் கூறியதாவது "இசைஞானி இளையராஜா மற்றும் மணிரத்னம் கூட்டணி மாயாஜாலத்தில் உருவான தளபதி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த பிறகும் ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீவித்யாவின் தாய்பாச காட்சியைப் பார்க்கும் போதெல்லாம் விளக்க முடியாத அதிசய காட்சியாகவே இன்றும் இருக்கிறது". இவ்வாறு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதில் ரஜினிகாந்த் ஸ்ரீவித்யா மடியில் படுத்து இருக்கும் தளபதி படத்தில் வரும் கண்கலங்க வைக்கும் காட்சியை பதிவிட்டு மிகவும் நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











